For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டெல்லியில் கூட முடியாது, ஆனால் துபாயில் தமிழிலிலும் டிரைவிங் லைசென்ஸ் தேர்வு எழுதலாம்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

துபாய்: துபாயில் ஓட்டுனர் உரிமத்திற்கான தேர்வில் தமிழ் உட்பட நான்கு இந்திய மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

துபாயில் டிரைவிங் லைசென்ஸ் பெற விரும்புவோர், முதலில் 30 நிமிடம் நடத்தப்படும் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம். இந்த தேர்வு கணினி மூலமாக நடத்தப்படும். இந்த தேர்வை, துபாயின் சாலை மற்றும் போக்குவரத்து கழகம் (ஆர்டிஏ) நடத்தி வருகிறது. இதனை, ஆங்கிலம், உருது, அரபி ஆகிய மூன்று மொழிகளில் மட்டுமே எழுத முடியும். இதனால், இந்தியாவை சேர்ந்த பலர், லைசென்ஸ் பெற வேண்டுமானால், பல முறை முயற்சி செய்ய வேண்டி இருந்தது.

Tamil, three Indian languages find place in Dubai driving tests

இந்த நிலையில், புதிதாக 7 மொழிகளை சேர்க்க ஆர்டிஏ முடிவு செய்துள்ளது. இதன்படி, வரும் செப்டம்பர் மாதம் முதல், தமிழ், ஹிந்தி, மலையாளம், பெங்காலி, சைனீஸ், ரஷியன், பெர்சியன் ஆகிய 7 மொழிகள் சேர்க்கப்படும். துபாய் அரசின் இந்த நடவடிக்கையால், மிக எளிதாக இந்தியர்கள் துபாய் டிரைவிங் லைசென்ஸ் பெற்று விடுவார்கள்.

துபாய் சாலை, போக்குவரத்து ஆணையத்தின், ஓட்டுனர் பயிற்சி மற்றும் தகுதி பிரிவின் இயக்குனர் ஆரிப் அல் - மலேக் இதுகுறித்து கூறியதாவது: வரும் செப்டம்பர் முதல் தமிழ், மலையாளம், இந்தி, வங்கம், சீனா, ரஷ்யா மற்றும் பெர்ஷிய மொழிகளிலும், தேர்வு நடத்தப்படும்.

இதனால் எட்டு விரிவுரை வகுப்புகள் மற்றும் எழுத்து தேர்வுகளுக்கு, மொத்தம் உள்ள, 11 மொழிகளில் ஒருவர் தனக்கு விருப்பமான மொழியை தேர்வு செய்து கொள்ளலாம்.திரையில் தெரியும் வாசகத்தின் ஒலி வடிவை ஒருவர் 'ஹெட்போன்' மூலம் கேட்கலாம். அவரால் அந்த வாசகத்தை படிக்க முடியாது போனாலும் ஒலி வடிவில் அதை புரிந்து கொண்டு சரியாக பதில் அளிக்க முடியும் என்றார்.

English summary
Four Indian languages including Hindi can be chosen while appearing for driving tests in Dubai in the UAE from September.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X