Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெளிநாடுகளில் மருத்துவம் படித்து..இந்தியாவில் பணியாற்ற தகுதி தேர்வு எழுதுவோர் 3 மடங்கு அதிகரிப்பு!

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: வெளிநாடுகளில் மருத்துவம் படித்து இந்தியாவில் டாக்டராக பணியாற்ற தேவையான தகுதி தேர்வு எழுதுவோர் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.

Recommended Video

    Ukraine-ல் ஏன் இந்தியர்கள் அதிகம் மருத்துவம் படிக்கிறார்கள் தெரியுமா?

    உக்ரைன் மீது ரஷ்ய போர் தொடுத்து வருகிறது. இங்குள்ள இந்திய மாணவர்களை ‛ஆபரேஷன் கங்கா' எனும் பெயரில் மத்திய அரசு விமானங்களில் மீட்டு வருகிறது. இதில் பெரும்பாலான இந்தியர்கள் அங்கு மருத்துவம் படிக்கின்றனர்.

    இந்தியாவை ஒப்பிடும்போது உக்ரைனில் மருத்துவ படிப்புக்கான செலவு குறைவு. நீட் தேர்வும் கிடையாது. இந்தியாவில் தனியார் கல்லூரிகளில் மருத்துவ படிப்பை படித்து முடிக்க ரூ.60 லட்சம் முதல் ரூ.1.1 கோடி வரை செலவாகிறது. உக்ரைனில் மருத்துவ படிப்பு பயில வெறும் ரூ.15 முதல் ரூ.16 லட்சம் மட்டுமே செலவாகிறது.

     தகுதி தேர்வு

    தகுதி தேர்வு

    உக்ரைன் உள்ளிட்ட வெளிநாடுகளில் மருத்துவம் படிக்கும் மாணவர்கள் இந்தியாவில் டாக்டராக வேண்டும் என்றால் தகுதித்தேர்வு எழுத வேண்டும். Foreign Medical Graduates Examination எனும் தகுதித்தேர்வில் அவர்கள் தேர்ச்சி அடைவது கட்டாயமாக உள்ளது. இந்த தேர்வு ஆண்டுக்கு 2 முறை தேசிய தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. ஒருவர் 3 முறை எழுத வேண்டும். இதில் கட்டாயம் தேர்ச்சி அடைவது அவசியமாகும்.

     3 மடங்கு உயர்வு

    3 மடங்கு உயர்வு

    இந்நிலையில் தான் foreign medical graduates examination எனும் தகுதி தேர்வு எழுதும் இந்தியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 5 ஆண்டில் 3 மடங்கு உயர்ந்து உள்ளது. தேசிய தேர்வு வாரியத்தின் கணக்குப்படி 2015ல் 12,116 பேர், 2016ல் 12,342 பேர், 2017 ல் 15,949 பேர், 2018 ல் 21,351 பேர், 2019 ல் 28,532 பேர், 2020ல் 35,774 பேர் இந்த தகுதி தேர்வு எழுதியுள்ளனர். இந்தியாவில் 2020ல் 30 ஆயிரம் மருத்துவ இடங்கள் அதிகரித்த போதிலும் 35,774 பேர் தகுதி தேர்வில் பங்கேற்று இருந்தனர்.

     எங்கு படித்தவர்கள் அதிகம்

    எங்கு படித்தவர்கள் அதிகம்

    இந்தியாவில் இந்த தேர்வு எழுதும் பெரும்பாலானவர்கள் சீனா, ரஷ்யா, உக்ரைன், கிர்கிஸ்தான், பிலிப்பைன்ஸ், கசகஸ்தான் நாடுகளில் மருத்துவம் படித்தவர்களாக உள்ளனர். 2020ல் நடந்த தகுதிதேர்வை பொறுத்தமட்டில் சீனாவில் படித்த 12,680 பேர், ரஷ்யாவில் பயின்ற 4,313 பேர், உக்ரைனில் படிப்பை முடித்த 4,258 பேர், கிர்கிஸ்தானில் பயின்ற 4,156 பேர், பிலிப்பைன்ஸில் படித்த 3,142 பேர், கசகஸ்தானில் பயின்ற 2,311 பேர் தேர்வு எழுதியுள்ளனர்.

     தேர்ச்சி விகிதம் எவ்வளவு

    தேர்ச்சி விகிதம் எவ்வளவு

    கடந்த 5 ஆண்டு நடந்த தேர்வுகளில் தேர்ச்சி சதவீதம் சராசரியாக 15.82 சதவீதமாக உள்ளது. உக்ரைனில் படித்தவர்களின் தேர்ச்சி விகிதம் 17.22 சதவீதமாக உள்ளது. மேலும் பிலிப்பைன்ஸில் மருத்துவம் படிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை 2015யை ஒப்பிடும்போது 10 மடங்கு அதிகரித்துள்ளது. இதுபற்றி தேசிய தேர்வு வாரியத்தில் பணியாற்றிய மூத்த டாக்டர் ஒருவர் கூறும்போது, ‛‛பிலிப்பைன்ஸில் மருத்துவம் படிக்கும் நபர்கள் இந்திய தகுதி தேர்வில் அதிகம் தேர்ச்சி அடைகிறார்கள். பிலிப்பைன்ஸில் மருத்துவம் படித்தவர்களின் தேர்ச்சி விகிதம் 2020ல் 33.7 சதவீதமாகவும், 2019ல் 50.2 சதவீதமாகவும் இருந்தது'' என்றார்.

     பிரச்சனைக்கு தீர்வு என்ன

    பிரச்சனைக்கு தீர்வு என்ன

    இதுபற்றி தேசிய மருத்துவ கமிஷனின் இளங்கலை மருத்துவக் கல்வி வாரிய தலைவர் அருணா வணிகர் கூறுகையில், ‛‛ரஷ்யா, சீனா, உக்ரைன் போன்ற நாடுகளில் படிக்கும் மாணவர்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இவர்களில் 20 சதவீதத்துக்கும் குறைவானர்கள் மட்டுமே இந்தியாவுக்கான தேர்வில் தேர்ச்சி பெறுகின்றனர். 2020 தேர்வில் சீனாவில் படித்த 13 சதவீதம் பேரும், உக்ரைனில் படித்தவர்களில் 16 சதவீதம் பேரும் மட்டுமே தேர்ச்சி அடைந்தனர். இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்றால் மத்திய, மாநில அரசுகள் கட்டண நிர்ணயம் செய்து வேண்டியது அவசியமாகும். இதன்மூலம் மனிதாபிமானத்துடன் தகுதியுடையவர்கள் படிக்க முடியும்'' என்றார்.

     83 ஆயிரத்துக்கு 16 லட்சம்

    83 ஆயிரத்துக்கு 16 லட்சம்

    மேலும் பிற நாட்டினரை விட இந்தியர்கள் தான் வெளிநாடுகளில் அதிகமாக மருத்துவம் படிக்கின்றனர். இதுபற்றி முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் சுஜாதா ராவ் கூறுகையில், ‛‛மக்கள் தொகை பெருக்கம், நோய்கள் அதிகரிப்பு ஆகியவை மருத்துவர்களுக்கான தேவையை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் முன்கூட்டிய திட்டமிடல் மூலம் மருத்துவ கொள்கைகள் விரிவடையவில்லை. இது எதிர்வினையாற்றுகிறது''என்றார். 2021ல் இளநிலை மருத்துவ படிப்புக்கான 83 ஆயிரம் இடங்களுக்கு இந்தியாவில் 16 லட்சத்துக்கும் அதிக மாணவர்கள் நீட் தேர்வில் போட்டியிட்டனர். இதில் ஒரு பங்கு இடங்கள் மட்டுமே அரசு கல்லூரிகளில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

     டாக்டர்கள் தேவை என்ன

    டாக்டர்கள் தேவை என்ன

    உலக சுகாதார நிறுவன கணக்குப்படி 1000 பேருக்கு ஒரு டாக்டர் இருக்க வேண்டும். அப்படி பார்த்தால் இந்தியாவில் 1.38 மில்லியன்(13 லட்சத்து 80 ஆயிரம்) டாக்டர்கள் தேவை உள்ளது. ஆனால் தேசிய சுகாதாரத்துறை புள்ளவிபரப்படி 1.2 மில்லியன்(12 லட்சம்) டாக்டர்கள் மட்டுமே இந்தியாவில் உள்ளது தெரியவந்துள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+