For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

15 நாளில் கட்டப்பட்ட 30 மாடிக்கட்டிடம்...: சீனக் கட்டிடத் தொழிலாளர்கள் சாதனை

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: 30 மாடிக்கட்டிடம் கட்ட எத்தனை நாள் ஆகும் என உங்களிடம் கேட்டால் குறைந்தது ஒரு வருடமாவது ஆகும் என்று தானே சொல்வீர்கள்.

இல்லையில்லை, பதினைந்தே நாளில் கட்டி முடித்து விடலாம் எனச் சொன்னால் நம்புவீர்களா..? அதெப்படிச் சாத்தியம் என்று தானே கூறுவீர்கள். ஆனால், அதையும் சாதித்துக் காட்டியிருக்கிறார்கள் சீனக் கட்டிடத் தொழிலாளர்கள்.

வழக்கமாக இவ்வளவு பெரிய கட்டிடம் கட்டுவதென்றால் அஸ்திவாரம் தோண்டவே பல மாதங்கள் ஆகும். ஆனால், பதினைந்தே நாளில் முழுக் கட்டிடத்தையும் கட்டி நம்மை வியப்பின் உச்சிக்கே அழைத்துப் போயிருக்கிறார்கள் சீனர்கள்.

15 நாளில் 30 மாடிக்கட்டிடம்...

15 நாளில் 30 மாடிக்கட்டிடம்...

ஹூனான் புரோவின்ஸ் என்ற கட்டுமான நிறுவனம் தான் இந்த 30 மாடிக் கட்டிடத்தை 15 நாளில் கட்டிக் கொடுத்துள்ளாது.

200 தொழிலாளார்கள்....

200 தொழிலாளார்கள்....

மொத்தம் 200 தொழிலாளர்கள் இந்தக் கட்டிடப் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.

தகுந்த முன்னேற்பாடுகள்...

தகுந்த முன்னேற்பாடுகள்...

கட்டிடம் கட்ட தேவையான அனைத்து பொருட்களையும் ஒட்டு மொத்தமாக திரட்டி வைத்து, ஆயத்தமாகியே இந்த சாதனைக்கு முக்கியக் காரணம் என தெரிவித்துள்ளனர் கட்டுமான நிறுவனத்தினர்.

தினமும் இரண்டு மாடி...

தினமும் இரண்டு மாடி...

ஒரு நாளைக்கு 2 மாடி வீதம் கட்டிட பணிகளை நடத்தி 15 நாளில் 30 மாடிக் கட்டிடத்தை கட்டி முடித்துள்ளனர்.

தாங்கும் திறன்....

தாங்கும் திறன்....

குறுகிய காலத்தில் கட்டப்பட்டிருந்தாலும், கட்டிடம் நல்ல தாங்கும் திறனுடன் இருப்பதாகச் சான்றளிக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நிலநடுக்கத்தை தாங்கும்....

நிலநடுக்கத்தை தாங்கும்....

இக்கட்டிடத்திற்கு 9 ரிக்டர் அள்வுகோலொல் நிலநடுக்கத்தையும் தாங்கும் சக்தி உள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஓட்டல்....

ஓட்டல்....

18 ஆயிரத்து 300 சதுர அடி கொண்ட இந்த கட்டிடத்தில் ஓட்டல் ஒன்று செயல் பட்டு வருகிறது.

அறிவியலின் உதவி....

அறிவியலின் உதவி....

அறிவியலின் துணை கொண்டு எதையும் சாதித்துக் காட்டலாம் என்பதற்கு இந்தக் கட்டிடமே ‘நிலைத்து நிற்கும்' சாட்சியாகும்.

English summary
They're a 21st century super power with super computers and a super economy that's the envy of the world. Now China can claim another title - the fastest builders on the planet after putting up a 30-storey 183,000-square-foot hotel in just 15 days, or 360 hours. A construction crew in the south-central Chinese city of Changsha completed this remarkable achievement with no injuries to any worker.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X