For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என்னா வெயிட்டு.. ஆளுக்கு ஒரு கை பிடியுங்க... ரூ. 23 லட்சத்திற்கு ஏலம் போன 180 கிலோ "டூனா"!

Google Oneindia Tamil News

டோக்கியோ: ஜப்பான் மீன் சந்தையில் அரிய வகை மீன் ஒன்று ரூ. 23 லட்சத்திற்கு ஏலம் போயுள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள சுகிஜி என்ற புகழ் பெற்ற மீன் சந்தையில் ஆண்டுதோறும் அரிய வகை மீன்கள் பல ஏலம் விடப்படுவது வழக்கம

அந்த வகையில், இந்தாண்டுக்கான ஏல நிகழ்ச்சி நடைபெற்றது.

புளூ பின் டூனா

புளூ பின் டூனா

வழக்கம் போல இந்தாண்டும் அரிய வகை மீன்கள் பல ஏலத்தில் விடப்பட்டன. அதில் புளூபின் டூனா என்ற அரிய வகை ஒன்று ரூ. 23 லட்சத்திற்கு ஏலம் போனது.

180 கிலோ எடை

180 கிலோ எடை

180 கிலோ எடையுடன் காணப்பட்ட அந்த மீனை டோக்கியோவில் ரெஸ்டாரண்ட் நடத்தி வரும் கியூசி கிமூரா என்ற கடைக்காரர் ஏலத்தில் எடுத்துள்ளார்.

6 மீனும் எனக்குத்தான்

6 மீனும் எனக்குத்தான்

இதையும் சேர்த்து மொத்தம் 6 டூனா வகை மீன்களை அவர் ஏலத்தில் எடுத்தார். தொடர்ந்து நான்காவது ஆண்டாக இவர்தான் அதிக தொகைக்கு ஏலம் எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

7 பேர் சேர்ந்து

7 பேர் சேர்ந்து

7 பேர் சேர்ந்து 180 கிலோ எடை கொண்ட புளூபின்டூனா மீனை தூக்கிச் சென்றதை மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.

ஆண்டின் முதல் ஏலம்

ஆண்டின் முதல் ஏலம்

டோக்கியோ மீன் சந்தையில் இந்த ஆண்டில் விடப்பட்ட முதல் ஏலம் இது என்பதால் கூட்டம் கட்டி ஏறிக் காணப்பட்டது.

English summary
A single bluefin tuna has sold for 4.5 million yen ($37,500) in annual celebratory bidding at the first auction of the year at Tokyo's famous fish market.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X