3 மாத ஸ்பேஸ் ஸ்டேஷன் ட்ரிப்.. கையில் பேனாவை சுற்றியபடி ஹாயாக திரும்பி வந்த சீன விஞ்ஞானிகள்.. வெற்றி!

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: விண்வெளிக்கு சீனாவின் ஸ்பேஸ் ஸ்டேஷன் கட்டுமானத்திற்காக சென்ற 3 ஆராய்ச்சியாளர்கள் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பி வந்துள்ளனர். 3 மாதமாக பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்ட இவர்கள் தற்போது பூமிக்கு திரும்பி உள்ளனர்.

விண்வெளியில் சீனா கட்டிவரும் ஆராய்ச்சி மையத்திற்கு சென்ற இவர்கள் அங்கு 3 மாதம் தங்கி புதிய ரெக்கார்ட் படைத்துள்ளனர். சீனாவில் எந்த ஒரு வீரரும் அந்த நாட்டின் சொந்த விண்வெளி ஆராய்ச்சிக்காக இப்படி 3 மாதம் ஸ்பேசில் தங்கி இருந்தது கிடையாது. முதல்முறையாக 3 மாதம் தங்கி இவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

இந்த சாதனைக்கு சொந்தக்காரர்கள் சீனாவின் விண்வெளி ஆராய்ச்சியாளர்களான நீ ஹாய்செங், லியு பூமிங், டாங் ஹோங்போ ஆகியோர். அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் கூட்டு முயற்சியாக ஏற்கனவே சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையம் இயங்கி வரும் நிலையில், சீனா தற்போது தனியாக டியாங்யாங் என்ற விண்வெளி ஆராய்ச்சி மையத்தை கட்டி வருகிறது.

ஆராய்ச்சியாளர்

ஆராய்ச்சியாளர்

பூமியில் இருந்து 425 கிமீ உயரத்தில் இந்த ஸ்பேஸ் ஸ்டேஷன் சுற்றிக்கொண்டு இருக்கிறது. இதன் நீளம் 20 மீட்டர் ஆகும். சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையம் இன்னும் சில மாதங்களில் காலாவதியாகிவிடும். சர்வதேச ஆராய்ச்சி மையம் மொத்தமாக 2024ல் ஓய்வு பெறும். ஆனால் 2031க்கு பின்பும் டியாங்யாங் வேலை செய்யும். இதனால் அப்போது சீனாவின் டியாங்யாங் ஆராய்ச்சி மையம் மட்டுமே மிகப்பெரிய ஆராய்ச்சி மையமாக இருக்கும்.

தடை

ஐஎஸ்எஸ் எனப்படும் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் நுழைய சீனாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், டியாங்யாங் என்ற தனி விண்வெளி ஆராய்ச்சி மையத்தை சுயமாக சீனா உருவாக்கிக் கொண்டு இருக்கிறது. கடந்த சில மாதங்களாக ஒவ்வொரு பாகமாக சீனா விண்ணுக்கு அனுப்பி இந்த ஸ்பேஸ் ஸ்டேஷனை உருவாக்கி வருகிறது. கடந்த ஏப்ரல் 29ம் தேதிதான் டியாங்யாங் ஆராய்ச்சி மையத்தின் கோர் மாடலை சீனா விண்ணிற்கு ஏவியது.

திரும்பி வந்தனர்

திரும்பி வந்தனர்

இதன் கட்டுமானத்தில் சீனா தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இதன் பொருட்டு கடந்த ஜூன் மாதம் Long March-2F ராக்கெட் மூலம் சீனா இந்த மூன்று பேரையும் விண்வெளிக்கு அனுப்பியது. விண்வெளியில் இவர்கள் இரண்டு முறை ஸ்பேஸ் வாக் செய்தனர். அங்கு கட்டுமான பணிகளை மேற்கொண்டனர். இந்த நிலையில் இவர்கள் நேற்று ஷென்ஷோவ் 12 கேப்ஸ்யூல் மூலம் பூமிக்கு திரும்பி வந்தனர். நேற்று இரவு 1 மணி அளவில் இந்த கேப்ஸ்யூல் ஸ்பேஸ் ஸ்டேஷனில் இருந்து கழன்று பூமிக்கு திரும்பி பாராசூட் உதவியுடன் தரையிறங்கியது.

Recommended Video

    Agni 5 Missile-ஐ இந்தியா சோதனை செய்யக்கூடாது - China | Oneindia Tamil
     எங்கே களமிறங்கினார்

    எங்கே களமிறங்கினார்

    மூன்று பேரும் சீனாவின் உட்பகுதியில் உள்ள மங்கோலியா சுயாட்சி பகுதியில் பாதுகாப்பாக களமிறங்கினார். கையில் பேனாவை சுற்றியபடி எந்த பிரச்சனையும் இல்லாமல் இவர்கள் கேப்ஸ்யூல் மூலம் பூமிக்கு வந்தது சீன தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டு மக்கள் வரவேற்பை பெற்றது. பூமிக்கு திரும்பிய இவர்கள் மூவரும் நல்ல உடல்நிலையில் இருக்கிறார்கள்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+