Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உக்ரைன்: தமிழர்கள் நாடு திரும்ப விரும்பினால் உதவி எண்கள்: 044-28515288, 96000 23645, 99402 56444

Subscribe to Oneindia Tamil

சென்னை: உக்ரைன் வாழ் தமிழர்கள் நாடு திரும்ப விரும்பினால் 044-28515288, 96000 23645, 99402 56444 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா திட்டமிட்ட ஆக்கிரமிப்புப் போரை தொடங்கி உள்ளது. உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தி வருகிறது.

ரஷ்யாவின் இந்த யுத்தத்தை அந்நாட்டு அதிபர் புதின் நியாயப்படுத்தி வருகிறார். இதனிடையே உலக நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யாவின் யுத்தத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றன.

TN govt announces helpline details for Tamilians living in Ukraine

உக்ரைன் வாழ் இந்தியர்களை மீட்க ஏற்கனவே மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. உக்ரைனில் இருந்து இந்தியர்களை விமானங்கள் மூலம் அழைத்து வருகிறது மத்திய அரசு.

இந்நிலையில் தமிழ்நாடு அரசும் உக்ரைனில் உள்ள தமிழர்களை பாதுகாப்பாக தாயகம் அழைத்து வரும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையரகம் தமது இணையதளத்திலும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது

அதில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்கள்:

(Tamilians living in Ukraine to Contact) உக்ரைனில் வாழும் தமிழர்கள் உதவிக்கு தொடர்பு கொள்ள

தொலைபேசி / Mobile No : 044-2851 5288
நிகரி / Fax : 044-2859 1135
மின்னஞ்சல் / Email Id : [email protected] / [email protected]
வலைதளம் / Website : https://nrtamils.tn.gov.in

Facebook : https://www.facebook.com/nrtchennai1038
Twitter : @tamiliansNRT
You Tube : Non Resident Tamils Channel

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+