நெருங்கும் அமெரிக்கா- சீனா! சீன அதிபர் ஷி ஜின்பிங்கை திடீரென புகழ்ந்து தள்ளும் டொனால்ட் ட்ரம்ப்!

Subscribe to Oneindia Tamil
பெய்ஜிங்கில் சீன அதிபர் ஷி ஜின்பிங்கை புகழ்ந்து தள்ளிய அதிபர் டிரம்ப்
Getty Images
பெய்ஜிங்கில் சீன அதிபர் ஷி ஜின்பிங்கை புகழ்ந்து தள்ளிய அதிபர் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீன அதிபர் ஷி ஜின்பிங்கை தாராளமாக புகழ்ந்து பேசியுள்ளார். இது வட கொரியாவின் சர்ச்சைக்குரிய பிரச்சனைகள் மற்றும் வர்த்தகம் மீதான சீனா குறித்த முந்தைய விமர்சனங்களுக்கு முரண்பட்டதாக உள்ளது.

அதேசமயம், அணு ஆயுத திட்டங்களை களைய வட கொரியாவை இணங்க வைக்கும் முயற்சிகளில் மிகவும் கடினமாக உழைக்குமாறு ஷி ஜின்பிங்கை டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

சீனாவின் தாராள வர்த்தகம் குறித்து டிரம்ப் தெரிவித்த கருத்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.

இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக உறவில் கூடுதல் பலன்களைப் பயன்படுத்திக் கொண்டதற்காக சீனாவை நான் குறைகூறவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

  • சீனாவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் தலைநகர் பெய்ஜிங்கில் இவ்வாறு பேசினார்.

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு சீனாவில் பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டதையடுத்து இன்று (வியாழக்கிழமை) காலை இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

    மேலும், டிரம்பின் பயணத்தின்போது, சுமார் 250 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள வர்த்தக ஒப்பந்தங்களையும் இரு தலைவர்களும் அறிவித்தார்கள்.

    எனினும், இந்த 250 பில்லியன் டாலர்களில், எவ்வளவு தொகை முந்தைய திட்டங்களிலிருந்து மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது என்பதோ அல்லது எதிர்காலத்தில் அமையவிருக்கும் சாத்தியமான ஒப்பந்தங்களுக்கான தொகையா என்பது தெளிவாக தெரியவில்லை.

    பிற செய்திகள்:

    'ஏமனில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய பஞ்சம் ஏற்படலாம்'

    இருமடங்கானது ட்விட்டரின் எழுத்து வரம்பு... பயனர்களின் பயன்பாட்டு முறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா?

    பணமதிப்பிழப்பு: 'மாபெரும் பொருளாதார கொள்கைப் பேரழிவு'

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+