For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லிபியாவில் பயங்கரம்.. மசூதி முன்பு இரட்டை குண்டுவெடிப்பு.. 22 பேர் பலி

லிபியா நாட்டில் உள்ள பென்காசி நகரில் உள்ள மசூதி முன் நிகழ்த்தப்பட்ட இரட்டை வெடிகுண்டு தாக்குதலில் தொழுகை நடத்த வந்த 22 பேர் கொல்லப்பட்டனர்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Recommended Video

    லிபியா மசூதி முன்பு இரட்டை குண்டுவெடிப்பு..சம்பவ இடத்திலேயே 22 பேர் கொல்லப்பட்டனர்

    பெங்காசி, லிபியா: லிபியாவின் பெங்காசி நகரில் மசூதி முன்பு நிகழ்ந்த இரண்டு கார் வெடிகுண்டு தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    அல்சல்மானி மாவட்டத்தில் உள்ள மசூதியில் செவ்வாய்கிழமையன்று தொழுகை நடத்தி விட்டு வெளியே வந்துள்ளனர். அப்போது மசூதி முன்பாக நின்று கொண்டிருந்த கார் ஒன்று வெடித்துச் சிதறியது. இதில் சம்பவ இடத்திலேயே 22 பேர் கொல்லப்பட்டனர்.

    Twin bombings kill 22 in Libya

    அடுத்த 30 நிமிடங்களில் மற்றொரு காரும் வெடித்து சிதறியது. இந்த குண்டு வெடிப்பில் அப்பாவி பொதுமக்களும் ராணுவத்தினரும் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ஆப்பிரிக்க நாடான துனிசியா, எகிப்தில் மக்கள் புரட்சி மூலம் அந்த நாட்டு அதிபர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். இதே புரட்சி பக்கத்து நாடான லிபியாவிலும் ஏற்பட்டது. 41 ஆண்டுகளாக தொடர்ந்து பதவியில் இருந்த கடாபிக்கு எதிராக மக்கள் திரண்டனர். ஆனால் மக்கள் புரட்சிக்கு அடிபணியாத கடாபி அவர்கள் மீது அடக்கு முறைகளை கையாண்டார். போராட்டக்காரர்கள் மீது ராணுவ தாக்குதல்கள் நடத்தப்பட்டன. புரட்சி படையினர் 4 நகரங்களை கைப்பற்றி இருந்தனர். கடந்த 2011 ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்து அகற்றப்பட்ட கடாபி கொல்லப்பட்டார்.

    அதன்பின்னர் ஏற்பட்ட அரசில் குழப்பம் ஏற்பட்டது. தீவிரவாத குழுக்களுக்கும், அரசு படைகளுக்கும் இடையே தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.

    கடந்த பல ஆண்டுகளாகவே லிபியாவில் குண்டு வெடிப்புகள் நிகழ்த்தப்படுகின்றன. கடந்த 2014ல் உள்நாட்டு போரால் உருக்குலைந்த லிபியாவில் சில பகுதிகள் ஐஎஸ் தீவிரவாதிகள் வசம் வந்தது. ஐஎஸ் தீவிரவாதிகள் வசம் உள்ள பகுதிகளை கைப்பற்ற ஆள்பவர்கள் போரடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    At least 22 persons were killed in a double bomb attack in the Libyan city of Benghazi on Tuesday. The attack took place at Benghazi’s Al Salmani district just as worshippers were leaving a Mosque after prayers.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X