ஆந்த்ராக்ஸ்! பிளேக்! முகர்ந்து பார்த்தாலே கொல்லும் செரின் கேஸ்! ரஷ்ய-உக்ரைன் போரில் பகீர் ஆயுதங்கள்?
மாஸ்கோ: உக்ரைன் - ரஷ்ய போரில் கெமிக்கல் ஆயுதங்கள், பயோ ஆயுதங்கள் பயன்படுத்தப்படலாம் என்று புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இரண்டு நாடுகளும் மாறி மாறி புகார்களை வைத்துக்கொண்டு இருக்கின்றன.
உக்ரைன் ரஷ்யா போர் தீவிரம் அடைந்துள்ளது. உக்ரைன் தலைநகர் கீவை ரஷ்ய படைகள் நெருங்கி உள்ளது. தலைநகரை சுற்றி உக்ரைன் படைகள் வளைத்துள்ளது.
தலைநகர் கீவிற்கு வெளியேற சுமார் 60 கிலோ மீட்டர் தூரத்திற்கு பீரங்கிகள் நிறுத்தி வைக்கப்பட்டு தாக்குதல் நடத்த தயாராக உள்ளது. இன்னொரு பக்கம் சுமி நகரத்திலும் ரஷ்ய படைகள் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

ரஷ்யா புகார்
இந்த நிலையில்தான் ரஷ்ய எல்லையில் இருக்கும் உக்ரைன் பகுதிகளில் அமெரிக்கா ஆதரவுடன் பயோ ஆயுதங்கள் தயாரிக்கப்படுவதாக ரஷ்யா தொடர்ந்து புகார் வைத்து வருகிறது. இது தொடர்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா புகார் கொடுத்து கடந்த வெள்ளிக்கிழமை இது தொடர்பாக ஆலோசனையும் நடத்தப்பட்டது. உக்ரைனில் மறைமுகமாக பரவ கூடிய, வேகமாக பரவ கூடிய, பல மரணங்களை ஏற்படுத்த கூடிய வைரஸ்கள் பற்றி அமெரிக்கா ஆராய்ச்சி செய்து வருகிறது என்றும் ரஷ்யா இந்த மீட்டிங்கில் புகார் அளித்துள்ளது.

30 மையங்கள்
உக்ரைனில் 30 இடங்களில் ஆய்வகங்கள் மூலம் கொடூரமான ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு பயங்கர நோய்களை பரப்பும் வைரஸ்கள் உள்ளன. ஆந்த்ராக்ஸ், கொரோனா, பிளேக் போன்ற வைரஸ்களை வைத்து இங்கு ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. நாங்கள் உக்ரைனில் பிடித்த இடங்களில் பயோ ஆயுதங்கள் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது என்று ரஷ்யா தனது புகாரில் கூறி உள்ளது.

உண்மை என்ன என்ற குழப்பம்?
ஆனால் இங்கு பயோ ஆயுதங்கள் தயாரிப்பதை அமெரிக்கா - உக்ரைன் மறுத்து வருகிறது. ஆனால் இங்கே பயோ ஆய்வுக்கூடங்கள் இருப்பதாக அமெரிக்கா ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது. அதோடு இன்னொரு பக்கம் உக்ரைனில் இருக்கும் மோசமான கிருமிகள், வைரஸ்கள் போரின் போது லீக்காகும் வாய்ப்புகள் உள்ளதாக உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அங்கு இருக்கும் பயோ ஆய்வுக்கூடங்களில் ரஷ்யா தாக்குதல் நடத்த கூடாது என்று உலக சுகாதார மையம் கோரிக்கை விடுத்துள்ளது.

ரஷ்யா புகார்
இன்னொரு பக்கம் உக்ரைன் மீது ரஷ்யா கெமிக்கல் அட்டாக் நடத்த வாய்ப்புகள் இருப்பதாக அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. ஆம் பயோ ஆயுதங்கள் அச்சம் ஒரு பக்கம் இருக்கும் போது இன்னொரு பக்கம் கெமிக்கல் ஆயுத அச்சம் எழுந்துள்ளது. ரஷ்யா பாரம்பரியமான ஆயுதங்களுக்கு பதிலாக வேறு ஆயுதங்களை பயன்படுத்தும் அபாயம் உள்ளது. அதாவது துப்பாக்கிகள், குண்டுகளுக்கு பதிலாக கெமிக்கல் வெப்பன்களை அந்த நாடு பயன்படுத்தும் அபாயம் உள்ளது. சிரியாவில் ரஷ்யாவின் கூட்டாளிகள் மூலம் கெமிக்கல் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதை மறக்க வேண்டாம்.

கெமிக்கல்
அங்கு கெமிக்கல் ஆயுதங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டது. இதற்காக நாம் கவனமாக இருக்க வேண்டும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பிபிசி ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் ரஷ்யாவிடம் பல்வேறு கொடூரமான கெமிக்கல் ஆயுதங்கள் இருப்பதாக தெரிவித்து உள்ளது. அதன்படி, மூச்சை திணற அடிக்கும் phosgene என்று கெமிக்கல்களை ரஷ்யா பயன்படுத்தும் வாய்ப்புகள் உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரஷ்யா எச்சரிக்கை
இந்த phosgene கெமிக்கல்கள் சுவாசத்தை பாதித்து, இருதயத்தில் தாக்குதல் நடத்தும் என்று கூறியுள்ளது. அதேபோல் தோல்களில் காயங்களை ஏற்படுத்தும், கண் பார்வையை குருடாக்கும் blister agents வகை கெமிக்கல் ரஷ்யாவிடம் உள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேபோல் இதைவிட கடுமையான ஆயுதங்களும் ரஸ்யாவிடம் உள்ளது. மூளையில் இருந்து உடல் உறுப்புகளுக்கு செல்லும் மெசேஜ்களை தடுக்கும் nerve agents ரஷ்யா வசம் உள்ளது.

செரின் கேஸ்
VX nerve agent போன்ற கேஸ்களில் வெறும் 0.5 மில்லி கிராம் இருந்தாலே அது உடனடியாக மனிதர்களை கொல்லும். ரஷ்யாவிடம் இந்த ஆயுதங்கள் உள்ளன. அதேபோல் முகர்ந்து உடலை ஊனமாக்கும், உயிரை கொல்லும் செரின் வகை கேஸ்களும் ரஷ்யாவிடம் உள்ளதாக பிபிசி ஊடகம் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது. இந்த ஆயுதங்களை ராக்கெட்டுகள், குண்டுகள் மூலம் ஏவும் திறன் ரஷ்யாவிடம் இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் ரஷ்யா - உக்ரைன் போரில் மோசமான ஆயுதங்கள் வரும் நாட்களில் களமிறக்கப்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
-
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க












Click it and Unblock the Notifications