“எங்களுக்கு ஜனநாயகம் வேண்டும்”.. களமிறங்கும் பல்கலைக்கழக மாணவர்கள்! சீனாவில் வெடிக்கும் போராட்டம்
பெய்ஜிங்: சீனாவில் கொரோனா தொற்று கட்டுப்பாடுகளுக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியிலும் ஆதரவை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொற்று பாதிப்பு தீவிரமடைந்த நிலையில், பாதிப்புகளை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு மீண்டும் கட்டுப்பாடுகளை அறிவித்தது.
இந்நிலையில் இதனை எதிர்த்து சில இடங்களில் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். தற்போது இந்த போராட்டத்திற்கு ஆதரவாக அந்நாட்டின் 50 பல்கலைக்கழக மாணவர்கள் ஆதரவு தெரிவித்தள்ளதாக தகவல் வெளியாகியுள்ளனர். இதன் மூலம் இந்த போராட்டங்களில் இனி மாணவர்களும் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா
சீனாவில் நேற்று மட்டும் கொரோனா தொற்றுக்கு புதியதாக 39,500 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருவதால் அந்நாட்டு அரசு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. அதன்படி, ஓட்டல்களை தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டிருக்கும். பள்ளி கல்லூரிகளுக்கு நாடு முழுவதும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளில் பாடங்கள் நடத்தப்படும். புதிய பாதிப்புகள் கண்டறியப்படும் வரை இந்த கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும். அதேபோல விமான போக்குவரத்தில் எந்த மாற்றமும் அறிவிக்கப்படவில்லை.

கட்டுப்பாடுகள்
வழக்கம்போல பயணத்திற்கு 48 மணி நேரத்திற்கு முன்னர் கொரோனா பரிசோதனை செய்திருந்தால் போதுமானது. வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்வோர் இனி 10 நாட்கள் இருக்க வேண்டியதில் 3 நாட்கள் இருந்தாலே போதுமானது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகளால் சலிப்படைந்த மக்கள் தற்போது வீதியில் இறங்கி போராட்டங்களை நடத்தியுள்ளனர். இதற்கு 50 பல்கலைக்கழக மாணவர்கள் ஆதரவளித்துள்ளதாகவும், இனி மாணவர்கள் போராட்டங்களை கொண்டு செல்வார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக மாணவர்கள் சிலர் வீடியோக்களையும் பகிர்ந்துள்ளனர்.

போராட்டம்
சிங்குவா பல்கலைக்கழகத்தில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று ஒன்றுகூடி, "எங்களுக்கு ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி மற்றும் கருத்து சுதந்திரம் தேவை" என்று கோரிக்கைகளை எழுப்பியுள்ளனர். ஏற்கெனவே முன்னதாக சிச்சுவான் பல்கலைக்கழகம், நான்ஜிங் கம்யூனிகேஷன்ஸ் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றுகூடி சுற்றுச்சூழல் மாசு தொடர்பாக ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வந்துள்ளனர். இனி இவர்கள் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டத்தை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 1989ம் ஆண்டிலிருந்து இப்படியான போராட்டங்களை நாங்கள் பார்த்ததில்லை என்று அந்நாட்டு ஊடகவியலாளர்கள் கூறியுள்ளனர்.

காரணம்
இவ்வாறு ஒருபுறம் போராட்டங்கள் தீவிரமடைந்துகொண்டிருந்தாலும் மறுபுறத்தில், கட்டுப்பாடுகளை கைவிட அரசு மறுப்பு தெரிவித்து வருகிறது. அரசின் அதிகாரப்பூர்வ செய்தி ஊடகமான 'பீப்பிள்ஸ் டெய்லி' இதழில், அரசு கொரோனா தொற்றை முழுமையாக அகற்றும் வரை ஓயாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சீனாவின் சுகாதாரத்துறை வல்லுநர்கள் கூறுகையில், "தற்போது நாடு முழுவதும் உள்ள 80 வயதிற்கு மேற்பட்டவர்களில் 40% சதவிகிதம் பேர் மட்டுமே மூன்று டோஸ் தடுப்பூசியை செலுத்திக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தற்போது பரவி வரும் கொரோனா தொற்றுக்கு எதிராக கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லையெனில், லட்சக்கணக்கில் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும்" என்று எச்சரித்துள்ளனர்.

உதவி
அதேபோல, "இந்த கட்டுப்பாடுகளால் மாணவர்கள், சிறு குறு வியாபாரிகள் என பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டிருப்பது எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் உயிரை விட இங்கு பெரியது என எதுவும் கிடையாது. எனவே இந்த கட்டுப்பாடுகள் தவிர்க்க முடியாதவை" என அரசு ஆதரவாளர்கள் கூறியுள்ளனர். தற்போது போராட்டத்தில் குதித்துள்ள மாணவர்கள் சிலர், இந்த ஊரடங்கு காலத்தில் இழப்புகளை சரி ஈடு செய்ய அரசு பண உதவி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications