இந்திய-ரஷ்ய உறவால் அச்சமடைந்துள்ள அமெரிக்கா, சீனாவுடன் நெருங்குகிறது

இதுகுறித்து அமெரிக்காவின் பாதுகாப்பு துணை ஆலோசகர் பென் ரோடஸ் பத்திரிகையாளர்களிடம், இதுகுறித்து கூறுகையில், "அமெரிக்காவும், சீனாவும் பல விஷங்களில் வேற்றுமை பாராட்டி வருவதுடன் அதை வெளிப்படையாக பகிரங்கப்படுத்தியுள்ளது. இருப்பினும் இரு நாடுகளும் ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டிய துறைகளை அடையாளம் காண வேண்டும். ஒரு விஷயத்தில் பிரச்சினை இருந்தால் எந்த ஒரு விவகாரத்திலும் ஒத்துப்போகாது என்று அர்த்தம் கிடையாது. சைபர் பாதுகாப்பு, கடல்சார் எல்லை பிரச்சினை உள்ளிட்டவற்றில் அமெரிக்கா-சீனா நடுவே கருத்து வேறுபாடு இருந்தாலும், ஈரான் அணு ஆயுத விவகாரம், பொருளாதார ஒத்துழைப்பு போன்றவற்றில் ஒற்றுமையுடன் உள்ளது என்பதை மறுக்க முடியாது". இவ்வாறு பத்திரிகையாளர்களிடம் அமெரிக்க அதிகாரி தெரிவித்துள்ளார்.
மோடி தலைமையிலான மத்திய அரசு ரஷ்யாவுடன் நெருக்கம் காட்டுவதுடன், தெற்காசிய பிராந்தியத்தில் தலைமை நாடாக தன்னை முன்னிறுத்தி காண்பிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆசியாவில் தன்னுடைய பிடி விலகுவதால் சீனாவை நாடி அமெரிக்கா செல்வதாக சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.