ஆப்கனைவிட்டு வெளியேறியது அமெரிக்கா: வெளியேறிய கடைசி வீரர் யார்? இறுதி நிமிடங்களில் என்ன நடந்தது ?
காபூல்: 20 ஆண்டுகளுக்குப்பின் அமெரிக்கா ஆப்கனைவிட்டு வெளியேறி உள்ளது. அங்கு தங்கியிருந்த அமெரிக்காவின் கடைசி ராணுவ வீரர் மேஜர் ஜெனரல் கிறிஸ் டோனாஹூ இன்று அதிகாலை 12 மணிக்கு முன் வெளியேறினார். இதை தாலிபான்கள் கொண்டாடி வருகிறார்கள். இப்போது தான் முழுமையான சுதந்திரம் கிடைத்துள்ளதாக அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Recommended Video
கடந்த அமெரிக்க துருப்புக்கள் திரும்பப் பெறப்பட்டதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை விடிவதற்கு முன்பே தலிபான்கள் விமான நிலையத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
காபூல் முழுவதும் துப்பாக்கியால் சுட்டு கொண்டாடினர். தாலிபான்கள் 2001 ல் இருந்ததை விட வலுவாக மாறி. 20 வருடப் போரை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளனர்.

கடைசி வீரர்
தலிபான்களால் வெளியிடப்பட்ட அதிர்ச்சியூட்டும் காட்சிகள் நிறைந்த வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் அமெரிக்கா மற்றும் அதன் நேட்டோ கூட்டாளிகளுக்கான அவசர மற்றும் அவமானகரமான வெளியேற்றத்தின் முடிவைக் குறிக்கும் வகையில், கடைசி அமெரிக்க துருப்புக்கள் நள்ளிரவுக்கு ஒரு நிமிடத்திற்கு முன்பே புறப்படும் காட்சிகள் மற்றும் தாலிபன்கள் விமான நிலையத்திற்குள் நுழைவது போன்ற காட்சிகள் உள்ளன.

சுதந்திரம்
"கடைசி அமெரிக்க சிப்பாய் காபூல் விமான நிலையத்தை விட்டு வெளியேறினார், நம் நாடு முழு சுதந்திரம் பெற்றது" என்று தலிபான் செய்தித் தொடர்பாளர் காரி யூசுப் அல் ஜசீரா டிவியில் கூறினார், காபூலில் இருந்து அமெரிக்காவின் கடைசி சிப்பாய் உடன் வெளியேறும் விமானத்தின் காட்சிகளை அமெரிக்க இராணுவம் வெளியிட்டுள்ளது.

இறப்பு எவ்வளவு
அமெரிக்காவின் மிக நீண்ட யுத்தம் காரணமாக கிட்டத்தட்ட 2,500 அமெரிக்க துருப்புக்கள் மற்றும் 240,000 ஆப்கானியர்கள் கொல்லப்பட்டனர். சுமார் $ 2 டிரில்லியன் செலவாகி உள்ளது. 2001 ல் தலிபான்களை அதிகாரத்தில் இருந்து விரட்டுவதிலும், அல் கொய்தாவை விரட்டுவதிலும் ஆப்கானிஸ்தானில் போர் நடத்திய அமெரிக்கா, தற்போது அல்கொய்தா தீவிரவாதிகளை அழித்ததுடன் தங்கள் கடமை முடிந்துவிட்டதாக கருதி தாலிபன்களிடமே நாட்டை விட்டு விட்டு வெளியேறி உள்ளது.

கைவிட்டது
இதன் மூலம், 1996 முதல் 2001 வரை இருந்ததை விட இப்போது ஆப்கானிஸ்தானில் வலுவாக தாலிபன்கள் மாறி உள்ளனர் என்பது உறுதியாகி உள்ளது. இதில் சோகமான விஷயம் என்னவென்றால் அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறிவிட்ட நிலையில் அங்கு அமெரிக்கர்களுக்கு உதவியவர்களை, அம்போ என விட்டுவிட்டு அமெரிக்கா சென்றுவிட்டது. அவர்கள் நாட்டை விட்டு இனி வெளியேற முடியாது. அவர்கள் தங்களுக்கு என்ன நடக்கும் என்ற அச்சதுடன் வாழ்கிறார்கள்.
-
நெதன்யாகுவை திட்டியது உண்மைதான்.. லெபனான் விவகாரத்தில் நடந்தது என்ன? ஓபனாக பேசிய டிரம்ப்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications