வட கொரியாவின் ஏவுகணை சோதனை தோல்வி... அமெரிக்க ராணுவம் தகவல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்(யு.எஸ்): வடக்கு கொரியாவின் ஏவுகணை சோதனை அனுப்பிய உடனடியாக தோல்வி அடைந்து விட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

ஜப்பானிலிருந்து 400 மைல் தொலைவிலுள்ள சின்போ தளத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை காலை இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது இது குறித்து ஃப்ளோரிடா பால்ம் பீச்சில் தங்கியிருக்கும் அதிபர் ட்ரம்புக்கு தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது.

US Military claims North Korea missile test failed

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைக்கான சோதனை என்ற கருத்து முன்பு உலவியது. அது தவறான கருத்து என்றும் அமெரிக்க ராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த சோதனை வெற்றி பெற்றிருந்தாலும் அமெரிக்காவை தாக்கும் அளவுக்கு அபாயம் இருந்ததில்லை என்று அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.

US Military claims North Korea missile test failed

கொரியா ராணுவ நெட்வொர்க் என்ற சமூகக்குழுவின் தலைவர் ஷின் இன் க்யூன் என்.பி.சி தொலைக்காட்சிக்கு இது குறித்து பேட்டி அளித்துள்ளார்.

இந்த ஏவுகணை அமெரிக்காவின் க்வாம் மற்றும் அலாஸ்கா வரை பாயக்கூடிய நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவக்கூடிய ரகம் என்று தெரித்துள்ளார்.

அமெரிக்க ராணுவ அறிக்கையில் ,பசிபிக் கடலில் களம் கொண்டிருக்கும் அமெரிக்க ராணுவம், தென் கொரியா மற்றும் ஜப்பானுடன் நெருக்கமான தொடர்புடன் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.

US Military claims North Korea missile test failed

பசிபிக் பகுதியில் பாதுகாப்பையும் அமைதியையும் நிலை நாட்ட உறுதி பூண்டிருக்கிறோம் என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

இந் நிலையில் அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் ஆசிய நாடுகளுக்கு பத்து நாட்கள் பயணமாக தற்போது தென் கொரியாவுக்கு வந்துள்ளார். அவரது பயணத்திட்டத்தில் மாறுதல்கள் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக சனிக்கிழமை, வடக்கு கொரியாவின் தந்தையாக கொண்டாடப்படும் இரண்டாம் கிம் சங்கின் பிறந்த நாளை முன்னிட்டு ராணுவ பேரணி நடைபெற்றது.

US Military claims North Korea missile test failed

அதைத் தொடர்ந்து சனிக்கிழமை நடத்தப்பட்ட ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்துள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

- இர தினகர்

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
US Pacific military command claims North Korea’s missile test on Sunday failed. It also further mentioned it is not inter-continental range missile. Civic group Korea Defense Network president Shin In Kyun told NBC news that this is Submarine launch ballistic missile is capable of attacking Guam and Hawaii and Alaska, the US states and territories
Please Wait while comments are loading...