For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புதிய கருத்துக் கணிப்பு: ஒஹாயோ, ஃப்ளோரிடா மாநிலங்களில் ஹிலரியை முந்துகிறார் ட்ரம்ப்!

By Shankar
Google Oneindia Tamil News

வாஷிங்டன்(யு.எஸ்): சின் என் என் / ஓ ஆர் சி யின் புதிய கருத்துக் கணிப்பில் முக்கிய மாநிலங்களான ஒஹாயோ, ஃப்ளோரிடாவில் டொனால்ட் ட்ரம்ப் முன்னிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒஹாயோவில் ட்ரம்புக்கு 46 சதவீத ஆதரவும், ஹிலரிக்கு 41 சதவீதமும் ஆதரவு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃப்ளோரிடாவில் ட்ரம்ப் 47 சதவீதம், ஹிலரி 44 சதவீதம் என்று இந்த கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

US presidential elections: Advantage Trump

ஃப்ளோரிடாவில் 1003 பேரிடம் சர்வே எடுக்கப்பட்டுள்ளது. அவர்களில் 788 பேர் வாக்களிக்கக் கூடியவர்கள் என்றும் அந்த கருத்துக் கணிப்பு கூறுகிறது.1006 பேரிடம்

ஒஹாயோவில் கருத்துக் கேட்கப்பட்டதில், 769 பேர் மட்டுமே வாக்களிக்கக் கூடியவர்கள் என்றும் கருதப்படுகிறது.

செப்டம்பர் 7 முதல் 12 வரை இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. செப்டம்பர் 11ம் தேதி, ஹிலரிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதும், அது குறித்து அவர் தரப்பில் சரியான விளக்கம் கொடுக்கப்படாமலும் இருந்தது.

அதிபர் வேட்பாளரின் மருத்துவ அறிக்கை வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பது வாக்காளர்களின் எதிர்ப்பார்ப்பாகும். ஹிலரியின் உடல் நலக்குறைவு பல சந்தேகங்களையும், அவரின் வெளிப்படைத் தன்மையும் கேள்விக்குறியாக்கியது.

நேற்று தனது மருத்துவர் மூலம் நீண்ட மருத்துவ அறிக்கையை வெளியிட்டுள்ளார் ஹிலரி.

நிமோனியா தவிர வேறு எந்த பிரச்சனை இல்லை என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஒஹாயோவும் ஃப்ளோரிடாவும் மிகவும் முக்கியமான மாநிலங்களாகும். கடந்த 50 ஆண்டுகளில் ஒஹாயோவில் வெற்றி பெறாமல் அதிபர் ஆனவர்கள் யாரும் கிடையாது. என் பி சியின் தேர்தல் முடிவுகள் பற்றிய கணிப்பில், ஒஹாயோ, ஃப்ளோரிடா இல்லாமலே ஹிலரி அதிபர் ஆவார் எனத் தெரிவிக்கிறது.

முதல் பெண் அதிபர் என்ற சாதனையுடன், ஒஹாயோ இல்லாமலே அதிபர் ஆனவர் என்ற புகழையும் பெறுவாரா ஹிலரி? அல்லது சத்தமில்லாமல் முன்னேறி அதிபர் நாற்காலியில் அமருவாரா ட்ரம்ப்?

ஒரு தலைப்பட்சமாக இருந்த தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. அதைத் தானே அமெரிக்க மீடியாக்கள் விரும்புகின்றன..போட்டி பலமாக இருந்தால் தானே மீடியாக்கள் கல்லா கட்ட முடியும்..?

ஆயிரம் பேரிடம் மட்டும் நடத்தப்பட்டுள்ள ஓஹாயோ, ஃப்ளோரிடா கருத்துக்கணிப்பில் மீடியா சூட்சமம் இருந்தாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.

-இர தினகர்

English summary
CNN/ORC's new survey, conducted during a stretch of bad headlines for Hillary Clinton, show slight surge to Trump in key states Ohio and Florida
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X