Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திடீர் ட்விஸ்ட்.. சீனாவிடம் ராணுவ உதவி கேட்கும் ரஷ்யா.. அமெரிக்கா பரபரப்பு தகவல்!

Subscribe to Oneindia Tamil

கீவ்: உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில் அதன் அதிபர் விளாடிமிர் புடின் ஏராளமான பின்னடைவுகளை சந்தித்து வருவதால் அவர் சீனா ராணுவத்தின் உதவியே கேட்டுள்ளதாக அமெரிக்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Recommended Video

    வேற வழி இல்லை.. China-விடம் உதவி கேட்ட Vladimir Putin.. America சொன்ன தகவல்

    உக்ரைன் மீது ரஷ்யா கடந்த இரு வாரங்களுக்கு மேலாக போர் தொடுத்து வருகிறது. இதனால் ரஷ்யா மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் தடைகளை விதித்துள்ளன.

    ரஷ்யா அவ்வப்போது சில நகரங்கள் மீது தற்காலிக போர் நிறுத்தங்களை அறிவித்து வருகிறது. எனினும் உக்ரைன் தலைநகர் கீவ்வை ரஷ்ய படைகள் வளைத்துள்ளது. மொத்தமாக எங்களை கொன்றால் மட்டுமே கீவ் நகரை பிடிக்க முடியும்.

    கனவு

    கனவு

    அதுவரை கீவ் உங்கள் கட்டுக்குள் வரும் என நீங்கள் கனவு காண வேண்டாம் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த நிலையில் பேஸ்புக், நெட்பிளிக்ஸ், பிராட்பேண்ட் சேவை உள்ளிட்டவைகளால் ரஷ்யாவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

    ரஷ்யா

    ரஷ்யா

    இந்த நிலையில் ரஷ்யா, ராணுவ உதவிக்காக சீனாவிடம் இருந்து ராணுவ உபகரணங்கள் மற்றும் உதவிகளை முதல்முறையாக நாடியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த நிலையில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் திங்கள்கிழமையன்று ரோம் சென்று சீனாவின் உயர்மட்ட தூதரக அதிகாரி யாங் ஜீச்சியை சந்திப்பார் என்று வெள்ளை மாளிகை நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சீனா ரஷ்யா

    சீனா ரஷ்யா

    சக்தி வாய்ந்த ராணுவத்தை வைத்துள்ள சீனாவிடம் ரஷ்யா முதல்முறையாக உதவி கேட்டுள்ளது. ஆனால் எந்த விதமான உபகரணங்களை ரஷ்யா கேட்டது என்பது குறித்து தகவல் ஏதும் தெரியவில்லை. அது போல் இந்த தகவல்கள் எப்படி அமெரிக்க அதிகாரிகளுக்கு தெரியும் என்பது குறித்தும் தெரியவில்லை.

    புதிதல்ல

    புதிதல்ல

    இதுகுறித்து அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறுகையில் சீனாவிடம் ராணுவ உதவி கோருவது புதிதல்ல. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க தொடங்கிய பிப்ரவரி 24 ஆம் தேதிக்கு பிறகு கோரியது என தெரிவித்துள்ளார். ஆனால் இதுகுறித்து பதில் அளிக்க வெள்ளை மாளிகை மறுத்துவிட்டது.

    ரஷ்ய தூதரக அதிகாரிகள்

    ரஷ்ய தூதரக அதிகாரிகள்

    அது போல் வாஷிங்டன்னில் உள்ள ரஷ்ய தூதரக அதிகாரிகளும் ராணுவ உதவி கோரியது குறித்து கருத்து சொல்ல மறுத்துவிட்டனர். நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வர புடின் மீது சீனா தனது செல்வாக்கை செலுத்துவதற்கு பெய்ஜிங்கில் உள்ள பிடன் நிர்வாகத்தின் தொடர் அழுத்தத்தின் ஒரு பகுதியாகவே இது பார்க்கப்படுகிறது.

    ரஷ்யாவை கண்டிக்காத சீனா

    ரஷ்யாவை கண்டிக்காத சீனா

    உக்ரைன் விவகாரத்தில் இதுவரை ரஷ்யாவை கண்டிக்காத சீனா, உக்ரைன்-ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வலியுறுத்தியுள்ளது.
    இன்னும் ரஷ்யாவின் கோரிக்கைக்கு சீனா தரப்பில் எந்த பதிலும் வெளியாகவில்லை என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+