அறுவடை திருநாளாம் பொங்கலை அங்கீகரித்தது அமெரிக்காவின் வெர்ஜீனியா மாகாணம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: தமிழர் பண்டிகையான பொங்கல் பண்டிகை அமெரிக்காவின் வெர்ஜீனியா சட்டசபையில் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.

வெர்ஜீனியாவில் 40-ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழக மக்கள் வசித்து வருகின்றனர். அன்றைய தினம் பள்ளிகளுக்கு விடுமுறை இல்லாததால் தமிழக சிறுவர்கள் பள்ளி செல்லாமல் வீட்டில் இருந்தபடியே பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.

Virginia passed resolution to declare Jan 14 as Pongal day

இந்தியர்கள் அவரவர் கலாச்சாரங்கள், பாரம்பரியங்கள், நம்பிக்கைகளை பின்பற்ற அமெரிக்காவில் அங்கீகாரம் உண்டு. இந்நிலையில் தமிழர் பண்டிகையை பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று வள்ளுவன் தமிழ் அகாதெமி என்ற அமைப்பு கடுமையாக போராடியது.

அதன் விளைவு கடந்த பிப்ரவரி 2017-இல் பொங்கல் பண்டிகையை அங்கீகரிக்க
அந்த மாகாண சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து தற்போது இந்த தீர்மானம் சட்டமாக மாறியது.

எனவே இனி வரும் 2018 பொங்கல் பண்டிகை முதல் அடுத்தடுத்த ஆண்டுகள் வரை தொடர்ந்து வெர்ஜீனியாவில் பொங்கல் பண்டிகைக்கு விடுமுறை அளிக்கப்படும். இதனால் வெர்ஜீனியா மட்டுமல்லாது உலகெங்கும் வாழும் தமிழக மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இது தமிழக கலாசாரத்துக்கு கிடைத்த அரிய மரியாதை என்று மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

சட்டசபையில் இந்த தீர்மானத்துக்கு யாரும் எதிர்க்கவில்லை என்பதால் கூடுதல் மகிழ்ச்சியாக தமிழுக்கு கிடைத்த அங்கீகாரமாகவும் இது பார்க்கப்படுகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A rare honour celebrating Tamil culture - Virginia state passing an uncontested resolution to declare Jan 14th as Pongal day.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற