For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கதறி ஓடும் கொரோனா.. தொற்று குறைந்து வருகிறதாம்.. உலக சுகாதார அமைப்பு புது தகவல்

கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாம்

Google Oneindia Tamil News

ஜெனிவா: உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த வாரம் குறைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

2 வருடமாக இந்த கொரோனா நம்மை உலுக்கி எடுத்து வருகிறது.. இதற்கான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.. என்ன மாதிரியான வைரஸ் என்பதையும் கண்டுபிடிக்க முடியவில்லை..

மீண்டும் கொரோனா கோரத்தாண்டவம்.. ஆடிப்போன அமெரிக்கா.. 5 நாடுகளில் நிலைகுலைய வைத்த மரணங்கள் மீண்டும் கொரோனா கோரத்தாண்டவம்.. ஆடிப்போன அமெரிக்கா.. 5 நாடுகளில் நிலைகுலைய வைத்த மரணங்கள்

நாளுக்கு நாள் வைரஸ் பல்வேறு ரூபங்களில் பரவ ஆரம்பித்துவிட்டது. இப்போதைக்கு நமக்கு தடுப்பூசி மட்டுமே ஆறுதலாக உள்ளது.

அமெரிக்கா

அமெரிக்கா

உலகிலேயே அமெரிக்கா முதலிடத்தில் தொற்று பாதிப்பில் உள்ளது.. இனி அடுத்தடுத்த வைரஸ் பரவல்கள் வரலாம் என்று எச்சரிக்கை விடுக்கிறார்கள் உலக அறிவியல் ஆராய்ச்சியாளர்கள்.. இந்த ஆண்டு தொடக்கத்தில் பல நாடுகளில் கொரோனா வைரஸ் 2-வது அலை தாக்கியது... இந்தியாவையும் தாக்கியது.. இதனால் உயிரிழப்புகளும் அதிகமாகியது.. மற்ற நாடுகளும் 2வது அலை பரவலை கண்டு நடுங்குகிறார்கள்..

 டெல்டா

டெல்டா

டெல்டா வகை கொரோனா காரணமாக புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்ததாக காரணம் தெரிவிக்கப்பட்டது. சில மாதங்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைய தொடங்கியது என்றாலும் பாதிப்பு என்னவோ சில நாடுகளில் அதிகமாகவே இருந்து வருகிறது.. இப்படிப்பட்ட சூழலில்தான் உலகளவில் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த வாரம் குறைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.. இது குறித்து அந்த அமைப்பு சொல்லி உள்ளதாவது:

 தொற்று

தொற்று

"கடந்த வாரம் உலகளவில் 40 லட்சம் பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்... கடந்த வாரம் 36 லட்சம் பேர் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.... இதனால் உலகளவில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது.2 மாதங்களுக்கு பிறகு மெல்ல குறைந்து வருகிறது... 2 பிராந்தியங்களில் பெரிய அளவில் கொரோனா பாதிப்பு குறைந்து இருக்கிறது.

 குறைவு

குறைவு

மத்திய கிழக்கில் 22 சதவீதமும், தென்கிழக்கு ஆசியாவில் 16 சதவீதமும் குறைந்துள்ளது. தென் கிழக்கு ஆசியாவில் கொரோனா இறப்புகளில் 30 சதவீதம் குறைந்துள்ளது... அதேவேளையில் மேற்கு பசிபிக் பிராந்தியத்தில் 7 சதவீதம் அதிகரித்துள்ளது. உலக அளவில் கடந்த வாரம் இறப்பு எண்ணிக்கை 60 ஆயிரத்துக்குள் வந்தது. முந்தைய வாரத்தில் ஒப்பிடும் போது 7 சதவீதம் குறைவு ஆகும்.

 முக்கிய வைரஸ்

முக்கிய வைரஸ்

அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து, துருக்கி, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் தொற்று அதிகமாக உள்ளது தெரியவந்துள்ளது.. காரணம், வேகமாக பரவும் டெல்டா மாறுபாடு என்பதால், 185 நாடுகளில் இப்போதைக்கு வைரஸ் காணப்படுகிறது.. இப்படி உலகின் ஒவ்வொரு பகுதிகளிலும் காணப்படுகிறது.. டெல்டா மாறுபாடு உள்ள அனைத்து நாடுகளிலும் அது முக்கிய வைரசாக மாறிவிட்டது என்பதே உண்மை" என்று கூறப்பட்டுள்ளது.

English summary
WHO reports global decline in new type of coronavirus
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X