For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அனல் காற்று, காட்டுத் தீ, கடல்மட்டம் உயர்வு... அமெரிக்காவை அச்சுறுத்தும் பருவநிலை மாற்றம்

Google Oneindia Tamil News

கலிபோர்னியா: அமெரிக்காவில் கோடை காலம் நீண்டுள்ளதுடன் வெப்பத்தின் அளவும் அதிகரித்துள்ளதால் அங்குள்ள மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். கலிபோர்னியாவின் தெற்குப் பகுதியில் உள்ள வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயால் சுமார் இருபதாயிரம் வீடுகளில் உள்ள மக்கள் வெளியேற்றப் பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் தெற்குப் பகுதியில் உள்ள சான் டியோகோவில் உள்ள வனப்பகுதிக்கு அருகில் சுமார் இருபதாயிரம் குடியிருப்புகள் உள்ளன. அங்கு நிலவும் கடுமையான வெப்பம் மற்றும் அனல்காற்று காரணமாக நேற்று அங்குள்ள வீடு ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்தது.

எனவே, பெரும் அசம்பாவிதத்தைத் தவிர்க்கும் வகையில் அங்கிருந்த மற்ற வீடுகளில் இருந்த மக்கள் நேற்று பத்திரமாக வேறு இடத்திற்கு மாற்றப் பட்டனர்.

அனல் காற்று...

அனல் காற்று...

அதேபோல், லாஸ் ஏஞ்சல்சின் வடக்குப் பகுதியில் உள்ள லாம்பாக் டவுனில் சுமார் 150 ஏக்கர் பரப்பில் வீசிய அனல்காற்றின் காரணமாக அங்கிருந்த இருநூறு குடும்பங்கள் வேறு இடத்திற்கு அழைத்துச் செல்லப் பட்டனர்.

மின் தடை...

மின் தடை...

மாறுபட்ட பருவநிலை காரணமாக அங்குள்ள மின் இணைப்புகள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளன. சில இடங்களில் மின் தடை நிலவுகிறது.

அதிகரிக்கும் மழையளவு...

அதிகரிக்கும் மழையளவு...

மழைக் காலத்தின் போதும் எப்போதையும்விட அதிக அளவு மழை அமெரிக்காவில் பெய்கிறது. கடந்த சில ஆண்டுகளாக நாஸ்வில், கொலாராடோ, வாஷிங்டன், புளோரிடா ஆகிய பகுதிகளில் மழை அளவு வழக்கத்தைவிட அதிக அளவில் பதிவாகியிருந்தது.

விவசாயம் பாதிப்பு...

விவசாயம் பாதிப்பு...

இந்த சீதோஷ்ண நிலை மாற்றத்தால் அமெரிக்காவில் பூச்சிகளின் பெருக்கம் அதிகரித்து பயிர்கள் அதிக அளவில் சேதமடையும் நிலையும் அமெரிக்காவின் மேற்கே உள்ள சில இடங்களில் காணப்படுகிறது.

நீர் பற்றாக்குறை...

நீர் பற்றாக்குறை...

வரும் காலத்தில் நீர் பற்றாக்குறையால் உணவு தானிய உற்பத்தி குறைந்துவிடும் அபாயம் உள்ளது. இதன் மூலம் சமூகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட் டுள்ளது.

ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை...

ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை...

காற்று மண்டலத்தை வெப்பப்படுத்தும் வாயுக்கள் வெளியாவதை கட்டுப்படுத்தாவிட்டால் எதிர்காலத்தில் மிகப் பெரிய சேதத்தை அமெரிக்கா சந்திக்க நேரிடும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

கடல் மட்டம் உயர்வு...

கடல் மட்டம் உயர்வு...

வெப்பம் அதிகரிப்பதால் பனி உருகி கடலில் அதிக அளவில் கலக்கிறது. இதன் காரணமாக கடல் மட்டம் உயர்ந்து வருகிறது. இதே நிலை நீடித்தால் அமெரிக்க கடற்பகுதிகளில் நீரின் மட்டம், இந்த நூற்றாண்டின் இறுதியில் ஒன்று முதல் நான்கு அடி வரை உயர வாய்ப்புள்ளது.

அடுத்த இடத்தில் சீனா...

அடுத்த இடத்தில் சீனா...

கார்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிப்பு, அதிக மின் சக்தி பயன்பாடு உள்ளிட்ட காரணங்களால் வெப்பத்தை அதிகரிக்கும் வாயுக்கள், காற்று மண்டலத்தில் கலப்பதை அமெரிக்காவில் கட்டுப்படுத்த முடியவில்லை. உலகளவில் இந்த வாயுக்களை வெளியிடுவதில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக சீனா உள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
A wildfire roaring through Southern California forced evacuation orders for more than 20,000 homes on Tuesday, but so far only one mobile home burned as a high-pressure system brought unseasonable heat and gusty winds to the parched state.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X