For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரேஸில் 6 பேர்.. அவரையும் விட்டு வைக்காத சிஎஸ்கே மேலிடம்.. தோனிக்கு பின் கேப்டனாக போவது யார்?

Google Oneindia Tamil News

சென்னை: 2022 ஐபிஎல் தொடருக்கு முன்பாக சிஎஸ்கே கேப்டன் தோனி ஓய்வு பெறும் பட்சத்தில் சிஎஸ்கேவின் புதிய கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

2022 ஐபிஎல்லுக்கு முன் தோனி ஓய்வுபெறவில்லை என்றாலும் கூட சிஎஸ்கே அணி கேப்டன் பதவிக்கு தகுதியான ஒருவரை ஏலம் எடுக்கும் வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் அதன்பின் மெகா ஏலம் நடக்கும் வாய்ப்புகள் குறைவு. இதனால் அடுத்த வருடமே கேப்டன் பதவிக்கு தகுதியான ஒருவரை சிஎஸ்கே எடுத்து வைத்துக்கொள்ளும்.

தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் அளவுக்கு தனிப்பெரும் கட்சியாக உருவெடுப்போம்.. பாமக பொதுக்குழு சூளுரை தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் அளவுக்கு தனிப்பெரும் கட்சியாக உருவெடுப்போம்.. பாமக பொதுக்குழு சூளுரை

தோனி ஓய்வு பெற்ற பின் இந்த வீரரை சிஎஸ்கே கேப்டனாக்கும் வாய்ப்புகள் உள்ளன. 6 வீரர்களுக்கு இடையில் சிஎஸ்கே கேப்டனாகும் போட்டி நிகழ்வதாக கூறப்படுகிறது.

வார்னர்

வார்னர்

சிஎஸ்கே அணியின் கேப்டனாக அதிக வாய்ப்பு உள்ள வீரர்களில் வார்னர்தான் டாப்பில் இருக்கிறார். நல்ல ஓப்பனிங் வீரர். தோனி போன்ற கிரேஸ் கொன்ற வீரர். தமிழர்களுக்கு பிடித்தமானவர். வயதும் இருக்கிறது. ஏற்கனவே ஹைதராபாத் அணியை கோப்பை வெல்ல வைத்து இருக்கிறார். அதோடு இப்போது ஹைதராபாத் அணியோடு மோதலில் இருக்கிறார்.

வாய்ப்பு இல்லை

வாய்ப்பு இல்லை

அடுத்த வருடம் ஹைதராபாத் அணி இவரை அணியில் எடுக்காது. இதன் காரணமாக வார்னரை சிஎஸ்கேவில் எடுத்து கேப்டனாக்கும் வாய்ப்புகள் உள்ளன. மேலும் வார்னரும் சிஎஸ்கே ஜெர்சி அணிந்து போட்டோ எல்லாம் இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இதனால் வார்னரும் சிஎஸ்கே வர தயாராக இருப்பார் என்பதால் பெரும்பாலும் இவரை மஞ்சள் ஜெர்சியில் எதிர்பார்க்கலாம்.

கேன் வில்லியம்சன்

கேன் வில்லியம்சன்

சிஎஸ்கே அணியின் கேப்டனாகும் வாய்ப்பு உள்ளவர்களாக கருதப்பட்ட இன்னொரு வீரர்தான் கேன் வில்லியம்சன். இவரும் அடுத்த வருடம் ஹைதராபாத் அணிக்கு ஆடுவது சந்தேகம்தான்.ஒருவேளை ஹைதராபாத் இவரை ரீ டெயின் செய்யாத பட்சத்தில் சிஎஸ்கே இவரை எடுக்க அதிக வாய்ப்புள்ளது. பொதுவாக சிஎஸ்கே அணி கிவீஸ் மீது அதிக கவனம் செலுத்தும். கோச் பிளமிங்கும் நியூசிலாந்துதான். இருவரும் நெருக்கமானவர்கள்.

நெருக்கம்

நெருக்கம்

இதனால் கேன் வில்லியம்சன் ஏலத்திற்கு வரும் பட்சத்தில் அவரை சிஎஸ்கே குறி வைக்கும். சிஎஸ்கேவின் டாப் தலைகள் சிலர் ஏற்கனவே இணையத்தில் கேன் வில்லியம்சனின் சிஎஸ்கே வருகை குறித்து கடந்த சீசனில் பேசியது குறிப்பிடத்தக்கது. இதுபோக தினேஷ் கார்த்திகையும் சிஎஸ்கே எடுக்கும் திட்டத்தில் இருக்கும் என்கிறார்கள். கொல்கத்தா அணியில் இவர் ஆடும் வாய்ப்புகள் குறைவு.

Recommended Video

    அடுத்த வருஷம் என்ன பிளான்? Dhoni-ன் பதிலால் உற்சாகமான ரசிகர்கள்
    அனுபவம்

    அனுபவம்

    பொதுவாக அனுபவம் மிக்க வீரரை எடுப்பதே சிஎஸ்கே நிர்வாகத்தின் செயல். தினேஷ் கார்த்திக்கும் கடந்த சையது முஷ்டாக் கோப்பை தொடரில் சென்னை அணியை பைனல் வரை கொண்டு சென்று வெற்றிபெற வைத்தார். இதனால் அவரை சிஎஸ்கே எடுத்தாலும் ஆச்சர்யப்படுத்துவதற்கு இல்லை என்கிறார்கள். இதெல்லாம் போக இன்னொரு பக்கம் இயான் மோர்கனுக்கும் சிஎஸ்கே குறி வைப்பதாக கூறப்படுகிறது.

    இயான் மோர்கன்

    இயான் மோர்கன்

    இயான் மோர்கன் பேட்டிங் மோசமாக இருந்தாலும் அவரின் கேப்டன் தோனியை போலவே சிறப்பாக இருக்கிறது. எதுவும் இல்லாத கொல்கத்தா அணியை மாற்றி அதை பைனல் வரை கொண்டு வந்தது இயான் மோர்கன்தான். இவரின் கேப்டன்சி மிகவும் நன்றாக இருக்கிறது. இதனால் இவரையும் சிஎஸ்கே விட்டு வைக்க வாய்ப்பு இல்லை என்று கூறுகிறார்கள்.

    இரண்டு பேர்

    இரண்டு பேர்

    இதுபோக இரண்டு இளம் வீரர்களும் இந்த ரேஸில் உள்ளனர். அதில் ஒருவர் பண்ட், இன்னொருவர் இஷான் கிஷான். இரண்டு பேருமே அடுத்த சீசனில் அவர்களின் அணியால் ரீடெயின் செய்யப்பட வாய்ப்பு குறைவு. இதனால் இரண்டு விக்கெட் கீப்பர்களில் ஒருவர் சிஎஸ்கே கேப்டனாகும் வாய்ப்புகளும் அதிகம் உள்ளன.

    English summary
    IPL 2021: Who will be the next captain after Dhoni in CSK for coming season?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X