நகை பறிப்பு: துப்பாக்கியுடன் காட்டுக்குள் பதுங்கிய வழிப்பறி கொள்ளையன் சுட்டுக்கொலை - 2 பேர் கைது
பெண்ணிடம் நகையை பறித்து விட்டு ஏரிக்குள் பதுங்கிய வழிப்பறி கொள்ளையர்கள் காவல்துறையினர் ட்ரோன் கேமரா மூலம் தேடி வருகின்றனர்.
காஞ்சிபுரம்: துப்பாக்கி முனையில் பெண்ணிடம் நகையை பறித்து விட்டு ஏரிக்குள் பதுங்கியிருந்த வழிப்பறி கொள்ளையர்களில் ஒருவரை காவல்துறையினர் என்கவுண்டர் செய்துள்ளனர். 2 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து கத்தி, துப்பாக்கியை பறிமுதல் செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்கசாவடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் பட்டப்பகலில் நடந்து சென்று கொண்டிருந்த இந்திராணி என்ற பெண்மணியின் கழுத்திலிருந்து 6 சவரன் தங்க நகையை இரண்டு மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

நகையை பறித்த உடன் அச்சத்தில் இந்திராணி கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து வழிப்பறி கொள்ளையர்களை பிடிக்க முயன்றனர். கொள்ளையர்களை விரட்டி சென்ற போது தப்பி ஓட முயற்சித்த கொள்ளையர்களில் ஒருவன் கையில் வைத்திருக்கும் துப்பாக்கியை கொண்டு பொதுமக்களை சுட முயற்சித்துள்ளார்.
துப்பாக்கியை கண்டதும் பொது மக்கள் பயந்து பின்வாங்கினர். அதன்பிறகு சுங்கச்சாவடி அருகில் உள்ள ஏரி உள்ள காட்டுப்பகுதிக்குள் வழிப்பறி கொள்ளையர்கள் தப்பிச் சென்று பதுங்கினர்.
தகவலறிந்து காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுதாகர் தலைமையில் காவல்துறையினர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்தனர். தப்பி ஓடிய கொள்ளையனை பிடிக்க 10 தனிப்படை அமைக்கப்பட்டது. 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் கொள்ளையனை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கொள்ளையர்கள் பதுங்கியிருப்பதாக கூறப்படும் பகுதியில் காஞ்சிபுரம் சரகம் காவல்துறை துணை தலைவர் சத்தியபிரியா ஏரிப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.
தப்பி ஓடிய கொள்ளையர்கள் பதுங்கியுள்ள இடம் அடர்ந்த வனப்பகுதி என்பதால் ட்ரோன் கேமரா மூலம் தேடும் பணி தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் துப்பாக்கி வைத்துள்ள அந்த கொள்ளையனை தங்களது பாதுகாப்புக்காக சுட்டு பிடிக்கவும் வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 4ஆம் தேதி காஞ்சிபுரத்தில் டாஸ்மாக் ஊழியர்களை அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கியிருந்தனர். இந்த சம்பவத்தில் காயமடைந்த விற்பனையாளர் உடலில் துப்பாக்கிக் குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டாஸ்மாக் ஊழியர் ரவி தாக்கப்பட்ட சம்பவத்திற்கும் நகையை பறித்துச்சென்ற கொள்ளையர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனையடுத்து டாஸ்மாக் ஊழியரை சுட்டதும் இந்த கொள்ளை கும்பலாக இருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இந்தநிலையில் பல மணி நேர தேடுதல் வேட்டைக்குப் பிறகு இருங்காட்டுக்கோட்டை அருகே கொள்ளையர்களை காவல்துறையினர் சுற்றி வளைத்தனர். இருவரை கைது செய்த காவல்துறையினர் அவர்களின் கையில் இருந்த துப்பாக்கி, கத்தியை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட கொள்ளையர்கள் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேவலூர்குப்பம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த முர்தஷா என்பவரை காவல்துறையினர் பிடிக்க முயன்ற போது அவர் தலைமைக்காவலரை தாக்கி விட்டு தப்ப முயன்றார். இதனையடுத்து பாதுகாப்புக்காக காவல்துறையினர் கொள்ளையனை சுட்டனர். காவல்துறையினர் நடத்திய என்கவுண்டரில் கொள்ளையன் முர்தஷா உயிரிழந்தார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications