ஒரே காரில் 4 ஆண்களுடன் இளம்பெண் பயணம்.. குமரி போலீஸ் கேட்ட கேள்வி.. கேரள இளைஞர்கள் கடும் வாக்குவாதம்
கன்னியாகுமரி: ஒரே காரில் 4 ஆண்களுடன் இளம்பெண் பயணித்த நிலையில், அந்த காரை நிறுத்தி காவலர் கேட்ட ஒற்றை கேள்வியால் கேரள இளைஞர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் கேராளவின் எல்லையை ஒட்டியுள்ள மாவட்டம் ஆகும். கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரத்துடன் மிகவும் நெருக்கமான தொடர்பு உள்ள மாவட்டமாக கன்னியாகுமரி இருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழர்கள் மட்டுமின்றி ஏராளமான மலையாளிகளும் வசிக்கிறார்கள். குறிப்பாக சொல்வது என்றால், பத்மநாபபுரம், விளவங்கோடு, களியாக்காவிளை சுற்றுவட்டார பகுதிகளில் கணிசமானோர் வசிக்கிறார்கள்.

கன்னியாகுமரி மாவட்டம் களியாக்காவிளை செக் போஸ்ட், இருமாநிலங்களை இணைக்கும் முக்கியமான சோதனை சாவடி ஆகும்.. இந்நிலையில் கன்னியாகுமரியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது 4 ஆண்களுடன் ஒரு பெண் வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் அனைவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது. அந்த பெண், அந்த 4 பேரில் ஒருவரின் மனைவி என்று கூறியுள்ளார்.
எனினும் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அந்த பெண்ணிடம் கல்யாணம் நடந்ததற்கான ஒரிஜினல் ஆவணங்களை (ஆதார் உள்ளிட்ட ஏதாவது ஆவணம்) காட்டுமாறு கேட்டுள்ளார். இல்லாவிட்டால் அந்த பெண்ணின் தந்தைக்கு போன் செய்யுமாறு கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் உடனே ஆவணங்களை காட்ட மறுத்தததாகவும், தந்தைக்கு போனில் அழைக்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து கேரள இளைஞர்கள் 4 பேர் மற்றும் பெண்ணை காரை விட்டு கீழே இறங்க சொன்ன காவல் அதிகாரி, அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினார். இதனால் கோபம் அடைந்த கேரள இளைஞர்கள் குறிப்பிட்ட அதிகாரியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த காவல் அதிகாரி, இந்த பெண் யார் என்பதை தெரிவிக்காமல் இங்கிருந்து போக முடியாது என்று கூறினார். இந்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள நெட்டிசன்கள், 4 ஆண்கள் ஒரு பெண்ணுடன் பயணிக்கும்போது அந்த பெண் கடத்தப்பட்டு கொண்டு செல்லப்படவும் வாய்ப்புள்ளது. பெண் மிரட்டப்பட்டிருந்தால் உண்மையை சொல்ல மாட்டார். எனவே துருவி துருவி கேட்பதில் தவறில்லை என்று கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் சிலர், காவல் துறையின் கண்ணியமான விசாரணைக்கு பொதுமக்கள் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம்... காவல் துறை விசாரணை செய்தது சரியே...இப்படி தான் அனைத்து இடங்களிலும் நடக்கிறது.
காவலர் அவரது கடமையை செய்துள்ளார்.சந்தேகப்படும்படியாக இருந்தால் விசாரிப்பதில் ஒரு தவறுமில்லை.இந்த ஆள் இவ்வளவு வீர வசனம் பேசும்போதே, இதில் ஏதோ குளறுபடி உள்ளதாக தெரிகிறது. இந்திய குடிமக்கள் இந்தியாவின் எந்த பகுதிக்கும் செல்ல அனுமதி உண்டு அதை யாரும் தடுப்பதற்கு உரிமை இல்லை சுப்ரீம் கோர்ட் ஆர்டர். இருப்பினும் காவல்துறையினர் ஐடி கேட்டால் தர வேண்டும் என்று கூறினார்கள்..
இன்னொரு நெட்டிசன் வெளியிட்ட பதிவில், அந்த வழியே செல்லும் அனைத்து வாகனங்களையும் அவர் நிறுத்தவில்லை, இவர்கள் மேல் ஏதோ சந்தேகம் இருப்பதினால் நிறுத்துகிறார், ப்ரூப் கேட்டால் காட்டிவிட்டு செல்லலாமே, இதற்கு எதற்கு இவ்வளவு பதட்டமாக வேண்டும் என கேள்வி எழுப்பினார்.
-
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்?












Click it and Unblock the Notifications