'கழகங்கள் இல்லாத தமிழ்நாடு’ பாஜகவின் பக்கா ப்ளான்! திராவிட கட்சிகளை காக்க வேண்டும் - தமிமுன் அன்சாரி
கன்னியாகுமரி : கழகங்கள் இல்லாத தமிழ்நாடு கவலைகள் இல்லாத தமிழ்நாடு என்ற முழக்கத்தை பாரதிய ஜனதா கட்சி முன் வைத்துள்ளதால் தமிழகத்தில் திராவிட கட்சிகள் பாதுகாக்கப்பட வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி கூறியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இடலாக்குடி பகுதியில் குமரிமாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை அலுவலகம் திறப்பு நடைபெற்றது,
இதனை மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொதுச் செயலாளர் தமிமும் அன்சாரி திறந்து வைத்தார், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அக்னிபாத் திட்டம்
அப்போது பேசிய அவர்,"அக்னிபாத் திட்டம் என்பது நமது இந்திய ராணுவத்தின் மாண்பை சீர்குலைக்கும் வகையில் உள்ளது. ராணுவத்தில் ஆட்கள் தேர்வு செய்யும்போது அதில் 25% பேருக்கு மட்டுமே வேலை வாய்ப்பு உள்ளது 75% பேருக்கு வேலைவாய்ப்பு பறிபோகிறது.

கழகங்கள் இல்லாத தமிழ்நாடு
எனவே இதன்மூலம் ராணுவ பயிற்சி பெற்றவர்கள் தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு வைக்கும் அபாயம் உள்ளது. தமிழகத்தில் கழகங்கள் இல்லாத தமிழ்நாடு கவலைகள் இல்லாத தமிழ்நாடு என்ற முழக்கத்தை பாரதிய ஜனதா கட்சி முன் வைத்துள்ளதால் இது குறித்து யோசிக்க வேண்டி உள்ளது.

பாதுகாக்க வேண்டும்.
எனவே தமிழகத்தில் திராவிட கட்சிகள் பாதுகாக்கப்பட வேண்டும். தமிழகத்தில் திராவிட கட்சிகள் செய்த சாதனைகளை மறைக்க முடியாது. எத்தனையோ அரசியல் கட்சி தலைவர்கள் பேசினாலும் மக்கள் ரசிப்பார்கள் ஆனால் தேர்தல் என்று வந்துவிட்டால் திராவிட கட்சிகளுக்கு மட்டுமே வாக்களிப்பார்கள்.

நடவடிக்கை வேண்டும்
எனவே திராவிட கட்சிகளை பாதுகாக்க வேண்டும். தமிழகத்தில் கனிம வளங்கள் கடத்தப்படுவதை தடுத்து, சாதாரண ஏழை மக்களும் கட்டுமான பொருட்களை நியாயமான விலையில் வாங்கி பயனடைய தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
-
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications