கன்னியாகுமரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிறக்க போற குழந்தையை பார்க்க ஆசையாக இருந்த விஜின்.. மெர்லினுக்கு நடந்த சோகம்..!

தவறான சிகிச்சையால் தாயும் சேயும் உயிரிழந்தனர்

Google Oneindia Tamil News

Recommended Video

    பிறக்க போற குழந்தையை பார்க்க ஆசையாக இருந்த விஜின்.. மெர்லினுக்கு நடந்த சோகம்..!-வீடியோ

    கன்னியாகுமரி: பிறக்க போற குழந்தையை பார்க்க ஆசையா இருந்த விஜின்.. கடைசியில் தாய்-சேய் சடலங்களை பார்த்து கதறிய காட்சி நெஞ்சை உருக்குவதாக இருந்தது!

    குமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்தவர் விஜின். இவரது மனைவி மெர்லின் திவ்யா. வயது 27. இவர்களுக்கு 11 மாதத்துக்கு முன்பு கல்யாணம் நடந்தது.

    இந்நிலையில், நிறைமாத கர்ப்பிணியான மெர்லின் நேற்று முன்தினம், மார்த்தாண்டத்தில் உள்ள சிஎஸ்ஐ மிஷன் ஆஸ்பத்திரியில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார்.

    என் மனைவியும்.. உன் கணவரும்.. இந்தா செருப்பு நல்லா அடி.. வாணியம்பாடியில் பரபரப்பு.. வைரல் வீடியோஎன் மனைவியும்.. உன் கணவரும்.. இந்தா செருப்பு நல்லா அடி.. வாணியம்பாடியில் பரபரப்பு.. வைரல் வீடியோ

    சுகபிரசவம்

    சுகபிரசவம்

    சுகப்பிரசவம் ஆகிவிடும் என்று டாக்டர்கள் தெரிவித்த நிலையில், சிறிது நேரத்திற்கெல்லாம் "குழந்தை பிறந்துவிட்டது, தாயும்-சேயும் நலம்" என்று ஊழியர்கள் சொல்லிவிட்டு போனார்கள். ஆனால் குழந்தையை யாரிடமும் காட்டவே இல்லை. பிறகு, திடீரென்று மெர்லினையும், குழந்தையையும் ஆம்புலன்சில் ஏற்றியுள்ளனர்.

    மெர்லின்

    மெர்லின்

    இதை பார்த்து பதறிய குடும்பத்தினர், என்ன ஆச்சு என்று கேட்டும் யாரும் பதில் சொல்லவில்லை என கூறப்படுகிறது. அதனால் ஆம்புலன்ஸ் பின்னாடியே குடும்பத்தினர் ஓடினர். ஆஸ்பத்திரியில் இருந்து 300 மீட்டர் தூரத்தில் உள்ள குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்குள் ஆம்புலன்ஸ் நுழைந்தது. பிறகு மெர்லினையும், குழந்தையையும் அனுமதிக்க செல்ல முயன்றதாக தெரிகிறது.

    நிர்வாகம்

    நிர்வாகம்

    ஆனால் தாயும், சேயும் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் சொல்லிவிட்டனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள், சிஎஸ்ஐ மிஷின் ஆஸ்பத்திரி நிர்வாகம் மீது மார்த்தாண்டம் ஸ்டேஷனில் புகார் மனு ஒன்றையும் அளித்தனர். ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டமும் நடத்தினர். தகவலறிந்து போலீசாரும் விரைந்து வந்து, சமாதான முயற்சியில் இறங்கினர்.

    நடவடிக்கை

    நடவடிக்கை

    ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனை மருத்துவர் குழு பரிசோதனை செய்து, உயிரிழப்புக்கு காரணம் என்ன என்பது விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உத்தரவாதம் அளித்து உடல்களை ஒப்படைத்தனர். ஆசையுடன் மனைவியை ஆஸ்பத்திரியில் சேர்த்த விஜின், கடுமையான அதிர்ச்சி காரணமாக உடல், மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

    English summary
    Mother and born baby died due to wrong treatment in Marthandam CSI Mission Hospital near Nagarcoil
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X