கன்னியாகுமரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கடைசி நேரத்தில் கழுத்தறுத்த பென்ஸ் கார்; மழைவெள்ளத்தால் இஞ்சின் கோளாறு; டூவிலரில் பயணித்த விஜயதரணி!

Google Oneindia Tamil News

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் கொட்டித்தீர்த்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி விஜயதரணி எம்.எல்.ஏ.வின் மெர்சிடிஸ் பென்ஸ் கார் பழுதடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

முதலமைச்சர் கன்னியாகுமரிக்கு ஆய்வுக்கு வந்த போது அவரை சந்திப்பதற்காக புறப்பட்டு சென்ற விஜயதரணியை கடைசி நேரத்தில் அவரது கார் கழுத்தறுத்து விட்டதாக தெரிகிறது.

இதனால் டூவிலர் ஒன்றை பிடித்து அவசர அவசரமாக முதல்வரை சந்திக்க சென்ற நிலையிலும் அதற்குள் அவரது கான்வாய் வாகனங்கள் புறப்பட்டுவிட்டதாம்.+

சூர்யாவை கைவிட்ட கொங்கு அமைப்புகள்.! சிவக்குமார் அப்செட்..! கப்சிப் திமுக! சூர்யாவை கைவிட்ட கொங்கு அமைப்புகள்.! சிவக்குமார் அப்செட்..! கப்சிப் திமுக!

விஜயதரணி

விஜயதரணி

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான விஜயதரணி எம்.எல்.ஏ. தனது பயன்பாட்டுக்காக மெர்டிசிஸ் பென்ஸ் GLA ரக கார் ஒன்றை வைத்திருக்கிறார். பறக்கும் குதிரை என வர்ணிக்கப்படும் அந்த சொகுசுக் காரில் சென்று தான், கடந்த ஒரு வாரமாக மழை வெள்ளப் பாதிப்புகளை விஜயதரணி ஆய்வு செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தனது வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காரை வெள்ளநீர் சூழ்ந்ததால் இஞ்சின் பழுதடைந்திருக்கிறது.

காலதாமதம்

காலதாமதம்

திங்கட்கிழமை காலை முதலமைச்சர் கன்னியாகுமரிக்கு ஆய்வுக்கு வருகை புரிந்ததையொட்டி அவரை சந்திக்க புறப்பட்ட விஜயதரணிக்கு, கார் பிரச்சனை பெரிய தலைவலியை கொடுத்திருக்கிறது. எவ்வளவோ முயன்றும் கார் ஸ்டார்ட் ஆக மறுத்ததால் ஒரு டூவிலரை பிடித்து முதல்வர் ஸ்டாலினை சந்திக்கச் சென்றிருக்கிறார். இவர் ஆட்சியர் அலுவலகம் சென்று சேர்வதற்குள் முதலமைச்சரின் கான்வாய் வாகனங்கள் அங்கிருந்து புறப்பட்டுவிட்டன.

விசாரணை அழைப்பு

விசாரணை அழைப்பு

இதனால் மிகுந்த ஏமாற்றத்தோடு விஜயதரணி வீடு திரும்பிய நிலையில், ஏன் முதல்வர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வில்லை, புறக்கணிக்க என்ன காரணம் என விசாரணை அழைப்புகள் கட்சியினரிடம் இருந்தும் உள்ளூர் திமுகவினரிடம் இருந்தும் வரத் தொடங்கியுள்ளன. அவர்களிடம் நடந்த விவரத்தை சொல்லி புரிய வைப்பதற்குள் விஜயதரணி எம்.எல்.ஏ.வுக்கு போதும் போதும் என்றாகிவிட்டதாம்.

பழுதுநீக்கம்

பழுதுநீக்கம்

இதனிடையே பழுதடைந்த பென்ஸ் கார் இஞ்சினின் மதிப்பு மட்டும் ரூ.20 லட்சம் இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது. பென்ஸ் நிறுவனத்திலிருந்து வரவழைக்கப்பட்ட டென்னீசியன்கள் இஞ்சின் கோளாறை சரி செய்ததை தொடர்ந்து இப்போது தனது விளவங்கோடு தொகுதிக்குள் ரவுன்ட்ஸில் இருந்து வருகிறார் விஜயதரணி எம்.எல்.ஏ.

English summary
Vijayadharani Mla's Benz car Repair in Rain flood
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X