பிகில் படம் வெளியிட தாமதமானதால் கோபம்.. கடைகளை அடித்து உடைத்த விஜய் ரசிகர்கள்.. கலவரம்!
கிருஷ்ணகிரி: பிகில் படம் வெளியிட தாமதமானதால் கோபம் அடைந்த விஜய் ரசிகர்கள் கிருஷ்ணகிரியில் உள்ள கடைகளை அடித்து உடைத்துள்ளனர்.
பிகில் படம் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்ட செல்கிறது. படத்தின் பாடல்கள், டிரைலர் வெளியாகி உள்ள நிலையில் படத்திற்காக ரசிகர்கள் மரண வெயிட்டிங்கில் இருந்தனர். இயக்குனர் அட்லி இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்து இருக்கும் ஸ்போர்ட்ஸ் ஜானர் படமான பிகில் இன்று வெளியானது.
படத்தின் ரிவ்யூக்கள் தற்போது வெளிவர துவங்கி உள்ளது. இன்னும் நான்கு நாட்களுக்கு எல்லா காட்சிகளும் இப்போதே புக் ஆகிவிட்டது குறிப்பிடத்தக்கது.
சுயேட்சைகளை வளைக்க திட்டம்.. ஹரியானாவில் ஆட்சியை பிடிக்க பாஜக முடிவு.. அமித் ஷா மாஸ்டர் பிளான்!

தடை
முதலில் இந்த படத்தின் அதிகாலை சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதிக தொகையில் கட்டணம் வசூலிப்பதை தவிர்க்க வேண்டும் என்பதற்காக அரசு இந்த படத்தின் அதிகாலை காட்சிக்கு அனுமதி வழங்கவில்லை. ஆனால் நேற்று திடீர் என்று சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு மூலம் அனுமதி வழங்கப்பட்டது.

திடீர் என்று வெளியானது
இதனால் தமிழகம் முழுக்க இன்று அதிகாலை 4 - 5 மணிக்கு அதிகாலை காட்சிகள் பல திரையரங்குகளில் வெளியானது. இந்த நிலையில் கிருஷ்ணகிரியில் பிகில் திரைப்படம் வெளியிட தாமதமானதால் விஜய் ரசிகர்கள் கோபம் அடைந்து கலவரத்தில் குதித்துள்ளனர். கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகில் உள்ள தியேட்டர் ஒன்றில்தான் இந்த பிரச்சனை நிகழ்ந்துள்ளது.

கலவரம்
4 மணிக்கு தொடங்க வேண்டிய படம், 5 மணியாகியும் தொடங்கவில்லை. இதனால் கோபத்தில் ரசிகர்கள் வெளியே சாலைக்கு வந்து அங்கிருந்த கடைகளை அடித்து உடைத்தனர். அங்கு இருந்த கடைகளின் பேனர்கள் உடைக்கப்பட்டது. சில வாகனங்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது.

போலீஸ் குவிப்பு
இதை தடுக்க நினைத்த மற்ற விஜய் ரசிகர்களுக்கும் இவர்களுக்கும் இடையிலும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டனர். அங்கு கலவரம் செய்தவர்கள் மீது அதிரடிப்படை போலீசார் லத்தி தாக்குதல் நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!