திருமணம், முடி சூடல், உடல் அடக்கம்.. எல்லாமே ஒரே இடத்தில்.. ராணி எலிசபெத் வாழ்க்கையின் ஒற்றை புள்ளி
லண்டன்: பிரிட்டன் மகாராணி 2ம் எலிசபெத்து 1947 ல் தனது காதல் கணவரை கரம்பிடித்த திருமணம், பிரிட்டன் மகாராணியாக முடிசூடிய நிகழ்வு நடந்த வெஸ்ட்மின்ஸ்டர் அபேவிலேயே அவரது உடல் இன்று அடக்கம் செய்யப்படுகிறது.
பிரிட்டன் மகாராணியாக 70 ஆண்டுகள் செயல்பட்டவர் 2ம் எலிசபெத். இவர் 1952ம் ஆண்டில் தனது 21வயது வயதில் அரியனை ஏறி மகாராணியாக முடிசூடினார்.
வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் அவர் டாக்டர்கள் கண்காணிப்பில் இருந்தார். இருப்பினும் கடந்த 8ம் தேதி இரவில் மகாராணி 2ம் எலிசபெத் காலமானார்.

இறுதி சடங்கு
மரணமடைந்த மகாராணி 2ம் எலிசபெத் தனது 96வது வயதில் மறைந்துள்ளார். இவரது மறைவையொட்டி பல நாடுகளில் துக்கதினம் அனுசரிக்கப்பட்டது. இந்தியாவில் ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்பட்டது. இன்று தான் மகாராணி 2ம் எலிசபெத்தின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு அடக்கம் செய்யப்பட உள்ளது. இதனால் லண்டனில் உலக தலைவர்கள் திரண்டுள்ளனர். இந்தியா சார்பில் ஜனாதிபதி திரெளபதி முர்மு பங்கேற்று அஞ்சலி செலுத்தினார். இரங்கல் குறிப்பு புத்தகத்தில் இரங்கல் செய்தியை குறிப்பிட்டார்.

உடல் அடக்கம்
இதையடுத்து இன்று மாலை 3.30 மணிக்கு பிரிட்டன் மகாராணி 2ம் எலிசபெத்தின் இறுதிசடங்கு துவங்கியது. வெஸ்ட்மின்ஸ்டர் அரங்கில் இருந்து சாரட் வண்டியில் மகாராணியின் சவப்பெட்டி வைக்கப்பட்டு ஊர்வலம் புறப்பட்டது. வெஸ்ட்மின்ஸ்டர் அபேவுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

திருமணம் நடந்த இடம்
இந்த வெஸ்ட்மின்ஸ்டர் அபேவுக்கும் 2ம் எலிசபெத்துக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. ஏனென்றால் பிரிட்டன் மகாராணியாக இருந்த எலிசபெத்தின் காதல் திருமணம் இங்கு தான் நடந்தது. இவர் தனது கணவரான பிலிப்பை முதன் முதலில் 8 வயதில் சந்தித்தார். பிலிப் கிரீஸ் மற்றும் டென்மார்க்கின் இளவரசராக இருந்தார். எலிசபெத் தனது 13வது வயதில் காதலை பிலிப்பிடம் வெளிப்படுத்தினார். இதையடுத்து இருவரும் காதல் கடிதங்களை பரிமாறிக்கொண்டனர். அதன்பிறகு ஜூலை 1947ல் நிச்சயதார்த்தம் நடந்தது. அதே ஆண்டு நவம்பர் 20ல் வெஸ்ட் மின்ஸ்டர் அபேவில் தான் திருமணம் நடந்தது. இங்கு பிலிப்-2ம் எலிசபெத் திருமணம் சர்வேதேச விழா போன்று நடந்தது.

முடிசூட்டு விழா
அதன்பிறகு 1952ல் பட்டத்து இளவரசியாக இருந்த 2ம் எலிசபெத் பிரிட்டன் மகாராணியாக முடிசூடினார். இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வும் இந்த வெஸ்ட்மின்ஸ்டர் அபேவில் தான் நடந்தது. இதனால் வெஸ்ட் மின்ஸ்டர் அபே என்பது மகாராணி எலிசபெத்தின் மனதுக்கு மிகவும் நெருக்கமான இடமாகும். இந்நிலையில் இன்றும் இங்கு தான் மகாராணி 2ம் எலிசபெத்தின் இறுதிச்சடங்கு நடத்தப்பட்டு புதைக்கப்பட உள்ளது.

இப்போது உடல் அடக்கம்
வெஸ்ட் மின்ஸ்டர் அபே என்பது பிரிட்டன் அரசு குடும்பத்தினரின் மிகவும் முக்கியமான இடமாகும். இங்கு அரசு குடும்பத்தின் சுப மற்றும் துக்க நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு தனித்தனியே இடங்கள் உள்ளன. இங்கு இதுவரை 16 திருமணங்கள் நடந்துள்ளது. மேலும் 17 பேரின் உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. தற்போது மகாராணி 2ம் எலிசபெத்தின் உடல் அவரது தந்தை 6ம் ஜார்ஜ், தாய் முதலாம் எலிசபெத், சகோதரி மார்க்ரெட், கணவர் பிலிப் ஆகியோரின் உடல் அருகே அடக்கம் செய்யப்பட உள்ளது.
-
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார் -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு












Click it and Unblock the Notifications