பிரிட்டனின் நீண்ட கால மகாராணி.. மதிப்புக்குரிய மங்கை! யார் இந்த 2-ம் எலிசபெத்? முழு விவரம்
லண்டன்: பிரிட்டன் மகாராணி எலிசபெத் உடல்நலக்குறைவால் இன்று காலமானதாக பக்கிங்காம் அரண்மனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பிரிட்டனின் நீண்டகால மகாராணி என்ற சரித்திரப் பெருமைக்குரியவர் 2-ம் எலிசபெத் ராணி.
இரண்டாம் எலிசபெத் 1952ம் ஆண்டு பிப்ரவரி 6ம் தேதி முதல் பிரிட்டனின் மகாராணியாக அரியணையில் இருந்தார். வரலாற்றில் நீண்ட காலம் ஆட்சி செய்த பிரிட்டிஷ் மன்னர்/மகாராணி என்ற பெருமையை பெற்றவர்.

பிறந்தது எப்போது?
பிரிட்டன் மகாராணி எலிசபெத் அலெக்ஸாண்ட்ரா மேரி 1926ம் ஆண்டு ஏப்ரல் 21ம் ஆண்டில் லண்டனில் பிறந்தார். இவரது தந்தை பெயர் ஆறாம் ஜார்ஜ். தாய் பெயர் எலிசபெத். இதனால் இவர் இரண்டாம் எலிசபெத் ராணி என அழைக்கப்பட்டு வருகிறார். இவர் பிறந்தபோது பிரிட்டன் மன்னராக அவரது தாத்தா ஜார்ஜ் -V இருந்தார். இவர் 1936 மரணமடைந்தார். இதையடுத்து மன்னராக எட்வர்ட் VIII பட்டம் சூடினார்.

பட்டம் துறந்த எட்வர்ட்
இவருக்கு அடுத்தபடியாக பிரிட்டன் மன்னர் பதவிக்கான ரேஸில் எலிசபெத்தின் தந்தை ஜார்ஜ் VI இருந்தார். அவரை தொடர்ந்து 2வது நபராக எலிசபெத் இருந்தார். இந்த வேளையில் எலிசபெத் ராணியாக முடியாது என்ற பேச்சுகள் அதிகமாக இருந்தன. அதாவது மன்னராக உள்ள எட்வர்ட் VIIIக்கு குழந்தைகள் பிறக்கும். இதனால் அவரது வாரிசுகள் அடுத்த மன்னராக வருவார்கள் என்ற பேச்சு இருந்தது. இந்த நிலையில் தான் மன்னர் எட்வர்ட் VIII மன்னர் பட்டத்தை துறந்தார்.

10 வயதில் கவனம் ஈர்ப்பு
இதனால் அடுத்த பட்டத்து மன்னராக இருந்த எலிசபெத்தின் தந்தை ஜார்ஜ் VI பிரிட்டன் மன்னராக முடிசூடினார். இதைத்தொடரந்து 1936ம் ஆண்டு முதல் பட்டத்து இளவரசி என்ற பெயரை எலிசபெத் பெற்றார். அவர் 10 வயது மட்டும் தான் நிரம்பியிருந்தது. இதனால் அவரது ஒவ்வொரு நகர்வும் பத்திரிகைகளில் விவரிக்கப்பட்டு ஆராயப்பட்டது.1952ல் தந்தை ஜார்ஜ் VI மறைந்த நிலையில் எலிசபெத் மகாராணியாக பட்டம் சூடினார்.

நீண்டகால மகாராணி
இன்று காலமான 96 வயது பிரிட்டன் மகாராணி எலிசபெத் 1952ம் ஆண்டு முதல் 70 ஆண்டுகள் வரை மகாராணியாக ஆட்சி செய்தவர். இவர் லிலிபெட்' என்ற புனைப்பெயருடன் அழைக்கப்பட்டார். முன்னதாக மகாராணி பிரிட்டன் இளவரசியாக இருந்தபோது செல்வ செழிப்பான வாழ்க்கையை நடத்தினார். அனைத்து வசதிகளும் அரண்மனையிலேயே இருந்தது. ஆசிரியர்கள் வீட்டுக்கு வரவழைக்கப்பட்டு கல்வி போதித்தனர். விண்ட்சர் கிரேட் பூங்காவில் உள்ள குதிரை சவாரி உள்ளிட்ட மகிழ்ச்சியை அனுபவித்தார்.

8 வயதில் கணவருடன் சந்திப்பு
2-ம் எலிசபெத் தனது கணவரான பிலிப்பை முதன் முதலில் 8 வயதில் சந்தித்தார். பிலிப் கிரீஸ் மற்றும் டென்மார்க்கின் இளவரசராக இருந்தார். எலிசபெத் தனது 13வது வயதில் காதலை பிலிப்பிடம் வெளிப்படுத்தினார். இதையடுத்து இருவரும் காதல் கடிதங்களை பரிமாறிக்கொண்டனர். அதன்பிறகு ஜூலை 1947ல் நிச்சயதார்த்தம் நடந்தது. அதே ஆண்டு நவம்பர் 20ல் திருமணம் நடந்தது. இந்த திருமணம் சர்வேதேச நிகழ்வாக இருந்தது. உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான மக்கள் பிபிசி மூலம் பார்த்தனர். இளம் திருமணமான தம்பதிகளுக்கு ஒரு வருடம் கழித்து இளவரசர் சார்லஸ் பிறந்தார். அதன்பிறகு ஆன், ஆண்ட்ரூ, எட்வர்டு என்ற மகன்கள் பிறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

போருக்கு நடுவே வாழ்க்கை
இதற்கிடையே தான் 1939ல் 2ம் உலகப்போர் தொடங்கியபோது ராணி எலிசபெத்தின் தாய் இங்கிலாந்தை விட்டு வெளியேறி கனடாவுக்குச் செல்ல வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது. இருப்பினும், அவர் தாயார் வெளியேற மறுத்துவுிட்டார். எலிசபெத் தனது சகோதரி மற்றும் தாயுடன் லண்டன் நகரத்தை விட்டு வெளியேறினார். அவர்கள் போரின் பெரும்பகுதியை விண்ட்சர் கோட்டையில் கழித்தனர். மேலும் எலிசபெத் தனது முதல் வானொலி ஒலிபரப்பை 1940ல் பிபிசியின் சில்ட்ரன்ஸ் ஹவரில் வழங்கினார். அதன்பிறகு பிரிட்டிஷ் இராணுவத்தின் பெண்கள் பிரிவு சார்பில் ஒரு கவுர பதவியை பெற்றார். பெருவாழ்வுடன் பெரும் புகழுடன் வாழ்ந்து மறைந்துவிட்டார் பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத்.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications