லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

யோகிக்கு “தலைவலி”.. உபி பாஜகவில் சாதி பிளவு! அரசுக்கு எதிராக தியாகி - பிராமணர்களை திரட்ட முடிவு

Google Oneindia Tamil News

லக்னோ: பெண்ணை தாக்கியதற்காக குண்டர் சட்டத்தில் கைதாகி ஜாமீனில் விடுவிடிக்கப்பட்ட முன்னாள் பாஜக பிரமுகர் ஸ்ரீகாந்த் தியாகி, யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப்பிரதேச தன்னை அநியாயமாக பழிவாங்குவதாக கூறி பாஜகவுக்கு எதிராக தியாகி மற்றும் பிராமண சமுதாயத்தை சேர்ந்தவர்களை திரட்டி பொதுக்கூட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள குடியிருப்பு பகுதியில் வசித்து வந்த பாஜக முன்னாள் பிரமுகர் ஸ்ரீகாந்த் தியாகி, வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு இடத்தை ஆக்கிரமித்து மரக்கன்றுகளை நட முயற்சித்ததாக கூறப்படுகிறது.

இதனை கண்ட அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் ஸ்ரீகாந்த் தியாகிக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட, ஸ்ரீகாந்த் தியாகி தகாத வார்த்தைகளால் அவரை திட்டினார்.

அமைச்சர் சேகர்பாபுவை போனில் அழைத்து பாராட்டும் பாஜக தலைவர்கள்.. ஏன் தெரியுமா? அவரே சொன்ன விஷயம்! அமைச்சர் சேகர்பாபுவை போனில் அழைத்து பாராட்டும் பாஜக தலைவர்கள்.. ஏன் தெரியுமா? அவரே சொன்ன விஷயம்!

தியாகி கைது

தியாகி கைது

ஸ்ரீகாந்த் தியாகியின் ஆதரவாளர்கள் அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து ஸ்ரீகாந்த் தியாகியை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். இதனை தொடர்ந்து உத்தரப்பிரதேச அரசு தனது வழக்கமான பாணியில் ஸ்ரீகாந்த் தியாகியின் வீட்டை புல்டோசர் கொண்டு இடித்தது.

பாஜகவிலிருந்து நீக்கம்

பாஜகவிலிருந்து நீக்கம்

பாஜகவை சேர்ந்த தங்களுக்கே இந்த நிலையா என்று அதிர்ச்சியடைந்த ஸ்ரீகாந்த் தியாகியின் மனைவி அனு தியாகி யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக குரல் கொடுத்தார். இதனை தொடர்ந்து ஸ்ரீகாந்த் தியாகி பாஜகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். 3 மாத சிறைக்கு பிறகு ஸ்ரீகாந்த் தியாகி கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி ஜாமீனில் வெளியே வந்தார். அவருக்கு மாலை அணிவித்து ஆதரவாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

பாஜகவுக்கு எதிர்ப்பு

பாஜகவுக்கு எதிர்ப்பு

சிறையில் இருந்து வந்த கையோடு யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசுக்கு எதிராக பேசத் தொடங்கி இருக்கிறார் ஸ்ரீகாந்த் தியாகி. இந்த விவகாரத்தில் தான் அநியாயமாக பாஜகவால் குறிவைக்கப்பட்டதாக அவர் குற்றம்சாட்டி உள்ளார். விரைவில் தியாகி சமுதாயத்தின் ஆதரவோடு பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய உள்ளதாக ஸ்ரீகாந்த் தியாகி அறிவித்து இருக்கிறார்.

தியாகி - பிராமணர்கள் கூட்டம்

தியாகி - பிராமணர்கள் கூட்டம்

கடந்த சில நாட்களுக்கு முசாஃபர்நகரில் தியாகி சமுதாயத்தை சேர்ந்த தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார் ஸ்ரீகாந்த் தியாகி. இதற்கிடையே தியாகி - பிராமணர்கள் கூட்டமைப்புகளை இணைத்து பாஜகவுக்கு எதிராக கூட்டம் கூட்ட உள்ளதாக ஸ்ரீகாந்த் தியாகி கூறி உள்ளார்.

 பாஜகவுக்குள் சாதி பிளவு

பாஜகவுக்குள் சாதி பிளவு

தொடர்ந்து பேசிய அவர், பாஜகவில் உள்ள தியாகி சமுதாயத்தை சேர்ந்தவர்களே பாதுகாப்பு இன்றி உணர்கின்றனர். இனி வரும் நாட்களில் மிகப்பெரும் முடிவுகளை எடுக்க இருக்கிறோம். விரைவில் மிகப்பெரிய பொதுக்கூட்டத்தை கூட்ட உள்ளோம். இதற்காக தியாகி சமுதாயத்தினர் அதிகளவில் வசிக்கும் கிராமங்களுக்கு சென்று மக்களை சந்திப்போம்.

English summary
Ex-BJP leader Srikanth Tyagi, who was arrested and released on bail under the Goon Act for assaulting a woman, has announced that he is going to hold a public meeting against the BJP with brahmins and Tyagis, claiming that Yogi Adityanath-led Uttar Pradesh is taking unfair revenge against him.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X