”அற்ப விஷயங்களில்” அரசியல்.. என் அம்மாவை எதற்கு இழுக்க வேண்டும்.. பாஜகவை விளாசிய பிரியங்கா காந்தி
லக்னோ : அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா காங்கிரஸ் எம்.பி.யும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தியை விமர்சித்ததற்கு பதிலடி கொடுத்துள்ள பிரியங்கா காந்தி வதோரா, சித்தாந்தங்கள் மற்றும் பிரச்சினைகளின் அடிப்படையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும், மற்றவர்களை இழிவுபடுத்துவது போன்ற "அற்ப விஷயங்களில்" அல்ல என்றும் பாஜகவை விளாசியுள்ளார்.
பாஜக வேட்பாளர்களை ஆதரித்து அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா உத்தரகாண்டில் சமீபத்தில் பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், 'பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய துல்லிய தாக்குதலுக்கு ராகுல் காந்தி ஆதாரம் கேட்கிறார். நீங்கள் ராஜீவ் காந்தியின் மகன் தானா? இல்லையா? என்பதற்கு நாங்கள் எப்போதாவது உங்களிடம் ஆதாரம் கேட்டோமா?' என்று பேசினார்.
அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவின் இந்த பேச்சுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ள நிலையில், அவருக்கு எதிராக கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. மேலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பிரியங்கா காந்தி
இந்நிலையில் அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா குறித்து பேச்சு பதிலடி கொடுத்துள்ள ராகுல் காந்தியின் சகோதரியும் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி தேர்தலை சித்தாந்த ரீதியில் எதிர்கொள்ளாமல் இது போன்ற அற்ப விஷயங்களைப் பேசுவதா என கேள்வி எழுப்பியுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் என்டிடிவி செய்தியாளரிடம் பேசிய பிரியங்கா காந்தி, "என் அம்மாவைப் பற்றி அப்படிச் சொல்லியிருக்கக் கூடாது. அவர் ஒரு தியாகியின் விதவை. என் அம்மா இந்த நாட்டிற்கு உயிரைக் கொடுத்தார்" என்று கூறினார்.

பாஜகவை விளாசிய பிரியங்கா
தொடர்ந்து பேசிய பிரியங்கா, எனது தாயான சோனியா காந்தி தனது கணவர் (முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி) கொல்லப்பட்டு அவரது சிதைக்கப்பட்ட உடலை வீட்டிற்கு கொண்டு வந்ததை பார்த்தார். அவரைப் பற்றி இப்படிச் சொல்ல வேண்டிய அவசியம் என்ன? ஏன் அவரை இந்த விவகாரத்துக்குள் இழுக்க வேண்டும்?" என ஆவேசமாக கேள்வி எழுப்பியதோடு, மதிப்புகள், சித்தாந்தங்கள் மற்றும் பிரச்சினைகளின் அடிப்படையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும், மற்றவர்களை இழிவுபடுத்துவது அல்லது இது போன்ற "அற்ப விஷயங்களில்" அல்ல என்றும் கூறினார்.

தவறான நிர்வாகம்
தவறான நிர்வாகம் மற்றும் வளர்ச்சியின்மை ஆகியவற்றில் இருந்து தப்பிக்கும் முயற்சியில் மக்களை பிளவுபடுத்தும் செயல்திட்டங்களில் பிஸியாக வைத்திருப்பதன் மூலம் பாஜக மக்களை தவறாக வழிநடத்துகிறது என்று குற்றம் சாட்டிய பிரியங்கா, வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம், விவசாயிகள் பிரச்சனைகள், பெண்கள் மற்றும் தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகள் - இவைதான் உண்மையான பிரச்சனைகள் எனவும், இந்த முக்கியமான விஷயங்களில் கவனம் செலுத்தாத அரசியல் கட்சிகள், ஆனால் அற்பமான பிரச்சினைகளை எழுப்பிக்கொண்டே இருக்கின்றன. அவர்கள் ஏன் அதைச் செய்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது என சாடினார்.
Recommended Video

தொழிலதிபர்களுக்கு சாதகம்
மக்களைத் தூண்டிவிடவும், மதம் மற்றும் ஜாதியின் அடிப்படையில் பிளவுபடுத்தவும் எளிதாக இருக்கும் வகையில், வேண்டுமென்றே மக்களை நிதி நெருக்கடியிலும், வேலையின்மையிலும் பாஜக வைத்திருப்பதாக குற்றம் சாட்டிய பிரியங்கா காந்தி, பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி, கடுமையான கோவிட் லாக்டவுன்கள் இருக்கும் என்று யாரும் நினைத்துப் பார்க்கவில்லை, பா.ஜ., தலைமையிலான அரசு, பெரிய தொழிலதிபர்களுக்கு சாதகமாக, சாமானியர்களை விலைக்கு வாங்குவதாகவும் ஆவேசமாக பேசினார்.
-
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்!












Click it and Unblock the Notifications