நீங்கல்லாம் மனுஷங்களாயா? நெஞ்சுவலி என மருத்துவமனைக்கு போன பெண்! மயக்க மருத்தைக் கொடுத்து.. உபி ஷாக்!
லக்னோ : பாஜகவை சேர்ந்த யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ள உத்தர பிரதேச மாநிலத்தில் மயக்க மருந்து கொடுத்து மருத்துவரும் அவரது உதவியாளரும் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
உத்திரபிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு பாலியல் ரீதியான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை விடுத்தாலும் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான அத்துமீறல்கள் அதிகரித்து வருகிறது.
உத்திரபிரதேசம் மாநிலம் தான் வன்கொடுமை சம்பவங்களில் முன்னிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் நான்கு பேர் பாலியல் வன்கொடுமை சம்பவங்களால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது மருத்துவமனையிலேயே அரங்கேறியுள்ள அதிர்ச்சி சம்பவம் தான் பலரையும் கொந்தளிப்பில் ஆழ்த்தி இருக்கிறது.

உபியில் ஷாக்
கடவுளுக்கு அடுத்தபடியாக மக்கள் நம்புவதும் வணங்குவதும் மருத்துவர்களை தான் அப்படி ஒரு மருத்துவரை நம்பி மருத்துவமனைக்கு நெஞ்சுவலி என சிகிச்சை பெற வேண்டும் பெண்ணை மருத்துவர் அவரது உதவியாளரும் மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்திருக்கின்றனர். உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ அருகே உள்ள மகாநகர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

மயக்க மருந்து
இதை அடுத்து வீட்டில் யாரும் இல்லாத நிலையில் அந்த பெண்ணே அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றிருக்கிறார். அப்போது அவரை சோதித்த மருத்துவர் மருந்து தருவதாக கூறி மயக்க மருந்தை கொடுத்திருக்கின்றனர். இதனால் அந்த சிறிது நேரத்திலேயே பெண் மயக்கம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவரும் அவரது உதவியாளரும் தனி அறையில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்திருக்கின்றனர்.

பெண் பலாத்காரம்
இந்த நிலையில் சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிந்த அந்தப் பெண் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தெரிந்து கொண்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார். இதை அடுத்து தனது குடும்பத்தினர் உதவியுடன் அருகில் உள்ள மகாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். இதை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அரசு மருத்துவமனையின் மருத்துவர் மற்றும் உதவியாளரை கைது செய்திருக்கின்றனர்.

பாஜக அரசு
மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற பெண்ணை மயக்க மருந்து கொடுத்து மருத்துவரே பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இதனிடைய உத்திரபிரதேசத்தில் பாஜக அரசு போலியான வாக்குறுதிகளையும் என்கவுண்டர்களையும் நடத்துவதில் காட்டும் கவனத்தை பெண்களை பாதுகாப்பதில் செலுத்த தவறி விட்டதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம் சாட்டி வருகின்றன. அரசு மருத்துவமனையில் நடந்துள்ள இந்த சம்பவம் யோகி ஆதித்யநாத் அரசுக்கு பலத்த நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
-
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications