லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்து ஓட்டுக்களைப் பிரிக்கும் திரிணாமுல் காங்கிரஸ் - உபி. பிரசாரத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

By
Google Oneindia Tamil News

லக்னோ: கோவா மாநிலத்தில் இந்து வாக்குகளை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பிரிக்க முயற்சிப்பதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் இரண்டாம் கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் பிரசாரத்தில் ஈடுபட்டார் பிரதமர் மோடி.

EOS-04 உள்பட 3 செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்ந்த பிஎஸ்எல்வி ராக்கெட்! சிறப்புகள் என்ன? EOS-04 உள்பட 3 செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்ந்த பிஎஸ்எல்வி ராக்கெட்! சிறப்புகள் என்ன?

உத்தரப்பிரதேசத்தில் தற்போது ஆட்சியில் இருக்கும் பாஜகவை மீண்டும் வெற்றி பெறச்செய்து, ஆட்சியில் அமர்த்த பாஜக தொடர் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

பிரதமர் மோடி

பிரதமர் மோடி


உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் நடைபெற்ற பேரணியில் பிரதமர் மோடி பேசுகையில், '' கோவாவில் இந்து வாக்குகளை பிரிக்க திரிணாமுல் காங்கிரஸ் முயற்சிக்கிறது. இதை அக்கட்சியே வெளிப்படையாக கூறியுள்ளது. திரிணாமுல் கூறியதை தேர்தல் ஆணையம் கவனிக்க வேண்டும்" என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

கோவா

கோவா

கோவா மாநிலத்தில் பாஜக ஆட்சி செய்து வருகிறது. கோவா அரசின் ஆட்சிக்காலம் முடிவடையவுள்ளது. புதிய அரசைத் தேர்ந்தெடுக்க இன்று கோவாவில் தேர்தல் நடக்கிறது. கோவாவில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிக்குத்தான் இதுவரை போட்டி இருந்தது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் கோவா தேர்தல் களத்தில் பரபரப்பாக இயங்கி வருகின்றன.

திரிணாமுல்

திரிணாமுல்

இந்த பாஜக அரசு ஆட்சியில் அமர ஆதரவளித்த மாநில கட்சியுடன் திரிணாமுல் கட்சி கூட்டணியில் இருக்கிரது. இதனால் குறிப்பிட்ட சில இடங்களை திரிணாமுல் கட்சி வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோவாவின் கட்சிப் பொறுப்பாளரான திரிணாமுலின் மஹுவா மொய்த்ரா, சுதின் தவாலிகர் தலைமையிலான மகாராஷ்டிராவாடி கோமந்தக் கட்சி அல்லது எம்ஜிபி உடனான கூட்டணி கடலோர மாநிலத்தில் இந்து வாக்குகளை ஒருங்கிணைப்பதைத் தடுக்கும் என்று கூறியிருந்தார்.

இந்து ஓட்டுகள்

இந்து ஓட்டுகள்

திரிணாமுல் கட்சிப் பொறுப்பாளர் இந்து ஓட்டுகள் குறித்துப் பேசியதும், பாஜக அதை கையில் எடுத்துள்ளன. இந்நிலையில்தான் பிரதமர் மோடி, இந்து ஓட்டுகள் குறித்து பேசியதற்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். கோவாவில் கூட்டணியின் உதவியின்றி எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்காது என்று திரிணாமுல் கட்சியின் கூட்டணி தெரிவித்துள்ளது.

சமாஜ்வாதி

சமாஜ்வாதி

கான்பூர் பேரணியில் பேசிய பிரதமர் மோடி, அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி உத்தரபிரதேசத்தை இரவும் பகலும் கொள்ளையடிப்பதாக குற்றம் சாட்டினார். இவர்கள் மாஃபியாக்களுக்கு உதவி செய்தனர். இவர்கள் குடும்பத்தினருக்கு மாநிலத்தின் பகுதிகளை விநியோகம் செய்தனர். அவர்கள் ஆட்சியில் இருந்திருந்தால், மாநிலம் முழுவதும் மாஃபியாக்கள் வந்திருப்பார்கள்'' என்று பிரதமர் குற்றம் சாட்டியுள்ளார்.

English summary
"Trinamool Wants To Split Hindu Votes In Goa"says Prime Minister Narendra Modi in Uttar Pradesh kanpur campaign rally. He asked election commission to take necessary action.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X