"எனது மரணத்திற்காக பிரார்த்தனை.. இதை கேட்டு நான் என்ன செய்தேன் தெரியுமா" பிரதமர் மோடி உருக்கம்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் 7 கட்டங்களாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், அங்குப் பிரசாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி உருக்கமாகப் பேசினார்.
உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் 7 கட்டங்களாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், இன்றுடன் அங்கு 5 கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. அடுத்து வரும் மார்ச் 3ஆம் தேதி 6ஆம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.
வடகிழக்கு உத்தரப் பிரதேசத்தில் உள்ள 10 மாவட்டங்களில் மொத்தம் 57 தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் பல்வேறு அரசியல் தலைவர்களும் அங்குத் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பிரதமர் மோடி
அதன்படி இன்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி அங்கு நேரடியாகப் பிரசாரம் செய்தார். வாரணாசியில் பிரசாரம் செய்த பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு நடத்தினார். முன்னதாக பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, "சில அரசியல் எதிரிகள் எனது மரணத்திற்கான பிரார்த்தனை செய்துள்ளனர். நமது அரசியலில் உள்ள சிலர் எந்தளவு தாழ்ந்து சென்றுவிட்டது என்பதையே இது காட்டுகிறது.

மகிழ்ந்தேன்
ஆனால் எனது மரணத்திற்காக அவர்கள் காசியில் பிரார்த்தனை செய்தார்கள் என் செய்தியைக் கேட்டு நான் மகிழ்ச்சியே அடைந்தேன். நான் சாகும் வரை காசியை விட்டு வெளியே போக மாட்டேன். அல்லது இதன் மக்கள் கடைசி வரை என்னை விட்டுச் செல்லமாட்டார்கள்" என்று அவர் பேசினார். பிரதமர் மோடி சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவை சாடும் வகையிலேயே இப்படிப் பேசியுள்ளதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். ஏனென்றால், தேர்தல் அறிவிக்கப்படும் முன்பு பிரதமர் நரேந்திர மோடி உபி-இல் நடைபெற்ற பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் தொடர்ச்சியாகப் பங்கேற்றார்.

அகிலேஷ் யாதவ்
இதை விமர்சித்த அகிலேஷ் யாதவ், "நல்ல விஷயம் தான். அவர்கள் ஒரு மாதம் மட்டுமல்ல, எத்தனை மாதங்கள் கூட அங்கே தங்கலாம். மக்கள். தங்கள் கடைசி நாட்களை வாரணாசியில் கழிக்க வேண்டும் என்று பொதுவான ஒரு பழமொழி உள்ளது" என்று தெரிவித்தார். அகிலேஷ் யாதவின் இந்தக் கருத்துக்கு பல்வேறு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அகிலேஷ் யாதவின் இந்தக் கருத்தைக் குறிப்பிடும் வகையிலேயே பிரதமர் மோடி இன்று பேசியுள்ளார்.

வாரணாசி
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014 முதல் வாரணாசியில் தொகுதியில் தான் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த வாரணாசியில் மார்ச் 7 ஆம் தேதி கடைசிக் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாரணாசி மக்களவை தொகுதியில் வாரணாசி வடக்கு, வாரணாசி தெற்கு, வாரணாசி கண்டோன்மென்ட், சேவாபுரி மற்றும் ரோஹனியா என மொத்தம் 5 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. கடந்த 2017 சட்டசபைத் தேர்தலில், அப்னா தளம் (சோனேலால்) என்ற கட்சி ஒரு இடத்திலும், பாஜக மீதமுள்ள 4 இடங்களையும் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் அட்டாக்
முன்னதாக இன்றைய தினம் வாரணாசியில் பாஜக பூத் முகவர்களுடன் உரையாடும் போது பிரதமர் மோடி, சமாஜ்வாடி கட்சியைச் சாடினார். அகிலேஷ் ஆட்சியில் பயங்கரவாதிகள் எந்த அச்சமும் வெளியே சுற்றியதாகவும் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி தலைவர்கள் ஒசாமா போன்ற பயங்கரவாதிகளைக் கூட ஜி என்று அழைப்பவர்கள் என்றும் சாடினார், 7 கட்டங்களாக நடைபெறும் உத்தரப் பிரதேச தேர்தல் முடிவுகள் வரும் மார்ச் 10ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளனர்.
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications