லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒரே போடு.. "ம்ஹூம்.. வேற வழியேயில்லை.. உ.பி மக்களுக்கு ஒரே சான்ஸ்தான்".. சச்சின் பைலட் நச்

உத்தரபிரதேச தேர்தல் குறித்து சச்சின் பைலட் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

லக்னோ: உத்தரபிரதேச மக்களுக்கு இப்போதைக்கு இருப்பது ஒரே ஒரு சான்ஸ்தான்.. அது காங்கிரசுக்கு ஓட்டு போடுவதுதான்" என்று சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் மிக முக்கியமான மாநிலமான உத்தரபிரதேசத்தின் தேர்தல், பாஜகவுக்கும், காங்கிரசுக்கும் மிகவும் முக்கியமான தேர்தலாக கருதப்படுகிறது...

7 கட்டங்களாக இங்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது... பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கும் தேர்தல் மார்ச் 7ம்தேதி வரை நடக்கிறது.

இப்ப லோக்சபா தேர்தல் நடந்தாலும் பாஜக அணி அசால்ட்டாக 296 இடங்களை கைப்பற்றும்: இந்தியா டுடே கணிப்பு இப்ப லோக்சபா தேர்தல் நடந்தாலும் பாஜக அணி அசால்ட்டாக 296 இடங்களை கைப்பற்றும்: இந்தியா டுடே கணிப்பு

பிரச்சாரம்

பிரச்சாரம்

இதற்கான பிரச்சாரங்களில் அரசியல் கட்சிகள் தீவிரமாய் இறங்கி உள்ளன.. மற்றொருபக்கம் சீட் பிரச்சனை வெடித்து வருகிறது.. வேட்பாளர் லிஸ்ட்டை அந்தந்த கட்சிகள் வெளியிட்டு வரும்நிலையில், சீட் கிடைக்காத பலர் அதிருப்திக்கு ஆளாகி வருகின்றனர்.. இதனால், கட்சி விலகலும், கட்சி தாவலும் இயல்பாய் நடந்து கொண்டிருக்கிறது.

 எம்எல்ஏக்கள்

எம்எல்ஏக்கள்

காங்கிரஸ் மட்டுமல்லாமல், பாஜகவிலிருந்தும் மூத்த தலைவர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் வெளியேறி வருகின்றனர்.. இப்படி வெளியேறியவர்கள், காங்கிரசுக்கு செல்லுவது வழக்கம்.. ஆனால், இந்த முறை, பாஜகவில் இருந்து விலகிய முக்கிய தலைகள், அதாவது சுவாமி பிரசாத் மவுரியா, தரம்சிங் சைனி ஆகியோர் அகிலேஷ் யாதவ் முன்னிலையில் சமாஜ்வாதி கட்சியில் இணைந்துவிட்டனர்.. முன்னணி தலைவர்கள் சமாஜ்வாதி கட்சியில் இணைவது தேசிய அளவில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.

 காங்கிரஸ் கட்சி

காங்கிரஸ் கட்சி

அதாவது காங்கிரஸ் கட்சியில் சேருவதற்கு பெருமளவில் யாரும் ஆர்வம் காட்டாமல் உள்ளனர்.. ஏற்கனவே தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளில், பெரும்பாலும் பாஜகவே வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது.. இதுவரை வந்த அனைத்து கணிப்புகளிலும், பாஜகவே வெல்லும் என்பதுடன், காங்கிரஸ் கட்சி சிங்கிள் டிஜிட் ரீதியில் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே வெற்றி பெறும் என்று கணிப்புகள் வெளியாகி உள்ளன.. இந்த கணிப்புகளும் காங்கிரசுக்கு பலவீனத்தை தந்து வருகிறது.. இப்படிப்பட்ட சூழலில்தான், அக்கட்சியில் இருப்போருக்கு லேசான கலக்கம் எட்டி பார்த்துள்ளது போலும்.. உபி மாநில மக்களுக்கு சச்சின் பைலட் ஒரு ஆப்ஷன் தந்திருக்கிறார்.

 ஒரே சான்ஸ்

ஒரே சான்ஸ்

காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர்களில் ஒருவரும், ராஜஸ்தானின் முன்னாள் துணை முதல்வருமான சச்சின் பைலட் செய்தியாளர்களிடம் ஒரு பேட்டி தந்துள்ளார்.. அதில், "உத்தரபிரதேச தேர்தலில் பாஜக ஏற்கனவே தோல்வியடைந்து விட்டது என்று நான் நம்புகிறேன்... கொஞ்சம் யோசிச்சு பாருங்க.. பெண்களுக்கு 40 சதவீத வேட்புமனுவை காங்கிரஸ் மட்டுமே தரப்போகிறது... காங்கிரஸ் தன்னுடைய தேர்தல் அறிக்கையில் விவசாயிகளின் நலன்களை பற்றி நினைக்கிறது.. அதைபற்றி விரிவாக பேசுகிறது... அதனால், காங்கிரசுக்கு ஓட்டுப் போடுவது மட்டுமே உத்தரபிரதேச மக்களுக்கு எஞ்சியிருக்கும் ஒரே சான்ஸ்..

 பெருத்த அமைதி

பெருத்த அமைதி

அதேமாதிரி, அகிலேஷ் யாதவ், மாயாவதி எதிர்க்கட்சியாக எங்குமே இங்கு காணப்படவில்லை.. தேர்தல் நெருங்குவதால்தான், அகிலேஷ் யாதவ், தெருக்களில் தோன்ற ஆரம்பித்துள்ளார்.. ஆனால் இந்த 3 வருஷங்களாக எங்கே போனார்? ஹத்ராஸ் பலாத்கார சம்பவம், லக்கிம்பூர் கெரி விவசாயிகள் சம்பவம் இதுக்கெல்லாம் அகிலேஷ் வாய் திறந்தாரா? அமைதியாகத்தானே இருந்தார்?

Recommended Video

    India Today Mood Of the nation 2022 Survey | Oneindia Tamil
     தோல்வியில் பாஜக

    தோல்வியில் பாஜக

    விவசாயிகள் பிரச்சினைகளுக்கும் வாய் திறக்கவில்லை.. சுரண்டப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான வன்கொடுமைகளுக்கும் வாய் திறக்கவில்லை.. அவர் மட்டுமல்ல, மாயாவதியும்தான்.. இப்போது பாஜகவில் இருந்தே பலர் வெளியேறி வருகிறார்கள் என்றால் என்ன காரணம்? பாஜகவின் தோல்வி பயம்தான்.. இதுதான், அக்கட்சியின் அமைச்சர்கள், எம்எல்ஏக்களை வேறு கட்சிகளுக்கு செல்ல வைக்கிறது.. முன்பெல்லாம் பாஜக தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேறவில்லை... இப்போதுதான் அது நடக்க ஆரம்பித்துள்ளது.. அதனால்தான் சொல்கிறேன், பாஜக ஏற்கனவே இங்கு தோல்வியடைந்துவிட்டது" என்றார்.

    English summary
    UP assembly Election 2022: Congress is only alternative for people in Uttar pradesh polls says Sachin pilot
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X