அடிக்கப் பாய்ந்த நிர்வாகி.. விழுந்து விழுந்து சிரித்த அகிலேஷ் யாதவ்.. உ.பி. தேர்தலில் புது பரபரப்பு
லக்னோ: உத்தரபிரதேச தேர்தல் பிரசாரத்தில் சமாஜ்வாதி கட்சி நிர்வாகியை அடிக்கச் சென்றார் அக்கட்சியின் பொதுச்செயலாளர். அதை அகிலேஷ் யாதவ் பார்த்து சிரிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளன. இதற்கான வேலைகளை அனைத்து மாநில கட்சிகளும் துரிதமாக செயல்படுத்தி வருகின்றன.
உத்தரப்பிரதேசத்தில் 403 தொகுதிகளுக்குமான சட்டசபைத் தேர்தல் வரும் பிப்ரவரி 10-ஆம் தேதி முதல் மாா்ச் 7-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. மார்ச் 10ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

உத்தரப்பிரதேசம்
உத்தரபிரதேசத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அங்கு அனைத்துக் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. பிரசாரத்தின் தீவிரம் ஒருபுறம் அதிகரிக்க அதிகரிக்க, மறுபுறம் அவற்றில் பல சுவாரசியமான நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன. பாஜக, சமாஜ்வாதி கட்சி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் என அனைத்துக் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.

சமாஜ்வாதி பிரசாரம்
ஆக்ரா மாவட்டத்தில் உள்ள பாஹ் தொகுதியில் சமாஜ்வாதி சார்பில் தேர்தல் பிரசாரம் நடைபெற்றது.அந்த பிரசாரத்தில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கலந்து கொண்டார். தேர்தல் பிரசாரம் ஆரம்பித்து, மேடையில் தலைவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது, சமாஜ்வாதி பொதுச் செயலாளர் ராம்ஜிலால் சுமன் பேசிக் கொண்டிருக்கும் போது, மேடையில் அமர்ந்திருந்த அகிலேஷ் யாதவிடம் கட்சியின் ஆக்ரா மாவட்ட தலைவர் ஜிதேந்திர வர்மா உரையாடிக் கொண்டிருந்தார்.

அடிக்கப் பாய்ந்தார்
இதனை கவனித்த ராம்ஜிலால் சுமன், திடீரென பேச்சை நிறுத்தினார். அதையடுத்து அகிலேஷ் யாதவுடன் பேசிக் கொண்டிருந்த ஜிதேந்திர வர்மாவை அடிக்கப் பாய்ந்தார் ராம்ஜிலால். இதனால் அங்கு என்ன நடந்தது என எல்லோரும் கவனிக்க சில நொடிகள் அகிலேஷ் யாதவ் உட்பட மேடையில் இருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

சிரிப்பலை
ராம்ஜிலால் அடிக்காமல் கையை மட்டும் உயர்த்திவிட்டு, வர்மாவை அடிக்காமல் மீண்டும் பேச சென்றார். இதனைக் கண்ட அகிலேஷ் யாதவ் சிரிப்பை அடக்க முடியாமல் விழுந்து விழுந்து சிரித்தார். இதைப்பார்த்து பிரசாரத்தைப் பார்க்க வந்த அனைவரும் சிரித்தனர். அகிலேஷ் யாதவ் தேர்தல் பிரசார மேடையில் சிரித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications