லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஓரின சேர்க்கை கொடியுடன் சிகரெட் புகைக்கும் காளி.. லீனா மணிமேகலை மீது உ.பி., டெல்லி போலீஸ் வழக்கு

Google Oneindia Tamil News

லக்னோ: காளி தெய்வம் வேடமணிந்த பெண் ஒருவர் ஓரின சேர்க்கை கொடியுடன் சிகரெட் பிடிக்கும் போஸ்டரை வெளியிட்ட ஆவணப் பட இயக்குநர் லீனா மணிமேகலை மீது உ.பி. போலீசார் 10 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதேபோல் டெல்லி போலீசாரும் லீனா மணிமேகலை மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Recommended Video

    கையில் சிகரெட்டுடன் காளி! சர்ச்சையில் சிக்கிய Leena Manimegalai என்ன நடந்தது?

    ஆவணப் பட இயக்குநர் லீனா மணிமேகலை ஏற்கனவே சர்ச்சை, வழக்குகளில் சிக்கியவர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமது காளி ஆவணப் படத்தின் போஸ்டரை சமூக வலைதளங்களில் லீனா மணிமேகலை ரிலீஸ் செய்திருந்தார்.

    லீனா மணிமேகலையின் இந்த ஆவணப் பட போஸ்டர் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியையும் பெரும் சர்ச்சையையும் கிளப்பிவிட்டுள்ளது. காளி தெய்வம் வேடமணிந்த பெண் ஒருவர், சிகரெட் புகைத்தபடி காட்சி தருகிறார்.. அவர் அருகே ஓரினச் சேர்க்கையாளர்கள் பயன்படுத்தும் வானவில் கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.

    ஓரின சேர்க்கை கொடியுடன் சிகரெட் புகைக்கும் காளி.. லீனா மணிமேகலை மீது உ.பி. போலீஸ் வழக்கு ஓரின சேர்க்கை கொடியுடன் சிகரெட் புகைக்கும் காளி.. லீனா மணிமேகலை மீது உ.பி. போலீஸ் வழக்கு

    லீனாவின் கருத்து

    லீனாவின் கருத்து

    இந்து கடவுள்களை திட்டமிட்டு அவதூறு செய்கிறார் லீனா மணிமேகலை என்ற புகார்கள் அனல் பறந்தன. சமூக வலைதளங்களில் #Arrestleenamanimekalai என்பது டிரெண்டிங்கானது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த லீனா மணிமேகலை, ஒரு மாலைப்பொழுது, டோரோண்டோ மாநகரத்தில காளி தோன்றி வீதிகளில் உலா வரும்போது நடக்கிற சம்பவங்கள் தான் படம். படத்தைப்பார்த்தா "arrest leena manimekalai" hashtag போடாம "love you leena manimekalai" hashtag போடுவாங்க என கூறியுள்ளார். மேலும் எனக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை. இருக்கும் வரை எதற்கும் அஞ்சாமல் நம்புவதைப் பேசும் குரலோடு இருந்துவிட விரும்புகிறேன். அதற்கு விலை என் உயிர் தான் என்றால் தரலாம்" எனவும் லீனா மணிமேகலை தெரிவித்துள்ளார். லீனாவுக்கு ஆதரவாகவும் சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டும் வருகின்றனர்.

    உ.பி. போலீஸ் வழக்கு

    உ.பி. போலீஸ் வழக்கு

    இதனிடையே லீனா மணிமேகலையை கைது செய்யக் கோரி போலீசில் பல இடங்களில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், உ.பி. போலீசார் லீனா மணிமேகலை மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதேபோல் டெல்லி போலீசாரும் லீனா மணிமேகலை மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    டெல்லியில் வழக்கு

    டெல்லியில் வழக்கு

    டெல்லியில் லீனா மணிமேகலை மீது இரு புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த புகார்களின் அடிப்படையில் லீனா மணிமேகலை மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஐபிசி 153A, 295A ஆகிய பிரிவுகளில் டெல்லி போலீசார் லீனா மணிமேகலை மீது முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர்.

    2017 சர்ச்சை

    2017 சர்ச்சை

    கடந்த 2017-ம் ஆண்டு Sexy Durga என்ற தலைப்பில் மலையாள படத்தை இயக்கப் போவதாக இயக்குநர் Sanal Kumar Sasidharan அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதற்கு அப்போது கடும் எதிர்ப்பு எழுந்தது. இதனையடுத்து தமது படத்தின் தலைப்பை S Durga என அவர் மாற்றியது குறிப்பிடத்தக்கது.

    English summary
    UP police register FIR on charges of criminal conspiracy, offense in place of worship, deliberately hurting religious sentiments, intention to provoke breach of peace against filmmaker Leena Manimekalai for her movie 'Kaali'.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X