உத்தரபிரதேசம்: கடைக்கு வாடிக்கையாளர்களை அழைப்பதில் போட்டி... கடைக்காரர்கள் அடிதடி - 8 பேர் கைது

உத்தரபிரதேசம் மாநிலம் பக்பத் மாவட்டத்தில் இரு தரப்பு வியாபாரிகளிடையே கடுமையான சண்டை நிகழ்ந்தது. இந்த சண்டையில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். காவல்துறையினர் 8 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Subscribe to Oneindia Tamil

லக்னெள: கைகளில் நீளமான குச்சிகளாலும் பிளாஸ்டிக் பைப்களைக் கொண்டும் ஒருவரை ஒரு அடித்து சாய்த்தனர். பார்ப்பவர்களுக்கு இது மிகப்பெரிய கலவரம் போல தோன்றலாம். இது கலவரம் இல்லை. கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை கவர்வதில் ஏற்பட்ட சண்டைதான் இப்படி மிகப்பெரிய தகராறில் முடிந்தது. காவல்துறையினர் 8 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

UPs Baghpat as vendors clash over customers 8 people arrested

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பாக்பத் மாவட்டத்தில் உள்ள சந்தையில் கடைக்காரர்களின் இரண்டு குழுக்கள் அந்தந்த கடைகளுக்கு வாடிக்கையாளர்களை ஈர்ப்பதில் ஏற்பட்ட பிரச்சினை முற்றி இப்படி மோதலில் முடிந்தது.

ஆள் ஆளுக்கு கைகளில் சிக்கிய கட்டைகள், பிளாஸ்டிக் பைப்புகளைக் கொண்டு தாக்கினர். தப்பித்து ஓடிய நபரை விடாமல் 3 பேர் தாக்க, அவரும் கைக்கு சிக்கிய கட்டையை எடுத்து தன்னை தாக்கிய நபர்களை அடி வெளுத்தார். இந்த தாக்குதல் சம்பவத்தை வீடியோவாக எடுத்து அதை சிலர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோவை பலரும் ஷேர் செய்து கமெண்டுகளை பதிவிட்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மோதலில் ஈடுபட்ட 8 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். வாடிக்கையாளர்களை கடைக்கு அழைப்பது தொடர்பாக கடைக்காரர்களிடையே மோதல்கள் ஏற்பட்டன. இதில் அந்த இடத்தில் இருந்த அப்பாவிகள் சிலரும் காயமடைந்தனர். பத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். இந்த அடிதடி வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+