லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"அந்த இடத்தில்" கரண்ட் ஷாக்.. வெந்து துடித்த இளைஞர்.. பாஜக மாநிலங்களில் நீளும் "மாட்டிறைச்சி" பகீர்

ஆணுறுப்பில் கரண்ட் ஷாக் தந்து டார்ச்சர் செய்துள்ளனர் வடமாநில போலீசார்

Google Oneindia Tamil News

லக்னோ: வடமாநிலங்களில் அப்பாவிகள் மீதான வன்முறை தாக்குதல்கள் நாளுக்கு நாள் பெருகி கொண்டிருக்கிறது.. அந்த வகையில் ஒரு கொடூரம் போலீஸ் ஸ்டேஷனில் நடந்துள்ளது.

இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.. குறிப்பாக மாட்டிறைச்சி தடை குறித்த அறிவிப்புக்கு பிறகு, பசு பாதுகாப்பு அமைப்பினரால் தாக்குதல்கள் அதிகரித்து, கொலைகளும் நடைபெற்று வருகின்றன.

180 நாடுகள் பட்டியலில் கடைசி இடத்தில் இந்தியா! சுற்றுச்சூழல் செயல்திறன் மதிப்பீட்டு ஆய்வில் ‛பகீர்’ 180 நாடுகள் பட்டியலில் கடைசி இடத்தில் இந்தியா! சுற்றுச்சூழல் செயல்திறன் மதிப்பீட்டு ஆய்வில் ‛பகீர்’

மாட்டிறைச்சி கடைகளுக்கும், மார்கெட்டுகளுக்கும் கொண்டு போய் விற்கவும் முடியாத அளவுக்கு பீதி, கலக்கம் நிலவுகின்றன.. பெரும்பாலும் வடமாநிலங்களில்தான் இக்கொடுமைகளின் அக்கிரமங்கள் நடக்கின்றன.

இறைச்சி

இறைச்சி

2017-ல், பெலுகான் என்பவர் ஜெய்ப்பூரில் இருந்து சில பசுமாடுகளை வாங்கி கொண்டு தன்னுடைய ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.. அப்போதுதான், பசுபாதுகாவலர்கள் என்ற பெயரில் சில குண்டர்கள் அவரை வழிமறித்தனர்.. இறைச்சிக்காக மாடுகளை கடத்துவதாக சொல்லி அவரை சரமாரியாக தாக்கினர்.. கடைசியில் இதில் பெலுகான் சுருண்டு விழுந்து இறந்தே விட்டார்.. இப்படித்தான் மெல்ல மெல்ல, பசுபாதுகாவலர்கள் தலைதூக்கினர்.

 பாஜக ஆட்சி

பாஜக ஆட்சி

"பசு மாடுகளை யாராவது கடத்தினாலும் சரி, வெட்டினாலும் சரி, கொல்லப்படுவார்கள்" என்று பாஜக எம்எல்ஏவே ஒருமுறை சொல்லி இருந்ததை நாம் இங்கு நினைவுகூற வேண்டி உள்ளது... நாளுக்கு நாள், இந்தியாவில் பசு பாதுகாக்கப்பட வேண்டும் என்ற முழக்கத்தை முன்வைத்து மனித உயிர்களை தாக்குவதும், கொடூரமாக அடித்து கொல்வதும் நின்றபாடில்லை.. அதுவும் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு இது மேலும் அதிகரித்துள்ளது... அதுவும் பாஜக அரசால் கொண்டு வரப்பட்ட மாட்டிறைச்சி விற்பனை தடை சட்டத்திற்கு பிறகு இது இன்னும் அதிகரித்துள்ளது..!

 மாடு திருடினாரா?

மாடு திருடினாரா?

இப்போதும் ஒரு கொடுமை உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.. அந்த இளைஞர் பெயர் ரெஹான் .. மாடு திருடியதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.. இது தொடர்பான புகாரும் போலீசுக்கு போனது.. இவர்தான் மாடு திருடினாரா என்பதை விசாரிக்க போலீசாரும், இவரை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.. ஆனால் எதுவுமே விசாரிக்காமல், லாக்கப்பில் வைத்து அடித்து உதைத்துள்ளனர்..

 ஆணுறுப்பு

ஆணுறுப்பு

அந்த ஸ்டேஷனின் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் சேர்ந்து, தடியால் அடித்து சித்ரவதை செய்துள்ளனர்.. இதன் உச்சக்கட்டமாக, அந்த இளைஞரின் ஆணுறுப்பில் கரண்ட் ஷாக் தந்துள்ளனர்.. இதனால் வலியால் அந்த இளைஞர் துடிதுடித்து அலறியுள்ளார்.. திடீரென மகனை ஸ்டேஷனுக்கு அழைத்து போய்விட்டார்கள் என்பதை கேள்விப்பட்டு, பதறிக் கொண்டு அவரது குடும்பத்தினர் வந்தனர்.. அப்போதுதான், இளைஞருக்கு நடந்த இந்த கொடுமை தெரியவந்தது.. அதுமட்டுமல்ல,

 சஸ்பெண்ட்

சஸ்பெண்ட்

இவ்வளவு சித்ரவதை செய்ததுடன், ரெஹானேவை விடுவிக்க போலீசார் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டிருக்கிறார்கள்.. 5 ஆயிரமா? என்று அதிர்ந்து போன குடும்பத்தினர், எங்கெங்கோ அலைந்து திரிந்து 5 ஆயிரம் தந்துள்ளனர்.. அதற்கு பிறகுதான் இளைஞரை ஜாமீனில் விடுவித்துள்ளனர்.. இளைஞரின் ஆணுறுப்பில் அளவுக்கு அதிகமான காயம் ஏற்பட்டிருந்ததையடுத்து, உயர் அதிகாரிகளிடம் புகார் தரப்பட்டது.. அந்த புகாரின்பேரில் போலீசார் வாக்கு பதிவு செய்து, சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனில் உள்ள இன்ஸ்பெக்டர் மற்றும் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்...

 எளியோர்கள்

எளியோர்கள்

இப்போதைக்கு 4 பேர் இந்த வழக்கு தொடர்பாக சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள்.. பாதிக்கப்பட்ட நபர் பசு கடத்தல் கும்பலுக்கு உதவியதாக போலீஸார் குற்றம் சாட்டினாலும், அது தொடர்பாகவும் விசாரணை நடந்து வருகிறது.. ஆக மொத்தம் அந்த இளைஞர் பசுவை திருடவேயில்லை.. திருடுவதற்கு உதவியாக இருந்திருக்கலாம் என்ற சந்தேகம்தான் வந்துள்ளது.. அதையும் முழுமையாக விசாரிப்பதற்கு முன்பாகவே, இப்படி ஒரு கொடுமையை செய்திருக்கிறார்கள் வடமாநில போலீஸார்.. "எளியோர்கள்" மீதான தாக்குதல்கள் முதலில் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்..!

English summary
When will the attacks on innocent people end in north india and torture by giving current shock in the penis ஆணுறுப்பில் கரண்ட் ஷாக் தந்து டார்ச்சர் செய்துள்ளனர் வடமாநில போலீசார்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X