“யோகி ஆதித்யநாத் எனும் நான்”.. முதல்வர் ஆனாலும் மடத்தின் அதிபதி.. கோரக்பூர் கோவிலில் பூசாரி.. !
லக்னோ : உத்திரப்பிரதேச மாநில முதல்வராக இரண்டாவது முறையாக யோகி ஆதித்யநாத், லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் பதவி ஏற்றுக்கொண்டார். இந்தியாவின் மிகப்பெரிய மாநில முதல்வர் ஆன போதிலும் தற்போது வரை அவர் ஒரு கோவிலின் பூசாரியாக இருந்து வருகிறார்.
Recommended Video
உத்தர பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. இதையடுத்து புதிய ஆட்சியமைக்கும் பணிகளை பாஜக தொடங்கியது.
மொத்தம் உள்ள 403 இடங்களில் பாஜக 255 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் முதல்வரை தேர்ந்தெடுப்பதற்காக பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது.

முதல்வர் யோகி ஆதித்யநாத்
உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தற்போதைய முதல்வர் யோகி ஆதித்யநாத், சட்டமன்ற கட்சி தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து அவர் எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதத்துடன், ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். யோகி பதவியேற்க ஆளுநர் அழைப்பு விடுத்த நிலையில் இன்று பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

லக்னோவில் பதவியேற்பு விழா
உத்தரபிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் இரண்டாவது முறையாக பதவியேற்கவுள்ள நிலையில், பதவியேற்பு விழாவையொட்டி லக்னோவில் அடல் பிஹாரி வாஜ்பாய் ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். அங்கு பதவியேற்புக்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்த நிலையில், அடுத்தடுத்த பாஜக முக்கிய பிரமுகர்கள் வருகை புரிந்தனர். இதனால் அங்கு உற்சாகம் களைகட்டியது.

பிரதமர் மோடி பங்கேற்பு
தொடர்ந்து பதவியேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தேசிய தலைவர் நட்டா ஹரியானா முதல்வர் எம்எல் கட்டார், இமாச்சல பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதனையடுத்து மாலை சுமார் 40.30 மணியளவில் உபி முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்றுக் கொண்டார். ஆயிரக்கணக்கான மக்களின் உற்சாக வாழ்த்துக்களிடையே அவருக்கு ஆளுநர் ஆனந்தி பென் படேல் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

யோகி ஆதித்யநாத் எனும் நான்
"யோகி ஆதித்யநாத் எனும் நான்" எனக் கூறி பதவி பிரமாணத்தையும் ரகசிய காப்பு பிரமானத்தையும் யோகி ஏற்றுக் கொண்டநிலையில், அவர் கோரக்பூர் மடத்தின் மடாதிபதியாகவும் தொடர்ந்து வருகிறார். கடந்த 1994ம் ஆண்டில் தீட்சை பெற்ற யோகி ஆதித்யநாத், அவரது குருவின் மறைவுக்குப் பின்னர் 2014ம் ஆண்டில் கோரக்நாத் கோயிலின் தலைமை பூசாரியாகப் பொறுப்பேற்றுக் கொண்டார். கோவில் மரபுப்படி, அவருக்கு காதணி அணிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1998ம் ஆண்டு தீவிர அரசியலில் இறங்கிய ஆதித்யநாத், அதே ஆண்டில் நடந்த மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்குள் காலடி எடுத்து வைத்தார்.
-
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்! -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை












Click it and Unblock the Notifications