76வது சுதந்திர தினம்.. மதுரையில் சாதனையாளர்களுக்கு விருதுகள்..இந்தியா உலக வல்லரசாகும் என நம்பிக்கை
மதுரை: நாடெங்கிலும் 76வது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15ஆம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, பல்வேறு துறைகளில் சாதனை புரிந்து, சிறந்து விளங்குவோருக்கு, 'பாரதி யுவகேந்திரா', 'சேவா ரத்னா' விருதுகளை வழங்கிக் கவுரவித்தது.
Recommended Video
மதுரை பாரதி யுவகேந்திரா அமைப்பு சார்பில் 76வது ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு பல்துறையில் சாதனை படைத்தவர்களுக்கு விருது வழங்கும் விழா ஹோட்டல் ஜேசி ரெசிடென்சி அரங்கில் நடைபெற்றது. பாரதி யுவகேந்திரா நிறுவனர் நெல்லை பாலு வரவேற்றார். விழாவில் எழுத்தாளர் லேனா தமிழ்வாணன், ஆடிட்டர் சேது மாதவா, தொழிலதிபர்கள் வினோதன், சூரத் சுந்தரேசங்கர் உட்பட பலர் பேசினர்.

நிகழ்ச்சியில் பல்வேறு துறையில் சாதனை படைத்தவர்களுக்கு சேவா ரத்னா விருதை வழங்கி தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் சிறப்புரை ஆற்றினார்.
நாடு சுதந்திரம் பெற எண்ணற்ற தேசத் தலைவர்கள் செய்த தியாகங்களை, இளைஞர்களுக்கு எடுத்துச் சொல்லும் வண்ணம் கடந்த மூன்று தினங்களாக தேசிய கொடியை நான் வழங்கி வருகிறேன். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு எத்தனையோ சுதந்திர தின விழா நடைபெற்று உள்ளது. ஆனால் அப்போதெல்லாம் அரசு அலுவலகங்கள், பள்ளிக்கூடங்கள், தனியார் நிறுவனங்களில் தான் தேசிய கொடி ஏற்றுவார்கள்.
ஆனால் இந்த 75வது சுதந்திர தின விழாவில் நாட்டுக்காக உழைத்த தியாகிகளுக்கு பெருமை சேர்க்கும் வண்ணம், அனைத்து இல்லங்களிலும் தேசிய கொடியினை ஏற்றுமாறு பாரதப் பிரதமர் வேண்டுகோள் விடுத்தார். அதனை தொடர்ந்து நாடு முழுவதும் அனைத்து இல்லங்களிலும் தேசிய கொடி ஏற்றப்பட்டது. அரசின் சார்பிலேயே சுதந்திர தின விழாவில் விருதுகள் வழங்கப்படுகின்றன.

தற்போது இந்த சுதந்திர தின விழாவில் பல்வேறு துறைகளில் சேவை செய்த சாதனையாளர்களை கௌரவிக்கும் வகையில் பாரதி யுகேந்திர சார்பில், விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் நீங்கள் பல்வேறு சாதனை புரிய இந்த விருது வாய்ப்பாக அமையும். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு கல்வி, பொருளாதாரம் உணவு உற்பத்தி ஆகியவற்றின் 15 சகவீதம் தான் இருந்தோம், ஆனால் இன்றைக்கு முன்னேறி மற்ற நாடுகளுக்கு உணவு தானியங்களை ஏற்றுமதி செய்யும் நிலையில் நமது இந்தியா உயர்ந்திருக்கிறது. அது மட்டுமல்ல வருகின்ற 100 வது சுதந்திர தின விழாவில் கல்வியில், பொருளாதாரத்தில், உணவு உற்பத்தியில் 100% எட்டுவோம்.மேலும் உலக வல்லரசு நாடுகளுக்கு வழிகாட்டும் வகையில் நமது இந்திய தேசம் உயரும் என்று பேசினார்.
விழாவில் சாதனையாளர்களுக்கு ஆர்.பி.உதயகுமார், எழுத்தாளர், பதிப்பாளர் லேனா தமிழ்வாணன் மற்றும் பாரதி யுவகேந்திரா நிறுவனர் நெல்லை பாலு ஆகியோர் கூட்டாக விருதுகளை வழங்கினர். இதில், 1000 க்கும் அதிகமான கோயில்களுக்கு நேரடியாகச் சென்று பல்வேறு இதழ்களில் தொகுத்து எழுதியும், 'தவறாமல் தரிசிக்க வேண்டிய கோயில்கள்' என்ற புத்தகத்தையும் எழுதியுள்ள எழுத்தாளர் மு. ஆதவன் அவர்களுக்கு 'சேவா ரத்னா' விருது வழங்கப்பட்டது.

மாணவர்களின் கற்றல் சூழலை ஊக்குவிக்க, அரசுப்பள்ளிகளில் வண்ணம் தீட்டி, சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளும் 'பட்டாம்பூச்சிகள் குழு' சிறந்த கல்விப்பணிக்கான 'சேவா ரத்னா' விருதினைப் பெற்றது. பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழித்து, இயற்கையைப் பாதுகாக்கும் பணியை செய்து வரும் 'சோலைக்குள் கூடல்' அமைப்புக்கும், 'பாரதி யுவகேந்திரா' விருது வழங்கி கவுரவம் செய்தது. தேனி மாவட்டம், கூடலூர் மற்றும் சுற்றியுள்ள கம்பம் பள்ளத்தாக்குப் பகுதி கிராமங்களில் 6 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டுப் பராமரித்து வருகிறது இந்தக்குழு. இதன் ஒருங்கிணைப்பாளரான தமிழாசிரியர் வே.சீனிவாசன் இந்த விருதினைப் பெற்றுக் கொண்டார்.
ரோட்டரி மாவட்ட ஆளுனர் ஐ.ஜெரால்டு, சுரபி அறக்கட்டளை நிறுவனர் சேது முத்துராஜ், சமூக ஆர்வலர்களான பாண்டீசுவரி, போதிலட்சுமி, திருப்பரங்குன்றம் பாம்பன் சுவாமிகள் ஆசிரம பாலசுப்பிரமணிய சுவாமிகள், மதுரை வானொலி நிலைய மூத்த அறிவிப்பாளர் சண்முக ஞானசம்பந்தன், மூத்த சிலம்பாட்டக் கலைஞர் பி.அன்புசேகர், இந்தியாவின் முதல் இளம் வயது மேஜிக் நிபுணர் எம். முஹம்மத் ஜாஃபர் உள்ளிட்டோருக்கும் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. விழாவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.சரவணன், ஆடிட்டர் எஸ்.எல்.சேது மாதவா, சூரஜ் சுந்தர சங்கர், சி.வினோதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications