மத்தியஅரசை பகைச்சுக்க கூடாது! உதயநிதிக்கு துதி பாடுவது தப்புங்க! செல்லூர் ராஜு தரும் முக்கிய அட்வைஸ்
மதுரை : மத்திய அரசை எதிர்த்து முதல்வர் ஸ்டாலின் நடந்துகொள்வது சரியில்லை எனவும், திமுக ஆட்சி விளம்பர ஆட்சி, விடியல் தராத ஆட்சி என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.
Recommended Video
மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் மீண்டும் தேர்ந்தெடுத்த பிறகு மதுரை கே கே நகர் பகுதியில் உள்ள எம்ஜிஆர் ஜெயலலிதா திருவுருவ சிலைக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், அதிமுகவில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம், தேர்ந்தெடுப்பது கழகத்தின் தலைமை தான், மற்றவர்கள் போட்டியிடுவது குறித்த நான் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

அதிமுக தலைமை
அதிமுகவில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் இது திமுக அல்ல. சட்டமன்றத்தில் உதயநிதியை துதி பாடுவது திமுகவிற்கு ஒரு பின்னடைவுதான். மக்கள் திமுக மீது கோபத்தில் இருக்கிறார்கள் இது ஆட்சியாளர்களுக்கு தெரியவில்லை, விலைவாசி விஷம் போல் ஏறி உள்ளது. எதிர்க்கட்சி விவாதங்களை முடக்க பார்க்கிறார்கள், திமுக ஆட்சி விளம்பர ஆட்சி விடியல் தராத ஆட்சி,

தொழிலாளர்களுக்கு உதவி
கைத்தறி மற்றும் அனைத்து தொழிலாளர்கள் நிரம்பிய மேதினக் கூட்டம் நடைபெறும் அதிமுக துவங்கிய காலத்திலிருந்து நடைபெறுகிறது. நலிந்த தொழிலாளர்கள் அதிமுக உறுப்பினர்களுக்கு நிதி வழங்கப்படும் இது எந்த இயக்கத்திலும் இல்லை. மதுரையில் ஸ்மார்ட் சிட்டி பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். முல்லைப்பெரியாறில் இருந்து மதுரைக்கு தண்ணீர் கொண்டுவரும் திட்டம் சரியாக நடைபெறவில்லை என்று நகர்ப்புற துறை அமைச்சரிடம் கூறினேன் அவர் விரைவில் நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார்,

பெட்ரோல் டீசல் வரி
பெட்ரோல் டீசல் வரியை தமிழகம் குறைக்க வேண்டும் என்ற பிரதமரின் விமர்சனத்தை முதலமைச்சர் மறுக்கிறார். தமிழ்நாடு அண்டை மாநிலத்தில் பெட்ரோல் டீசல் விலை குறைந்து உள்ளதால் அருகே இருக்கக்கூடிய மாவட்டங்கள் லாரிகளில் பெட்ரோல் டீசல் அங்கு போய் வாங்கி வரும் சூழ்நிலையில் உள்ளது அதே போல் தமிழகம் ஏன் செய்யக் கூடாது,

மத்திய அரசை பகைக்க கூடாது
அதைவிட்டுவிட்டு பிரதமரை மறைமுகமாக தாக்குவது. மத்திய அரசை எதிர்த்து நடந்துகொள்வது முதல்வருக்கு சரியில்லை. பிரதமர் காரணமில்லாமல் எதையும் சொல்லமாட்டார். அண்டை மாநிலம் பெட்ரோல் டீசல் விலை குறைத்து தரும் போது ஏன் தமிழகம் தர கூடாது என்றுதான் மக்கள் கேள்வி.. எழுப்புகின்றனர்.." என பேசினார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications