அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறாரா? சட்டென வந்த கேள்வி.. நயினார் நாகேந்திரன் கொடுத்த விளக்கம்!
மதுரை: தமிழக பாஜகவின் தலைவராக இருந்த அண்ணாமலை, தனிக்கட்சி தொடங்க மாட்டார் என்று நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார். அண்ணாமலை விரைவில் தனிக்கட்சி தொடங்க உள்ளதாக தொடர்ந்து பேசப்பட்டு வரும் சூழலில், அண்ணாமலை பாஜகவில் தான் இருப்பதாக நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
கடந்த சில மாதங்களாகவே தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் அண்ணாமலை இருவருக்கும் மோதல் முற்றி வருகிறது. தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கப்பட்ட பின், அதிமுக - பாஜக கூட்டணி அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அதிமுக உடனான பாஜகவின் கூட்டணியில் தனக்கு விருப்பமில்லை என்று அண்ணாமலை தொடர்ச்சியாக பேசி வந்தார்.

அமித்ஷாவுக்கு கொடுத்த வாக்குக்காக அமைதி காக்கிறேன் என்றும், அதிமுக தலைவர்கள் என்னை சீண்ட வேண்டாம் என்றும் அண்ணாமலை தெரிவித்திருந்தார். அதேபோல் தமிழக பாஜகவின் நிர்வாகிகளுக்கும், அண்ணாமலைக்கும் இடையிலான மோதல் அதிகரித்துக் கொண்டே சென்றது. அண்ணாமலையின் வார் ரூம் இதற்கு முதன்மை காரணமாகவும் பார்க்கப்பட்டது.
இதனிடையே நான் பேசுவதற்கான காலம் வெகு விரைவில் வரும்.. அப்போது பேசுவேன் என்று அண்ணாமலை சில நாட்களுக்கு முன் அளித்த பேட்டி பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது. புதிய கட்சியை அண்ணாமலை தொடங்குகிறாரா என்ற விவாதமும் தொடர்ந்து தமிழக அரசியல் வட்டத்தில் நடந்து வருகிறது. நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் அண்ணாமலை தனிக் கட்சி தொடங்குவார் என்று கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் அண்ணாமலை புதியக் கட்சி தொடங்குவது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கம் கொடுத்துள்ளார். அதில் நயினார் நாகேந்திரன் பேசுகையில், தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்து கொண்டே இருக்கிறது. தமிழ்நாட்டில் என்டிஏ கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என்றுதான் அமித்ஷா வலியுறுத்தி வருகிறார் என்றார்.
தொடர்ந்து, அண்ணாமலை கட்சியின் மாநிலத் தலைவராக இருந்தவர். இப்போதும் கட்சியில் தான் இருக்கிறார். இப்போது நான் மாநிலத் தலைவராக இருக்கிறேன். நாளை மாநிலத் தலைவராக இல்லாமலும் இருக்கலாம். அதற்காக நான் தனிக்கட்சி தொடங்க மாட்டேன்.. அவரும் தொடங்க மாட்டார் என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே அண்ணாமலை பெயரில் மன்றம் தொடங்கப்பட்ட போதே அண்ணாமலை, இது முறையல்ல என்று நிர்வாகிகளுக்கு வார்னிங் கொடுத்திருந்தார். ஆனால் டிடிவி தினகரன், ஓபிஎஸ் உள்ளிட்டோர் உடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறார். இதனால் சட்டசபைத் தேர்தலுக்கு முன் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று கருதப்படுகிறது.
-
கட்டம் சரியில்லை.. எலக்சனே வேண்டாம்! அண்ணாமலையை அலர்ட் செய்த நாடி ஜோசியர்! இது தான் உண்மை காரணமா? -
தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? 26 தொகுதிகளுக்கு வெளியான உத்தேச பட்டியல்! குஷ்பு, அண்ணாமலை மிஸ்ஸிங்! -
கோவையில் இருந்து கொண்டே மோடியை வரவேற்க செல்லாத அண்ணாமலை.. லிஸ்டில் இருந்தும் புறக்கணித்து எதிர்ப்பு -
போட்டியிடட்டுமே.. செந்தில் பாலாஜி குறித்த கேள்வியால் சட்டென கடுப்பான நயினார் நாகேந்திரன் -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்?












Click it and Unblock the Notifications