Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என்னை வம்பிழுக்குறதுக்குனே.. அந்த கேள்வியால் ஷாக் ஆகி சிரித்து மழுப்பிய ஓபிஎஸ்! ஏர்ப்போர்ட்டில் பரபர

Subscribe to Oneindia Tamil

மதுரை : மாண்டஸ் புயல் பாதிப்பு தொடர்பாக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றிய கேள்விக்கு, 'என்னை வம்புக்கு இழுப்பதற்காகவே கேட்கிறீர்களா?' என சிரித்தபடி கூறிவிட்டு எஸ்கேப் ஆனார் ஓ.பன்னீர்செல்வம்.

சமீபத்தில், சொந்த ஊரான பெரியகுளத்திற்குச் சென்றிருந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இன்று மதுரை வந்து அங்கிருந்து விமானம் மூலம் சென்னை கிளம்பினார்.

மதுரை விமான நிலையத்தில், ஓ.பன்னீர்செல்வத்திற்கு அவரது ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் திரண்டு நின்று வரவேற்பு அளித்தனர். அப்போது ஓ.பன்னீர்செல்வத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

ஓபிஎஸ் ஆக்‌ஷன்

ஓபிஎஸ் ஆக்‌ஷன்

அதிமுகவில் நிலவி வரும் ஓபிஎஸ், ஓபிஎஸ் மோதலுக்கு மத்தியில், இரு தரப்பினரும், தங்கள் பலத்தைப் பெருக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக இருந்த அதிருப்தியாளர்களை ஒருங்கிணைத்து மாவட்ட செயலாளர்கள் ஆகவும் தலைமைக் கழக நிர்வாகிகளாகவும் நியமனம் செய்துள்ளார் ஓபிஎஸ். இதையடுத்து மாவட்ட செயலாளராக பதவி பெற்றவர்கள் தங்கள் பகுதியில் உள்ள ஒன்றிய செயலாளர்கள் நகர செயலாளர்களை வளைத்து ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு திரட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

சொந்த ஊரில்

சொந்த ஊரில்

அவ்வப்போது சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளத்திற்குச் செல்லும் ஓ.பன்னீர்செல்வம் நாள்தோறும் நூற்றுக்கணக்கான நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். அந்தவகையில், சமீபத்தில் பெரியகுளம் சென்ற ஓபிஎஸ், கைலாசபட்டியில் உள்ள பண்ணை வீட்டில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளைச் சந்தித்தார். மேலும், முக்கிய நிர்வாகிகள் சிலருடன் அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றி ஆலோசனை மேற்கொண்டார்.

 எடப்பாடி மனு

எடப்பாடி மனு

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், அடுத்தகட்ட விசாரணை நாளை நடைபெற உள்ளது. இந்த வழக்கு தொடர்பாகவும் ஓபிஎஸ், சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து வருகிறார். இதற்கிடையே, பொதுக்குழு முடிவுகள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்கள் மீது தேர்தல் ஆணையம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதால் கட்சிப் பணிகள் தொய்வடைந்துள்ளது. அதனால் தலைமை தேர்தல் ஆணையத்திற்கு உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி தரப்பு மனு தாக்கல் செய்தது.

உடனே பதில்

உடனே பதில்

இதையடுத்து, சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்திய ஓ.பன்னீர்செல்வம், உச்சநீதிமன்றத்தில் தனியாக ஒரு விளக்க மனுவை தாக்கல் செய்தார். அதில், அதிமுகவை பொருத்தவரையில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் குறித்து இன்னும் எந்த ஒரு முடிவும் எட்டப்படாத நிலையில், தேர்தல் ஆணையத்தை இந்த வழக்கில் மனுதாரராக சேர்க்க முடியாது. இதற்கு முன்னதாக அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் பிரதிநிதியாக இல்லாத நிலையில் தற்போது இந்த மேல்முறையீட்டு மனுவில் தேர்தல் ஆணையத்தை புதிதாக சேர்க்க கோரிக்கை வைக்க முடியாது.

தவறாக வழிநடத்த

தவறாக வழிநடத்த

அதிமுக பொதுக்குழு வழக்கில் நீதிமன்றத்தை எடப்பாடி பழனிசாமி தவறாக வழி நடத்த முற்படுகிறார். எனவே எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரிக்க வேண்டும் தனது பதில் மனுவில் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த இடைக்கால மனு மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த விளக்க மனு ஆகியவை குறித்து உச்ச நீதிமன்றம் நாளை விரிவாக விசாரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை ரிட்டர்ன்

சென்னை ரிட்டர்ன்

இந்நிலையில், இன்று தனது சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு கிளம்பினார் ஓபிஎஸ். தேனியில் இருந்து கார் மூலம் மதுரை வந்து அங்கிருந்து விமானம் மூலம் சென்னை கிளம்பினார் ஓபிஎஸ். ஓபிஎஸ் மதுரை விமான நிலையத்திற்கு வந்தபோது, அவரை ஏராளமான அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் வரவேற்றனர். நிர்வாகிகள், சால்வை அணிவித்து, ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால், விமான நிலைய வளாகத்தில் கடுமையான கூட்டம் ஏற்பட்டது.

புயல் நடவடிக்கைகள் எப்படி?

புயல் நடவடிக்கைகள் எப்படி?

கூட்டத்திற்கு மத்தியில், ஆட்களை விலக்கி விட்டு மெதுவாக விமான நிலைய கேட்வேவுக்குள் நுழைய முயன்றார் ஓபிஎஸ். அப்போது செய்தியாளர்கள், அவரிடம் கேள்விகளை எழுப்பினர். செய்தியாளர்களின் எந்தக் கேள்விக்கும் ஓபிஎஸ் பதில் அளிக்கவில்லை. செய்தியாளர் ஒருவர், மாண்டஸ் புயல் பாதிப்பு விவகாரத்தில், தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் எப்படி இருக்கிறது எனக் கேள்வி எழுப்பினார்.

வம்புக்கு இழுப்பதற்காகவே

வம்புக்கு இழுப்பதற்காகவே

அதற்கு ஓ.பன்னீர்செல்வம் சிரித்தபடியே, 'என்னை வம்புக்கு இழுப்பதற்காகவே கேட்கிறீர்களா?'எனக் கேட்டுவிட்டு, பதில் எதுவும் கூறாமல் நகர்ந்து சென்றார். திமுக அரசுக்கு ஆதரவாக ஓபிஎஸ் செயல்படுவதாக ஈபிஎஸ் தரப்பினர் குற்றம்சாட்டும் நிலையில், அதைச் சுட்டிக்காட்டியே ஓபிஎஸ் இந்த கேள்விக்கு பதில் அளிக்க மறுத்துள்ளார். பிரஸ்மீட் கொடுக்கவில்லை என ஓபிஎஸ் தரப்பினர் தெரிவித்ததும், செய்தியாளர்கள் கலைந்து சென்றனர்.

குஜராத் செல்கிறார்

குஜராத் செல்கிறார்

சென்னை திரும்பும் ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை குஜராத் செல்ல இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குஜராத்தில் நாளை நடைபெற உள்ள குஜராத் முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக இன்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் செல்கிறார் ஓபிஎஸ்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+