• search
மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மகளுக்கு மகளா? கழிவறையில் கேட்ட குவா குவா! ஷாக்காகி போன பெற்றோர்! இன்ஸ்டா ரூபத்தில் விளையாடிய விதி!

Google Oneindia Tamil News

மதுரை : மதுரை அருகே கழிவறைக்குச் சென்ற 11ஆம் வகுப்பு மாணவி குழந்தை பெற்றெடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய நிலையில், இன்ஸ்டாகிராம் மூலம் பழகி சிறுமியை சீரழித்ததாக திண்டுக்கல்லை சேர்ந்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

சமூக வலைதள ஆதிக்கம் பெருகிவிட்ட இந்த காலத்தில் கைகள் இல்லாமல் கூட இருந்த விடலாம், ஆனால் கைகளில் செல்போன்கள் இல்லாமல் மாணவர்களையோ இளைஞர்களையோ காண முடியாது என்ற நிலை தான் இருக்கிறது.

ஒரு சில நிமிடங்கள் அற்ப மகிழ்ச்சியை தரும் இன்ஸ்டாகிராம் லைக்குகளுக்காகவும், ஃபேஸ்புக் கமெண்ட்களுக்காகவும் அடிமையாகி தங்களது வாழ்வையே தொலைக்கும் கல்லூரி மாணவிகள் பள்ளி மாணவிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

உடம்பே சிலிர்க்கும்! வேற லெவல் 'சூப்பர் பவர்களை' கொண்ட 4 விலங்குகள்! அதிசயம்! தெரிஞ்சுக்கலாம் வாங்கஉடம்பே சிலிர்க்கும்! வேற லெவல் 'சூப்பர் பவர்களை' கொண்ட 4 விலங்குகள்! அதிசயம்! தெரிஞ்சுக்கலாம் வாங்க

இன்ஸ்டாகிராம்

இன்ஸ்டாகிராம்

குறிப்பாக இன்ஸ்டாகிராம் மூலம் நடைபெறும் குற்றங்கள் தான் பெற்றோர்களை பெறும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. அந்த வகையில் மதுரையில் நடைபெற்றிருக்கும் ஒரு சம்பவம் தான் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் கொரோனா காலகட்டத்தில் ஆன்லைன் வகுப்புகளை கவனிப்பதற்காக அவரது பெற்றோர் மாணவிக்கு செல்போன் வாங்கி கொடுத்துள்ளனர்.

ஆன்லைன் வகுப்புக்கு செல்போன்

ஆன்லைன் வகுப்புக்கு செல்போன்

ஆனால் சிறுமி இன்ஸ்டாகிராம் மற்றும் ஆன்லைனில் கேம் விளையாடுவதற்கும் செல்போனை பயன்படுத்தி வந்துள்ளார். எப்போது ரீல், அரட்டை என படிப்பில் கவனம் செலுத்தாமல் இன்ஸ்டாகிராமிலேயே பொழுதை கழித்து வந்த அவரை பெற்றோரும் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் தான் மாணவியின் வாழ்வில் விதி இன்ஸ்டா ரூபத்தில் விளையாடியது. சிறுமி எப்போதும் இன்ஸ்டாகிராமிலேயே சுற்றித் திரிவதை கண்ட அவரது உறவினரான திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞர் சிறுமிக்கு காதல் வலை வீசியிருக்கிறார். சிறுமியின் பதிவுகளுக்கெல்லாம் வாவ் சூப்பர் பிரமாதம் என லைக்குகளையும் கமெண்டுகளையும் அள்ளித் தெளிக்க இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.

அத்துமீறிய காதலன்

அத்துமீறிய காதலன்

இருவரும் மெசஞ்சரில் பேசிக் கொண்ட நிலையில் பின்னர் whatsapp என பழக்கம் விரிவடைந்து ஒரு கட்டத்தில் காதலாக மாறியிருக்கிறது. இந்த நிலையில் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஆசை வார்த்தை கூறிய அந்த இளைஞர் பல இடங்களுக்கும் சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்திருக்கிறார். இதனால் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்திருக்கிறார். தனது பெற்றோரிடம் இதுகுறித்து கூறினால் பெரிய பிரச்சினையாகிவிடும் இதனைத் தான் அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தான் கர்ப்பமாக இருப்பதை மறைத்து வந்திருக்கிறார்.

கழிவறையில் குழந்தை

கழிவறையில் குழந்தை

இந்த நிலையில் தான் கடந்த 22ஆம் தேதி வீட்டில் கழிப்பறைக்கு சென்றபோது சிறுமிக்கு குழந்தை பிறந்துள்ளது. குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு வந்த பெற்றோர் தனது மகளுக்கு மகள் பிறந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து இருவரையும் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் இது குறித்து வழக்கு பதிவு செய்த சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்தியதில் இளைஞர் அத்துமீறியது தெரிய வந்தது. இதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்ஸ்டாகிராமில் தவறான பழக்கத்தால் 17 வயது சிறுமி குழந்தை பெற்றுள்ள இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

English summary
While the incident of an 11th class girl giving birth to a child while going to the toilet near Madurai has caused great shock and excitement, the police have arrested a youth from Dindigul under the POCSO Act for sexually assaulting the girl through Instagram.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X