பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை
பசும்பொன்: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் உள்பட அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னதாக மதுரை மாவட்டம் கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்தார்.
Recommended Video
முத்துராமலிங்க தேவரின் 114 ஆவது ஜெயந்தி விழா மற்றும் 59 ஆவது குரு பூஜை விழா கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க ஆலயத்தில் நேற்றைய தினம் காலை பிள்ளையார்பட்டி குருக்களின் யாகசாலை பூஜையுடன் விழா தொடங்கியது.

இன்று நடைபெற்று வரும் குருபூஜை விழாவில் முதல்வர் ஸ்டாலின், பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்திற்கு சென்றார். அங்கு அவர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். குரு பூஜை விழாவும் தொடங்கியது. அப்போது தேவர் சிலைக்கு பூஜைகள் நடத்தப்பட்டன. முதல்வர் ஸ்டாலினுடன் அமைச்சர்கள், திமுக எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆண்டுதோறும் தேவர் ஜெயந்தி மற்றும் குரு பூஜை விழாவில் ஸ்டாலின் பங்கேற்பது வழக்கம். கடந்த ஆண்டுகளில் எதிர்க்கட்சி தலைவராக பங்கேற்றார். ஆனால் இந்த முறை முதல் முறையாக முதல்வராக ஸ்டாலின் பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ள நேற்றைய தினமே முதல்வர் ஸ்டாலின் மதுரை வந்தார். இன்று அவர் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து பசும்பொன் செல்லும் வழியில் மதுரை தெப்பக்குளத்தில் இருந்த மருது சகோதரர்களின் சிலைகளுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

உக்கிரபாண்டியத் தேவர்- இந்துராணி அம்மாளுக்கு 30.10.1908 ஆம் ஆண்டு முத்துராமலிங்க தேவர் மகனாக பிறந்தார். பின்னர் 30.10.1963 ஆம் ஆண்டு அவரது பிறந்த தினத்தில் அவர் மறைந்தார். இந்த ஜெயந்தி விழாவாகவும் குருபூஜை தினமாகவும் கொண்டாடப்படுகிறது. இது ஆண்டுதோறும் அக்டோபர் 30ஆம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த விழாவில் கலந்து கொள்ளவிருப்பவர்கள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் முன் அனுமதி வாகன சீட்டு பெற வேண்டும் என்றும் அதை வாகனத்தின் கண்ணாடியின் முன்பு நன்கு தெரியும் வகையில் ஒட்ட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கானோர் கலந்துகொள்ளும் விழா இது என்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் இந்த விழா நடைபெறுகிறது. இதற்காக தென் மாவட்டங்களிலிருந்து பசும்பொன் செல்ல போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. மதுரை கோரிபாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கும் அரசியல் கட்சியினர் மாலை அணிவிப்பர். நேற்றைய தினமே வந்த சசிகலா தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவர் ஜெயலலிதாவின் பிரச்சார வாகனத்தில் அங்கிருந்து தனது சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார் என தெரிகிறது.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications