• search
மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"மன்னிப்பு கடிதம்.." எல்லாம் எடப்பாடி பார்த்துப்பாரு.. பொடி வைத்து பேசும் ராஜன் செல்லப்பா! பரபர

Google Oneindia Tamil News

மதுரை: அதிமுகவில் உட்கட்சி பூசல் தொடரும் நிலையில், திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராஜன் செல்லப்பா எம்எல்ஏ ஓபிஎஸ் தரப்பை மிகக் கடுமையாகச் சாடி பேசினார்.

அதிமுகவில் சட்டசபை வாரியாக பூத் கமிட்டி கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பாகப் பூத்து கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது..

இதில் கலந்து கொண்ட திருப்பரங்குன்றத்தில் எம்எல்ஏ மற்றும் அதிமுகவின் அமைப்புச் செயலாளருமான ராஜன் செல்லப்பா சில முக்கிய கருத்துகளைக் குறிப்பிட்டார்.

 தேவருக்கு எப்போதும் மரியாதை கொடுப்பது அதிமுக தான்! எம்ஜிஆரை போல எடப்பாடி... ராஜன் செல்லப்பா பளீச் தேவருக்கு எப்போதும் மரியாதை கொடுப்பது அதிமுக தான்! எம்ஜிஆரை போல எடப்பாடி... ராஜன் செல்லப்பா பளீச்

 அதிமுகவை இனி வீழ்த்த முடியாது

அதிமுகவை இனி வீழ்த்த முடியாது

இது குறித்த அவர் கூறுகையில், "கடந்த திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் நாம் வெறும் 2,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை நழுவி விட்டோம். ஆனால் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பீனிக்ஸ் பறவையாக மீண்டும் எழுந்து நின்று 30,000 வாக்கு வித்தியாசத்தில் நாம் வெற்றி பெற்று உள்ளோம். அடுத்து ஒன்றரை ஆண்டுகளில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. இதில் திமுக நம்மை வீழ்த்த முடியாது. முன்பு, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா எப்படி அதிமுகவைக் காப்பாற்றினாரோ, அதேபோல் இன்றைக்கு எடப்பாடி பழனிசாமி அதிமுகவைக் காப்பாற்றி வருகிறார். இது தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும்.

 எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் எடப்பாடி

எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் எடப்பாடி

ஜெயலலிதா மறைந்த பிறகு, எடப்பாடி பழனிசாமி தமிழக அரசைக் காப்பாற்றாமல் விட்டிருந்தால், அதிமுக மிகப் பெரிய அளவுக்கு வீழ்ச்சி அடைந்திருக்கும்.. கடந்த 4.5 ஆண்டுகளில் எடப்பாடி பழனிசாமி ராஜதந்திரியாக இருந்து ,அரசைச் சிறப்பாக நடத்தினார். பல்வேறு திட்டங்களையும் நாட்டு மக்களுக்குத் தந்தார். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு பின் இரட்டை இலையைக் காப்பாற்றும் சக்தி படைத்தவர் எடப்பாடி பழனிசாமி தான். ஜெயலலிதாவுடன் 1989ஆம் ஆண்டு சேவல் சின்னத்தில் நின்று வெற்றி பெற்றவர் எடப்பாடி. இது மட்டுமின்றி தென் மாவட்டங்களுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு பல தொடர்பு உள்ளது. எடப்பாடி பழனிசாமி பக்கம் இருக்கும் பொன்னையன், திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன், கே.பி.முனுசாமி, நான் உட்படப் பலரும் நேரடியாக ஜெயலலிதாவிடம் பயிற்சி பெற்றவர்கள்.

 மன்னிப்பு கடிதம்

மன்னிப்பு கடிதம்

எம்ஜிஆர் காலத்திலும் அவருடன் பயணித்து உள்ளோம்.. எடப்பாடி பழனிசாமி மட்டுமே இந்த இயக்கத்தைக் கட்டிக் காக்க முடியும், அதனால்தான் இந்த இயக்கத்தின் மூத்த முன்னோடிகள் அனைவரும் அவருடன் இருக்கிறோம். தவறு செய்தவர்கள் மன்னிப்பு கடிதம் கொடுத்தால் எடப்பாடி மீண்டும் சேர்த்துக் கொள்வார். அந்த பக்குவம் அவரிடம் உள்ளது. திமுகவை எதிர்க்க வலிமைமிக்க தலைவராக எடப்பாடி உள்ளார். திமுக எல்லா கட்சிகளுடன் கூட்டணி வைத்தது. ஆனால், நாங்கள் இப்போது பாஜக உடன் கூட்டணி வைத்ததை விமர்சிக்கிறார்கள். அதிமுக கூட்டணி குறித்து எடப்பாடி எந்த முடிவெடுக்கிறாரோ, அதுதான் எங்கள் முடிவு.

 நீட் விவகாரம்

நீட் விவகாரம்

நீட் தேர்வு குறித்து பல்வேறு பிரச்சனை எழுந்த பொழுது, அதை எதிர்கொள்ள 7.5 இட ஒதுக்கீடு கொண்டு வந்தோம். இதன் மூலம் 465 அரசுப் பள்ளி மாணவர்கள் இன்று மருத்துவ படிப்பு பெற்றுள்ளனர் . அதற்குக் காரணம் எடப்பாடி பழனிசாமி மட்டுமே. அதேபோல் குடிமராமத் திட்டத்தின் மூலம் நீர் ஆதாரங்கள் அதிகரிக்கப்பட்டது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கினார். அதேபோல் இருமொழிக் கொள்கையில் அதிமுக உறுதியுடன் உள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் எடப்பாடி மக்கள் நலனில் மட்டும் அக்கறை கொண்டு உள்ளார்.

 வாக்குறுதிகள்

வாக்குறுதிகள்

இன்றைக்குத் திமுக திராவிட மாடல் என்று சொல்கிறது. உண்மையில் இது மக்கள் நலம் இல்லாத மாடலாக உள்ளது. மின் இணைப்புகளை ஆதார் கார்டுகளுடன் இணைக்க வேண்டும் என்று மின்சார துறை அமைச்சர் கூறியுள்ளார். ஏற்கனவே திமுகவினர் தேர்தல் அறிக்கையில் இரு மாதம் உள்ள மின் கட்டண கணக்கீட்டை மாதம் ஒரு முறை மின் கணக்கீடு செய்யும் முறையாக மாற்றப்படும் என. ஆனால், அவர்கள் இன்னும் அந்த திட்டத்தைச் செயல்படுத்தவில்லை. மேலும், ஆதார் இணைப்பால் நூறு யூனிட் மின்சாரம் பறிபோகும் அபாயம் உள்ளது.. குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 தருவதாகச் சொன்னார்கள். ஆனால், மக்களுக்கு ஏமாற்றத்தையே தந்து உள்ளனர். சட்ட ஒழுங்கும் மாநிலத்தில் மிக மோசமாக உள்ளது. அதிமுக அரசின் திட்டங்களை எல்லாம் தற்போது திமுக அரசு முடக்கி வைத்துள்ளது.

 7ஆக பிளந்த திமுக

7ஆக பிளந்த திமுக

திமுக ஆட்சியில் அதிகாரிகளுக்கும், அமைச்சர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அவ்வளவு ஏன் அமைச்சர்களுக்கு இடையே கூட கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அமைச்சர்கள் துரைமுருகன், ராஜகண்ணப்பன், பொன்முடி, பிடிஆர் ஆகியோரின் பேச்சுக்கள் எல்லாம் மக்கள் முகம் சுளிக்க வைக்கிறது. திமுக அமைச்சர் செயல்பாடுகளை முதலமைச்சரால் கட்டுப்படுத்த முடியவில்லை. அதிமுக இரண்டாகப் போய்விட்டது நான்காகப் போய்விட்டது என்ற சொல்கிறார்கள்... ஆனால் இன்று திமுக துரைமுருகன், பிடிஆர் தியாகயராஜன் என்று 7 துண்டாகப் போய்விட்டது.. இந்த மோசமான ஆட்சி ரொம்ப காலம் தாக்குப்பிடிக்க முடியாது. திமுகவை வீழ்த்த வேண்டாம் அதுவாக விழுந்து விடும்.

 லாப நோக்கில் செயல்படும் அரசு

லாப நோக்கில் செயல்படும் அரசு

எடப்பாடி பழனிசாமி தனது உழைப்பால் இன்றைக்கு உயர்ந்து உள்ளார். ஆனால் கருணாநிதி பெயரை வைத்துக்கொண்டுதான் ஸ்டாலினால் அவரால் வர முடிந்தது. இன்றைக்கு மின் கட்டணம், பால் விலை உயர்த்தப்பட்டு உள்ளது. அதிமுக கொண்டு வந்த மடிக்கணினி திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. அம்மா உணவகத்தை மூடிவிட்டார்கள்,, குழந்தைகளுக்குப் பாலூட்டும் அறையைக் கூட திமுக விட்டு வைக்காமல் மூடிவிட்டார்கள். நிதிகளைப் பெருக்காமல் விலைவாசி உயர்த்தி லாப நோக்கத்தோடு திமுக செயல்படுகிறது" என்றார்.

English summary
Rajan chellappa says ADMK can accept anyone who accept their mistakes: Rajan chellappa latest speech in tamil.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X