ஓமிக்ரான்.. மக்களே உஷார்.. எலும்பு வங்கியை துவங்கி வைத்து.. மா.சுப்பிரமணியன் சொன்ன "அலர்ட்"
குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை மத்திய அரசு ஆரம்பித்தால் அதனை முதன் முதலாக தொடங்குவது தமிழக அரசாகத் தான் இருக்கும் என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.
மதுரை: ஓமிக்ரான் வைரஸ் பரவல் அச்சம் இருப்பதால் மக்கள் முக கவசம் போன்ற கொரோனா நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.பண்டிகை காலத்தில் மக்கள் மிகவும் எச்சரிக்கையுடனும், சுகாதாரத்துறை வழிகாட்டுதலையும் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. என்றாலும் ஓமிக்ரான் பரவல் அச்சம் எழுந்துள்ளது. இந்தியாவில் இதுவரை 200 பேருக்கு ஓமிக்ரான் தொற்று பரவியுள்ளது. 77 பேர் ஓமிக்ரான் பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் ஓமிக்ரான் பரவலைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனிடையே மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மா.சுப்ரமணியன்,
குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை மத்திய அரசு ஆரம்பித்தால் அதனை முதன் முதலாக தொடங்குவது தமிழக அரசாகத் தான் இருக்கும் என்று கூறினார்.
யூடியூப் பார்த்து அதன் மூலம் பிரசவம் பார்ப்பது தவறான அணுகுமுறை. அவ்வாறு செய்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.சுகாதார துறையில் ஒன்றிரண்டு பாலியல் புகார்கள் வந்துள்ளன. அதற்கு சட்டரீதியாகவும், துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

டெங்கு ஒழிப்புக்கு முதல்வரின் அறிவுறுத்தலின்படி அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் சுகாதாரத்துறை மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், கிருமி நாசினி தெளித்தல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
ஊரடங்கு தளர்வு மூலம் மக்களின் சகஜ வாழ்க்கை திரும்பிக் கொண்டிருக்கிறது. இருந்தபோதிலும் புதிய வைரஸ் மூலம் உலகம் முழுவதும் அச்சப்பட்டு கொண்டிருக்கிற நிலையில் மக்கள் சுய கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். முக கவசம் போன்ற கொரோனா நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். பண்டிகை காலங்களில் மக்கள் மிகவும் எச்சரிக்கையுடனும், சுகாதாரத்துறை வழிகாட்டுதலையும் கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

எலும்பு வங்கி தொடக்கம்
தொடர்ந்து மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் எலும்பு வங்கியையும் அமைச்சர் மா.சுப்ரமணியன் தொடக்கி வைத்தார். வாகன விபத்துகளில் கை, கால்களில் ஏற்படும் எலும்பு முறிவு , எலும்பு புற்றுநோய், பல்வேறு வகை கிருமித் தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது வழக்கம். எலும்பு தொடர்பான சிகிச்சைகளுக்கு பாதிக்கப்பட்ட எலும்பை நீக்கி விட்டு புதிய எலும்பு பொருத்தவேண்டும். ஆனால் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் எலும்பு வங்கி இல்லாததால், எலும்பு முறிவு ,எலும்பு நோயால் பாதிக்கப்படுபவர்கள் உரிய சிகிச்சை பெற முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளனர். இதனால் செயற்கையாக எலும்பு பொருத்த வேண்டும் என்பது அவசியம் என்பதால், எலும்பு வங்கி அமைக்க சுகாதாரத்துறை முடிவெடுத்தது. அதன்படி தமிழகத்தில் சென்னை அரசு மருத்துவமனையில் மட்டுமே எலும்பு வங்கி உள்ளது.
இந்தநிலையில் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் தென் தமிழகத்திலேயே முதல் முறையாக எலும்பு வங்கி இன்று திறக்கப்பட்டுள்ளது . சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் எலும்பு வங்கியை தொடங்கி வைத்ததுடன் முதுகு தண்டுவட சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார். இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் தனது ட்விட்டர் பக்கத்தில், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர்களின் அறிவுறுத்தலின்படி மதுரை மாவட்டம் அரசு ராஜாஜி மருத்துவமனை- பாலரெங்காபுரம் மண்டல புற்றுநோய் மையத்ததில் மேம்படுத்தப்பட்ட வெளிப்புற கோபால்ட் 60 அதிநவீன புற்றுநோய் கதிர்வீச்சு சிகிச்சை மையம் துவக்கி வைக்கப்பட்டது என்று பதிவிட்டுள்ளார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications