இதையெல்லாம் மனுசன் இல்ல மாடு கூட திங்காது.. ரேசன் அரிசியை சாலையில் கொட்டிய திமுக முன்னாள் கவுன்சிலர்
மதுரை: அரசு சார்பில் நியாய விலைக்கடையில் வழங்கிய அரசி தரமற்று இருந்ததால் ஆத்திரமடைந்த திமுக முன்னாள் கவுன்சிலர் அரிசியை சாலையில் கொட்டிச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவு வருகிறது.
Recommended Video
தமிழக அரசு சார்பில் ரேசன் கடைகளில் அரிசி, மண்ணெண்ணெய், பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு குறைவான விலையில் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் உள்ள ரேசன் கடைகளில் 20 கிலோ அரிசி இலவசமாக குறிப்பிட்ட குடும்ப அட்டைகளை வைத்திருக்கும் ரேசன் கார்டு தாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
அவ்வாறு வழங்கப்படும் உணவுப் பொருட்கள் தரமற்று வழங்கப்படுவதாக பல ஆண்டுகளாக பிரச்சினை நீடித்து வருகிறது. குறிப்பாக ரேசன் அரிசி தரமற்றும், மிகப்பழையதாகவும், குப்பை மற்றும் வண்டுகளுடனும் துர்நாற்றத்துடன் விநியோகிக்கப்படுவதாக புகார் இரு கட்சிகளின் ஆட்சிக் காலத்திலும் உள்ளது.

தமிழக ரேசன் கடைகள்
இந்நிலையில் தமிழக அரசு சார்பில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பொங்கல் பண்டிகையையொட்டி விநியோகிக்கப்பட்ட பொங்கல் பரிசு பொருட்கள் தரமற்று இருப்பதாக புகார் எழுந்தது. வெல்லம் உருகி இருந்ததாகவும், பரிசுப் பொருட்களில் பல்லி, ஊசி சிரிஞ்ச் இருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. தரமற்ற பொருட்கள் வழங்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தவும், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார். இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது.

வைரல் வீடியோ
இதனிடையே, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தரமற்ற ரேசன் அரிசியை விநியோகம் செய்ததால் ஆத்திரமடைந்த முன்னாள் திமுக கவுன்சிலர் ரோட்டில் கொட்டி எதிர்ப்பை தெரிவித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மள்ளப்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் உதயசூரியன், முன்னாள் திமுக கவுன்சிலரான இவர் நேற்று மள்ளப்புரம் நியாய விலை கடைக்கு சென்று ரேசன் அரிசி வாங்கியதாக கூறப்படுகிறது.

தரமற்ற ரேசன் அரிசி
ரேசன் அரிசி முழுவதும் தரமற்ற முறையில் இருந்தால் ஆத்திரமடைந்த உதயசூரியன், நியாயவிலை கடை ஊழியர்களிடம் உதயசூரியன் இது குறித்து கேட்ட போது குடோனிலிருந்து இவ்வாறு தான் வந்துள்ளது அதைத்தான் விநியோகம் செய்கிறோம் என பதில் அளித்துள்ளனர். மேலும் பல நாட்கள் குடோனில் இருக்கும் அரிசி தரமற்றதாக இருப்பதற்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது எனவும், இதுகுறித்து உணவுப் பொருள் வழங்கல் துறை உயரதிகாரிகளிடம் புகார் அளிக்குமாறும் கூறியுள்ளனர்.

வைரலாகும் வீடியோ
நியாயவிலை கடை ஊழியர்களின் பதிலால் ஆத்திரமடைந்த உதயசூரியன் தான் வாங்கிய 20 கிலோ ரேசன் அரிசியை இதை மனிதனும் சாப்பிட முடியாது ஒரு மாடு கூட சாப்பிட முடியாது என கூறி ரோட்டில் கொட்டிக் கொண்டே சென்றார். அரிசி சரியில்லை என எதிரிப்பை வெளிப்படுத்தியதை ஒருவர் வீடியோ எடுத்து பேஸ்புக் மற்றும் வாட்ஸ் ஆப்பில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோதான் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் மக்களுக்கு நல்ல தரமான அரிசியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை எழுந்துள்ளது.
-
“திமுக - அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க சதி திட்டம் தீட்டியது யார்?” ஸ்டாலினுக்கு செங்கோட்டையன் கேள்வி -
வெளியே போறோம்..புரட்சி செய்யும் புதுக்கோட்டை மும்மூர்த்திகள்! சி.விஜயபாஸ்கருக்கு சிக்கல்! என்னாச்சு? -
பெப்பே காட்டிய விஜய்.. விஷத்தை கடைந்த ராகுல்.. திமுக, காங்கிரஸ் பந்தம் டோட்டலாக க்ளோஸ் ஆயிருச்சே -
தவெகவை முடக்க இதுமட்டும்தான் ஒரே வழி.. திமுக பிடித்த ரூட்.. ஸ்டாலின் கையில் பிரம்மாஸ்திரம் -
ஆடிய ஆட்டமென்ன? குறுநில மன்னர்களாக அமைச்சர்கள்! அடங்காத மா.செ.க்கள்! ஆக்ஷனுக்கு தயாரான ஸ்டாலின்! -
விசிகவுக்கு 'டாட்டா'.. திமுகவுக்கு 'நோ'! தனிக்கட்சி தொடங்குகிறாரா ஆளூர் ஷாநவாஸ்? பின்னணி -
OG திமுக இதுதான்.. ரெண்டு பேருமே பெரிய தலக்கட்டாச்சே! மணி & கோவை தட்டித் தூக்கும் திமுக! பரபர கொங்கு -
சேலத்தில் பெரியார் சிலை அவமதிப்பு.. கீழ்த்தரமான செயல் என திமுக கண்டனம் -
"பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி".. மரியா வில்சனின் வெள்ளை அறிக்கையை விமர்சித்த திமுக -
இது வெள்ளை அறிக்கை அல்ல.. வெற்று அறிக்கை.. அமைச்சர் மரிய வில்சனை விளாசிய தங்கம் தென்னரசு! -
போலீஸே உடலை அடக்கம் பண்ணிடும்! ஆகாஷ் வழக்கில் நீதிமன்றம் எச்சரிக்கை! விடாப்பிடியாய் பெற்றோர்! பரபர -
மதுரையில் வேலை.. சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணி.. 127 பணியிடங்கள்! 12 ஆம் வகுப்பு தகுதி தான்!












Click it and Unblock the Notifications