தலை துண்டிக்கப்பட்டு பச்சைப் படுகொலை செய்யப்பட்ட கோகுல்ராஜ்... வழக்கு கடந்து வந்த பாதை
சாதி மாறி பழகியதாக கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார் கோகுல்ராஜ். கடந்த 7 ஆண்டு காலமாக ஆணவப்படுகொலை வழக்கு கடந்து வந்த பாதையை பார்க்கலாம்.
மதுரை: கூட படித்த வேறு சாதி பெண்ணுடன் பேசி பழகி வருகிறார் என்ற காரணத்திற்காக கொடூரமாக கொல்லப்பட்டார் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி மாணவர் கோகுல்ராஜ். ஆணவக்கொலைக்கு காரணம் யார் என்று கண்டுபிடித்தும் சம்பந்தப்பட்ட நபரை கைது செய்யவே சில மாதங்கள் ஆனது காவல்துறைக்கு. ஏழு ஆண்டுகாலமாக நடைபெற்ற வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகள் எனவும் தண்டனை விபரம் 8ஆம் தேதி அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 5 பேரை நீதிபதி விடுதலை செய்து உத்தரவிட்டார்.
கோகுல்ராஜ் கொலை நடந்த 2015 ஜூன் 23 முதல் தீர்ப்பு வாசிக்கப்படும் 2022 மார்ச் 5 வரை பல்வேறு திடுக்கிடும் திருப்பங்கள் நிகழ்ந்துள்ளன.
கொலை வழக்கை விசாரித்த அதிகாரி விஷ்ணுபிரியாவும் தற்கொலை செய்து கொண்டார். கிரைம் திரில்லர் கதை போல நிகழ்ந்த இந்த கொலை வழக்கின் பின்னணி, வழக்கு கடந்து வந்த பாதையைப் பார்க்கலாம்.

கோகுல்ராஜ்
சேலம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி இளைஞர் கோகுல்ராஜ். தன்னுடன் படித்த சக தோழியான சுவாதியுடன் கடந்த 2015 ஜூன் 23ஆம் தேதி திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக் கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு பேசிக் கொண்டிருந்தார்.இரவு ஆகியும் கோகுல்ராஜ் வீடு திரும்பாததால், அவருடைய பெற்றோர்கள் கோகுல்ராஜைத் தேடிக் கொண்டிருந்தார்கள்.
இதுதொடர்பாக, திருச்செங்கோடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்த நிலையில் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜின் ஆட்கள் கோகுல்ராஜை கடத்தியதாக கூறப்பட்டது. ஜூன் 24ஆம் தேதி பள்ளிப்பாளையம் அருகே தொட்டிபாளையம் ரயில்வே தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கோகுல்ராஜ் உடல் மீட்கப்பட்டது.
கோகுல்ராஜ் உடலை பிரேதப் பரிசோதனை செய்வதற்காக ஈரோடு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள். கோகுல்ராஜ் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது. இவ்வழக்கைக் கொலை வழக்காகப் பதிவு செய்ய வேண்டும் என்று உறவினர்கள் போராட்டம் நடத்தினர். அதையடுத்து சேலம் அரசு மருத்துவமனைக்கு உடலை கொண்டுவந்தார்கள். 27ஆம் தேதி பிரேதப் பரிசோதனை நடைபெற்றது. குற்றவாளிகளைப் பிடித்தால்தான் உடலை வாங்குவோம்' என்று கூறி உடலை வாங்க உறவினர்கள். அதையடுத்து 6 பேரைக் கைதுசெய்தார்கள். உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஜூலை 2ஆம் தேதி உடலைக் கொடுத்தார்கள். இதனையடுத்து கோகுல்ராஜ் உடலை பெற்றோர்கள் வாங்கி அடக்கம் செய்தனர்.

17 பேர் மீது வழக்குப் பதிவு
இந்த கொலை தொடர்பாக தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவையின் தலைவர் யுவராஜ் உட்பட 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கோவிலுக்கு வந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவையின் தலைவர் யுவராஜும் அவருடைய ஆட்களும் கோகுல்ராஜை மிரட்டிக் கூட்டிச் சென்றார்கள். அதற்கான ஆதாரம், அந்தக் கோயிலில் பொருத்தப்பட்ட சி.சி.டி.வி. கேமரா ஃபுட்டேஜில் பதிவாகியிருந்ததாகச் சொல்லப்பட்டது.

விஷ்ணுப்பிரியா தற்கொலை
வழக்கில் தொடர்புடைய தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், அவரது கூட்டாளிகள் 15 பேரும் நீண்ட நாட்கள் தலைமறைவாக இருந்தனர். அவ்வப்போது ஆடியோவும் வெளியிட்டார் யுவராஜ். இந்த கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்து வந்த காவல்துறை கண்காணிப்பாளர் விஷ்ணுப்பிரியாவும் தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலைக்குக் காரணம் யுவராஜ்தான் என்று சந்தேகம் எழுந்தது. இதையடுத்து இந்த கோகுல்ராஜ் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாறியது.

பேட்டி கொடுத்த யுவராஜ்
டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா தற்கொலைக்கு உயரதிகாரிகளின் டார்ச்சரே காரணம் என்றும், தன் மீது பொய் வழக்குகள் போடப்பட்டிருப்பதாகவும் அந்த பேச்சுக்களில் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் யுவராஜ். தலைமறைவாக இருந்தாலும் தொடர்ந்து தனியார் தொலைக்காட்சி ஒன்றிலும் அவரது பேட்டி வெளியானது வாரமிருமுறை இதழும் வாட்ஸ் அப் மூலம் அவரிடம் பேட்டி கெண்டு வெளியிட்டது.

சிபிசிஐடி அலுவலகத்தில் யுவராஜ் சரண்
திடீரென நாமக்கல் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் சரண் அடைய உள்ளதாக கடந்த 2015ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதி வாட்ஸ்அப் மூலம் தகவல் அனுப்பியிருந்தார் யுவராஜ். அதன்படி அக்டோபார் 11ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நாமக்கல் மாவட்ட சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் விசாரணை அதிகாரிகள் முன்னிலையில் யுவராஜ் சரணடைந்தார். இதையடுத்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, போலீஸார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி, பின்பு, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

குண்டர் சட்டம்
கடந்த 2015 டிசம்பர் 25ஆம் ஆண்டு யுவராஜை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். யுவராஜ், தங்கதுரை, அருள்செந்தில், செல்வக்குமார், குமார் (எ) சிவக்குமார், கார் ஓட்டுநர் அருண், சங்கர் ஆகிய 7 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதனை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

வழக்கு விசாரணை
இவ்வழக்கு நாமக்கல் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி கே.ஹெச்.இளவழகன் முன்னிலையில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாராணையை சேலம் சிறப்பு நீதிமன்றம் அல்லது வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி கோகுல்ராஜின் தாய் சித்ரா கடந்த 2019ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம்
கோகுல்ராஜ் வழக்கில் சுவாதி உட்பட மொத்தம் 116 சாட்சிகள் சேர்க்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. அரசு தரப்பு வழக்கறிஞரை மாற்ற கோரி கோகுல்ராஜின் தாயார் தொடர்ந்த வழக்கில் அரசு வழக்கறிஞரை மாற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது . இதன்பின்னர் அரசு வழக்கறிஞர் மாற்றப்பட்டு இந்த வழக்கானது 2019ம் ஆண்டு மே 5ம் தேதி முதல் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

நீதிமன்றத்தில் பலமான வரவேற்பு
கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட யுவராஜ் உள்ளிட்ட 15 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராக வரும் போது அவரது ஆதரவாளர்கள் பலத்த வரவேற்பு கொடுப்பதை வாடிக்கையாக வைத்திருந்தனர். நீதிமன்ற கூண்டில் நின்று விசாரணைக்கு பதில் கூறினாலும் எதைப்பற்றியும் அலட்டிக்கொள்ளாமல் சிரித்துக்கொண்டே பதில் சொல்லி விட்டு செல்வார் யுவராஜ்.

ஏழு ஆண்டு கால வழக்கு
கடந்த பிப்ரவரி மாதம் அனைத்து வழக்கு விசாரணை நிறைவு பெற்றதையடுத்து கோகுல்ராஜ் கொலை வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ளது. கடந்த 7 ஆண்டு காலமாக நடைபெற்று வரும் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகள் எனவும் தண்டனை விபரம் 8ஆம் தேதி அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 5 பேரை நீதிபதி விடுதலை செய்து உத்தரவிட்டார்.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்'












Click it and Unblock the Notifications