திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற குறுக்கு வழியை கையாண்டது ஏன்? இரு நீதிபதிகள் எழுப்பிய கேள்வி!
மதுரை: "திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தூணில் தீபம் ஏற்றியதற்கு ஆதாரங்கள் உள்ளதா? அனைத்து தரப்பு வாதங்களையும் தனி நீதிபதி கேட்டாரா? அவசர அவசரமாக உத்தரவு பிறப்பித்தது ஏன்? தீபம் ஏற்ற குறுக்கு வழியை கையாண்டது ஏன்?" என தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டில், மனுதாரர்களுக்கு இரு நீதிபதிகள் அமர்வு கேள்வி எழுப்பியது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்றும் தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராகத் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. நேற்று விசாரணையின்போது வாதாடிய வக்பு வாரிய வழக்கறிஞர், அந்தத் தீபத் தூண் சிக்கந்தர் தர்காவுக்குச் சொந்தமானது என்றும், அதனைச் சுற்றியுள்ள பாதைகள் முஸ்லிம்களுக்குச் சொந்தமான நிலங்கள் என்றும் வாதிட்டார்.

தனி நீதிபதியின் தீர்ப்பால் திருப்பரங்குன்றத்தில் பதற்றமான சூழல் நிலவுவதாகவும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று (டிசம்பர் 17) மீண்டும் விசாரணைக்கு வந்தது. திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பாக தனி நீதிபதி உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் இரு நீதிபதிகள் அமர்வு விசாரணையை தொடங்கியது.
திருப்பரங்குன்றம் தீபத் தூண் சிக்கந்தர் தர்காவுக்குச் சொந்தமானது. மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றி வந்த பழக்கம் இருந்ததில்லை, நெல்லித்தோப்பு பாதை உட்பட பல பகுதிகள் தர்கா நிலங்கள் என்று வக்பு வாரிய வழக்கறிஞர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வாதாடினார்.
தனி நீதிபதியின் உத்தரவு பதற்றமான சூழலை ஏற்படுத்தியுள்ளதாகவும், தர்காவுக்குச் சொந்தமான பாதை வழியாகச் சென்றால்தான் தீபம் ஏற்ற முடியும் என்பதால் சட்டம்-ஒழுங்குப் பிரச்சினை எழும் என்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்
மனுதாரர் ராம ரவிக்குமார் சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது. தனி நீதிபதியின் உத்தரவில் எந்த தவறும் இல்லை, உத்தரவை நிறைவேற்றுவது அரசின் கடமை; பொது அமைதி கெடும் என்பது சாக்குப்போக்கு என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபத் தூண் தர்காவிலிருந்து எவ்வளவு தொலைவில் உள்ளது, மலை உச்சிக்குச் செல்ல எத்தனை பாதைகள் உள்ளன, தூண் சர்வே தூணா அல்லது சமணர் காலக் கல் தூணா என்பது குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். தர்காவுக்குச் சொந்தமான நிலங்கள் தொடர்பான ஆவணங்களைத் தாக்கல் செய்யுமாறு வக்பு வாரியத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் நடைமுறை நூறு ஆண்டுகளுக்கும் மேலாக ஆகம விதிகளின் அடிப்படையில்தான் நடந்துவருகிறது. பொதுவாக அர்ச்சனைகள், பூஜைகளில் எப்படி தனி நபர்களின் தலையீடு இருக்கக் கூடாதோ, அதுபோல மலை மீது தீபமேற்றுவதும் ஆகம விதிகள் சம்பந்தப்பட்டது. இதனைத் தனி நபர் உரிமையாக கோர முடியாது. இந்த விவகாரத்தில் தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தக் கூடாது என இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என். ஜோதி வாதம் வைத்தார்.
தமிழ்நாடு தொல்லியல் ஆய்வுத் துறை வெளியிட்ட நூல் ஒன்றில் 'மலையில் பாதி தூரம் இறங்கி சென்றால் தீபத்தூண் ஒன்று இருப்பதை காணலாம். அது நாயக்கர் கால தீபத்தூண். அந்த தீபத்தூணில் அனுமான் உருவம் உள்ளது. அது ஆண்டவன் தலை மீது உள்ள தூண் என மக்கள் நினைக்கின்றனர். அங்கு விளக்கேற்றினால் நன்மை நடக்கும்' எனக் கூறப்பட்டுள்ளது. அந்த தூண்தான் உச்சிப் பிள்ளையார் கோயில் அருகேயுள்ள தீபத் தூண்.
இதைத் தவிர மலையில் உள்ள பிற தூண்கள் தீபத் தூண்கள் அல்ல. தற்போது தீபம் ஏற்றப்பட்டுவரும் தூணில் காலம் காலமாக தீபம் ஏற்றப்பட்டதற்கு பல்வேறு ஆதாரங்கள் உள்ளன. ஆனால் மனுதாரர் குறிப்பிடும் தூணில் தீபம் ஏற்றப்பட்டதற்கு எந்த ஆதாரமும் இல்லை என இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதங்களை வைத்தார்.
மனுதாரர் தரப்பில், "தற்போதைய நடைமுறையானது, கடந்த 100 ஆண்டுகளாகத்தான் கோவில் நிர்வாகம் உச்சிப் பிள்ளையார் கோவில் அருகே உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்றி வருகிறது. ஆனால், அதற்கு முன் எந்த இடத்தில் அவர்கள் தீபம் ஏற்றினார்கள் என்ற கேள்வி எழுகிறது. மேல்முறையீட்டு மனுதாரர்கள் தாங்கள் வாதங்களுக்குத் தேவையான ஆவணங்களையும், சான்றுகளையும் சமர்ப்பிக்கவில்லை" என்று வாதம் வைத்தனர்.
இதைத் தொடர்ந்து, "மலை உச்சியில் தூணில் தீபம் ஏற்றியதற்கு ஆதாரங்கள் உள்ளதா? அனைத்து தரப்பு வாதங்களையும் தனி நீதிபதி கேட்டாரா? அவசர அவசரமாக உத்தரவு பிறப்பித்தது ஏன்? தீபம் ஏற்ற குறுக்கு வழியை கையாண்டது ஏன்?" என இரு நீதிபதிகள் அமர்வு மனுதாரருக்கு கேள்வி எழுப்பியது. இதைத் தொடர்ந்து, மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
-
விஜய் அரசுக்கு அக்னி பரீட்சை.. திருப்பரங்குன்றம் தீபம் வழக்கில் நிலைப்பாடு என்ன? ஐகோர்ட் கேள்வி! -
திருச்செந்தூரில் தரிசன முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த போலீஸ்.. பக்தர்கள் பெரும் மகிழ்ச்சி -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications