Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மதுரை ஆதின மடத்தின் புதிய மடாதிபதி போட்ட 6 உத்தரவுகள் - பல்லக்கில் பட்டினபிரவேசம் செய்து ஆசி

மதுரை ஆதின மடத்தின் புதிய மடாதிபதி ஶ்ரீலஶ்ரீ ஹரிஹர ஶ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பல்லக்கில் சித்திரை வீதியில் பட்டினபிரவேசம் செய்து ஆசி வழங்கினார்.

Subscribe to Oneindia Tamil

மதுரை: ஆதின மடத்தின் 293 வது ஆதீனமாக பொறுப்பேற்றுக் கொண்ட ஸ்ரீ ல ஸ்ரீ ஹரிஹர தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் ஆறு முக்கிய உத்தரவுகளில் கையெழுத்து போட்டுள்ளார். 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பல்லாக்கில் அமர்ந்து பட்டினப்பிரவேசம் செய்து ஆசி வழங்கினார். பல்லாக்கில் பவனி வந்த ஆதீனத்திடம் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஆசீர்வாதம் பெற்று பிரசாதம் வாங்கிச் சென்றனர்.

மதுரை ஆதீனத்தின் 292வது மடாதிபதியாக இருந்த ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சார்ய சுவாமி உடல்நலக் குறைவால் கடந்த 13ஆம் தேதி முக்தி அடைந்தார். அதன்பின்னர், இளைய ஆதீனமாக இருந்த ஹரிஹர தேசிக பரமாச்சாரியர் மதுரை ஆதீனத்தின் 293வது ஆதீனமாக திங்கட்க்கிழமையன்று பொறுப்பேற்றார்.

2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 6 ஆம் தேதி முதல் இளைய ஆதீனமாக இருந்து வரும் சுந்தரமூர்த்தி தம்பிரானுக்கு ஶ்ரீலஶ்ரீ ஹரிஹர ஶ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் என பட்டம் சூட்டப்படிருந்தது. அருணகிரிநாதர் மறைந்த 10வது நாளில் நடக்கும் குரு பூஜையில் இளைய ஆதீனம், மரபுப்படி பீடத்தில் அமர்ந்து ஆதீன மடத்தின் பணிகளைத் தொடங்கியுள்ளார்.

நெல்லையில் பிறந்து மதுரை ஆதினமாக பொறுப்பேற்பு

நெல்லையில் பிறந்து மதுரை ஆதினமாக பொறுப்பேற்பு

மதுரை ஆதின மடத்தின் 293வது ஆதினமாக பொறுப்பேற்றுள்ள ஶ்ரீ ல ஶ்ரீ ஹரிஹர ஶ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் 1954ஆம் ஆண்டு மார்ச் 25ஆம் தேதி திருநெல்வேலி டவுனில் பிறந்தார். இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் பகவதி லட்சுமணன். தனது 21வது வயதில் துறவறம் ஏற்று குன்றக்குடி ஆதீனத்தில் 1975ஆம்ஆண்டு தம்பிரானாகப் பதவியேற்று, 2 ஆண்டுகள் சமயத் தொண்டு ஆற்றினார். பின்னர், தருமபுரம் ஆதீனத்தில் தம்பிரானாக 5 ஆண்டுகள் சமயத் தொண்டாற்றினார். அதனை தொடர்ந்து, திருவாவடுதுறை ஆதீனத்தில் 35 ஆண்டுகள் மூத்த தம்பிரானாக சமய, சைவத் தொண்டாற்றினார். அதன் பின்னர் அருணகிரி நாதரால் மதுரை ஆதீன மடத்தில் இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 ஆறு உத்தரவுகளில் கையெழுத்து போட்ட ஆதினம்

ஆறு உத்தரவுகளில் கையெழுத்து போட்ட ஆதினம்

ஆதின மடத்தில் நடைபெற்ற குருபூஜை விழாவில், தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் மடாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர், முதல் வேலையாக 6 உத்தரவுகள் அடங்கிய கோப்புகளில் கையெழுத்து போட்டுள்ளார். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தினமும், அதிகாலை நடைபெறும் முதல் பூஜையும், இரவு நடைபெறும் கடைசி பூஜையும் ஆதீன மடத்தின் சார்பில் நடத்தப்படுவது வழக்கம். ஆனால், முந்தைய ஆதீனமாக இருந்த அருணகிரி நாதர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த பணிகளை தொடராமல் கைவிட்டுள்ளார். அருணகிரி நாதருக்கும், அப்போதைய கோவில் நிர்வாகிகளுக்கும் ஏற்பட்ட முரண்பாடுகளால் அந்த பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டதாக மடத்தின் வட்டாரங்கள் தகவல் கூறுகின்றன. இன்று பொறுப்பேற்ற புதிய ஆதீனம் அந்த கட்டளை பணிகளை தொடர்ந்து நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

தினசரி அன்னதானம்

தினசரி அன்னதானம்

ஆதீன மடத்தில் தினமும் பூஜைகள் நடத்தப்பட்டு மடத்திற்கு வரும் அடியவர்கள், மக்களுக்கு அன்னதானம் வழங்குவதும் வழக்கம். இதனையும், கடந்த பல வருடங்களுக்கு மேலாக பின்பற்றாமல் இருந்துள்ளார் அருணகிரி நாதர். அந்த அன்னதான பணிகளையும் தினமும் தொடர்வதற்கு உத்தரவிட்டுள்ளார். வாரம் தோறும் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் மடத்தில் தேவார, திருவாசகம் நடத்தும் நிகழ்வுகளையும் தொடர உத்தரவிட்டுள்ளார்.

சொத்துக்கள் மீட்பு

சொத்துக்கள் மீட்பு

மதுரை ஆதீன மடத்திற்கு மதுரை மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் கடைகள், வீடுகள் உள்ளன. மேலும், தூத்துக்குடி, பழனி, திருவாரூர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உள்ளன. பல்லாயிரம் கோடி மதிப்புள்ள இந்த சொத்துக்கள் நெடுங்கால குத்தகை மற்றும் வாடகைக்கு கொடுக்கப்பட்டுள்ளன. அதில், பெரும்பாலும் வாடகை தொகை கட்டப்படாமலும், குத்தகை இடங்களில் தனி நபர் ஆக்கிரமிப்பும் அதிகரித்து உள்ளன. மதுரை ஆதீன மடத்தின் சொத்துக்களை முறையாக நிர்வகிப்பதில் முந்தைய ஆதீனம் தவறிய நிலையில், புதிய ஆதீனம் அவைகளை கணக்குப் பார்த்து மீட்டு பத்திரபடுத்தும் நடவடிக்கைகளை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.

5 கோவில்களில் குடமுழுக்கு

5 கோவில்களில் குடமுழுக்கு

மதுரை ஆதீன மடத்திற்கு சொந்தமான 5 கோவில்களில் குடமுழுக்கு பணிகளை நிறைவேற்றுவதற்கும், தினசரி பூஜைகளை தவறாமல் தொடர்வதற்கும் உத்தரவிட்டுள்ளார். முந்தைய ஆதீனமாக இருந்த அருணகிரி நாதர் அரசியல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் கவனம் செலுத்திய காரணத்தால், மடத்தில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை மற்றும் அத்தியாவசிய பணிகளை கவனிக்க தவறியுள்ளதாக கூறப்படுகிறது. இப்போது பொறுப்பேற்றுள்ள புதிய ஆதீனம் ஹரிஹர தேசிக பரமாச்சாரியர் பிறப்பித்து உள்ள இந்த உத்தரவுகள் ஆதீன மடத்தின் மரபுகளை காக்கும் என மடத்தின் வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றன.

பட்டினப்பிரவேசம்

பட்டினப்பிரவேசம்

புதிய ஆதினமாக பொறுப்பேற்றுக்கொண்ட ஸ்ரீ ல ஸ்ரீ ஹரிஹர தேசிக பரமாச்சாரிய சுவாமிகளை ஆதீன மடத்தின் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பல்லாக்கில் அமர வைத்து சன்னியாசிகள் , தம்பிரான்கள் , ஆதீன மட பணியாளர்கள் உள்ளிட்டோர் தூக்கிச் சென்றனர். இந்த பல்லாக்கு மதுரை ஆதீனம் மடத்தில் இருந்து ஊர்வலமாக சென்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி உள்ள சித்திரை வீதிகளில் உலாவந்து பின்னர் மதுரை ஆதீனம் மடம் வந்தடைந்தது. பட்டணப் பிரவேச நிகழ்வில் தருமபுர ஆதீனம் , கோவை காஞ்சிபுரி ஆதீனம் , என தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆதீனங்கள் தம்பிரான்கள் சன்னியாசிகள் பங்கேற்றனர்.

பக்தர்களுக்கு ஆசி

பக்தர்களுக்கு ஆசி

பல்லாக்கில் பவனி வந்த ஆதீனத்திடம் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஆசீர்வாதம் பெற்று பிரசாதம் வாங்கிச் சென்றனர். பல்லாக்கு ஊர்வலத்திற்கு முன்னர் கோயில் யானைகள் , ஒயிலாட்டம் , கரகாட்டம் , மேள தாளங்கள் முழங்க , நாதஸ்வர இசையில் நிகழ்ச்சியுடன் ஊர்வலம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மதுரை மாவட்டம் மட்டுமல்லாது அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+